பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள் LOOK AWAY TO JESUS பிரான்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா. டிசம்பர் 29, 1963 மாலை. 1. இயேசு வரும்போது எல்லாமே மாறிவிடும். அவர் இருளை உள்ளே வராதபடிக்கு அடைத்து விட்டு, வெளிச்சத்தை சிதறச் செய்கிறார். அதற்காக நாம் நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம். இதுவே பெக்கி முதன் முறையாக சபையில் பியானோ வாசிப்பதாகும். எனவே அது மிகவும் பொருத்தமான பாடல் - “இயேசு வந்த போது'' இன்றிரவு மறுபடியும் இங்கு உள்ளதற்காக நாங்கள் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். இன்று காலை நீங்கள் அதிக அளவில் வந்திருந்ததற்காக உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். இன்றிரவு...... இன்னும் சிறிது நேரத்தில் பேசுவதற்காக, ஒரு சிறு பொருளை வைத்திருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பாக, நான் சில அறிவிப்புகளை செய்யவேண்டும். என் தொண்டை சிறிது கரகரப்பாய் உள்ளது. அது அதிகமாக பேசுவதன் விளைவு என்று கருதுகிறேன். நான் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஒலிப்பதிவு செய்யும் போது, நீண்ட நேரம் பிரசங்கிக்கிறேன். மறுபடியும் நான் இங்கு வரும் போது; உலகம் முழுவதிலும் உள்ளவர்களுக்காக அது ஒலி நாடாவில் பதிவு செய்யப்படுகிறது. எனவே இன்று காலை நீங்கள் மிகவும் பொறுமையுடன் இருந்ததற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 2. இப்பொழுது ஒரு சில காரியங்களை கூற விரும்புகிறேன். நான் செய்த ஒன்றை மாற்றிக் கொள்ளலாமா என்று முதலாவதாக சபையை இன்றிரவு கேட்க விரும்புகிறேன். நான் புத்தாண்டு பொருத்தனைகள் செய்வதில்லை. நாளை நாங்கள் வீடு திரும்ப வேண்டும். எனவே புத்தாண்டு ஆராதனைக்கு நாங்கள் இங்கிருக்க மாட்டோம். ஆனால் உங்களை நாங்கள் நினைவு கூருவோம். புத்தாண்டு இரவு கூட்டம் ஒன்றிருக்கும் என்று கேள்விப்படுகிறேன். ஆம், அது உண்மை - அவர்கள் வழக்கமாக நடத்துவது போல் புத்தாண்டு விழிப்பு ஆராதனை, எங்களுக்கு தங்கிச் செல்ல விருப்பம் தான். ஆனால் பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு ஏற்ற நேரத்துக்குள் நாங்கள் வீடு திரும்ப முடியாது. என் மனைவி வேறு, துணிகளைச் சலவை செய்ய வேண்டும் (அது எப்படி என்று உங்களுக்கும் தெரியும்). கிறிஸ்துமஸ் சமயத்தில் நீங்கள் எங்களுக்கு செய்த அநேக நல்ல காரியங்களுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். எங்கள் வீட்டிற்கு சென்று உணவை சமைத்த பெண்களாகிய நீங்கள்; நாங்கள் அங்கு சென்ற போது, உணவு ஏற்கனவே சமைக்கப்பட்டு, உண்பதற்கு ஆயத்தமாயிருந்தது. உங்களுக்கு நிச்சயம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் தேவன் உங்களை எப்பொழுதும் ஆசிர்வதிப்பாராக. எனக்கு விருப்பமானால், நான் அங்கு சென்று சூட்டுக்கு துணி வாங்கிக் கொள்வதற்காக, சபை எனக்குக் கொடுத்த அந்த சீட்டுக்காகவும் நன்றி செலுத்துகிறேன். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் எனக்கு ஒரு 'சூட்டைக் கொடுப்பது வழக்கம். தயவுள்ள என் நண்பர்களில் சிலர் இப்பொழுது தான் எனக்கு ஒரு 'சூட்டை பொங்கிக் கொடுத்தனர். எனவே, உங்களுக்கு ஆட்சேபனை இல்லாமலிருந்தால், எனக்கு ஷர்ட்டுகள், பனியன்கள் போன்றவை அவசியமாய் உள்ளன. சபைக்கு ஆட்சேபனை இல்லையென்றால், அந்த பணத்திற்கு நான் இவைகளை வாங்கிக் கொள்கிறேன். இப்பொழுது சூட்' டைக் காட்டிலும் இவை எனக்கு அதிகம் தேவை. இப்பொழுது நமக்காக பாடின டூசானைச் சேர்ந்த இந்த வாலிபன் சகோ. ஜார்ஜ் ஸ்மித். நாங்கள் அவர்கள் சபைக்கு சென்று வந்திருக்கிறோம் - புதிய ஏற்பாடு பாப்டிஸ்டு சபை, அவனுடைய தகப்பனார் ஒரு மிஷனரி. அவருக்கு பழைய மெக்ஸிகோவில் ஏழு சபைகள் உள்ளன என்று நினைக்கிறேன். அங்கு சில அருமையானவர்கள் இருக்கின்றனர். அவனுடைய தகப்பனரும், தாயாரும், அவர்கள் எல்லாரும் அருமையானவர்கள். ஜார்ஜ் மிகவும் அருமையான வாலிபன். அவன் உட்காருவதற்கு முன்பு அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட கிறிஸ்துவின் இரட்சிப்பின் கிருபையைக் சாட்சியாக ஒரு வார்த்தை கூறாதது எனக்கு வருத்தம் விளைவித்தது. இப்பொழுது, செய்திகள் - நான் வெளியே கூட்டங்களுக்கு செல்வதற்கு முன்பு, இங்கு வந்து செய்திகளை முதலில் ஒலிப்பதிவு செய்து விட்டு, பிறகு வெளியே செல்வேன் என்று நான் அண்மையில் இங்கு வாக்கு கொடுத்திருந்தேன், ஜனங்களுக்கு ஒலி நாடாக்களை அனுப்ப வேண்டும் என்பதற்காக, நான் இங்கு வந்து ஒரு செய்தியை ஒலிப்பதிவு செய்து அதன் பிறகு வெளியே சென்று அந்த செய்தியை பிரசங்கம் செய்வேன். அது ஜனங்களுக்கு ஒரு தருணம். ஒலி நாடா பதிவு செய்பவர்கள் ஒலிப்பதிவு செய்து விட்டு, நாங்கள் சொல்லும் போது அதை எங்களுடன் கொண்டு செல்லலாம். 3. சுவிசேஷ பயணத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக, நான் இவ்விடம் விட்டு செல்ல எத்தனித்துள்ளதால், இப்பொழுது முதல் அதை என்னால் செய்ய முடியாது, பாருங்கள். ஒலி நாடாக்களை பதிவு செய்பவர்கள், எங்களுடன் சென்று ஒலிப்பதிவு செய்து கொள்ள வேண்டும், நான் நினைக்கிறேன்... இந்த வாரம் ஒலி நாடாக்களைக் குறித்து ஒரு கூட்டம் இருக்கிறதல்வா-? சகோ.சாத்மன் இங்கிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் சகோ. மக்கையரின் பிரதிநிதியாவார். அவர் இங்கிருக்கிறாரா இல்லயா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சகோ. ஃபிரட் சாத்மன் இங்கிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் இங்குள்ளதாக யாரோ ஒருவர் என்னிடம் கூறினார். இந்த வாரம் அவர்கள் ஒலி நாடாக்களைக் குறித்து ஒரு கூட்டம் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் (ஒருக்கால் நாளை இரவு, அல்லது வேறேப்போழுதாகிலும்). அன்றெரு இரவு அறையில் அதைக் குறித்து உரையாடினோம். ஏதோ ஒன்றிற்காக சமயம் வந்து விட்டதென்று நினைக்கிறேன். அவர்கள் அதை ஒலிப்பதிவு செய்வதற்காக ஒழுங்கு செய்வார்கள். எனவே இப்பொழுது முதல், கூடாரத்தில் பிரசங்கிக்காத செய்திகளை வெளியே நடக்கும் கூட்டங்களில் ஒருக்கால் அளிப்பேன். 4. இப்பொழுது சகோ.பிளேர் அவர்களின் சாட்சிக்காக தேவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டு இருக்கிறேன். சகோ., சகோதரி பளேர் இருவரும் இங்கு உட்காந்திருக்க நேர்ந்துள்ளது - இங்கு சரியாக எங்களுக்கு முன்னால் அந்த சிறு பையனை வைத்திருப்பவர். இப்பொழுது கவனியுங்கள், காத்தர் என்னிடம் கூறினபோது ...... சகோ. பிளேர் அதிக துயரம் கொண்டு அழுதார். அவருடைய சிறு மகன்; கார் தலைகீழாக புரண்ட காரணத்தல், அவனுடைய முகம் நசுங்கி விட்டது. அவனுடைய நிலமை மிகவும் மோசமாயிருந்தது. நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது, அந்த சிறுவன் நன்றாக உள்ளதை கண்டேன் சகோ. பிளேர் என்னிடம், ''சகோ. பிரான்ஹாமே, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதா-?' என்று கேட்டார். ''நான், ''சகோ, பிளேர், அது கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பது தான்'' என்றேன். சகோ.பிளேர் இன்றிரவு இங்குள்ளார். சகோ.பிளேர் நம்முடன் இருப்பதற்காக நாங்கள் நிச்சயம் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். அவர் சிறிது நரம்பு தளர்ச்சி தொல்லையினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அண்மையில் சாத்தான் அவருக்கு ஒரு பெரிய அடியைக் கொடுத்து, அவருக்கு என் மேல் அவநம்பிக்கை உண்டாக்க முயன்றான். சாத்தான் அவ்வாறு செய்து கொண்டிருந்த போது, கர்த்தர் தாமே வந்து அவருக்கு அதை வெளிப்படுத்தி, அதைக் குறித்து அவரிடம் கூறினார் - அப்படிப்பட்ட ஒரு நேரம் வருவதற்கு முன்பு அதை விலக்கி விட. சகோ.பிளேர் அருமையானவர், அவரை நீங்கள் உங்கள் ஜெபங்களில் நினைவு கூற வேண்டுமென்று விரும்புகிறேன். அவருக்கு என்ன செய்வதன்று தெரியாமல், கருத்துக்களின் இடையே சிக்கிக் கொண்டிருக்கிறார். எந்த பக்கம் திரும்புவதென்று அவருக்குத் தெரியவில்லை. சகோ.பிளேர், நான் நம்புகிறேன், தேவன் - நீங்கள் கிறிஸ்துவின் மகத்தான ஊழியர். நீங்கள் செய்வதற்கு தேவன் நிறைய காரியங்களை வைத்துள்ளார், ஏனெனில் விளக்குகள் மங்கிக் கொண்டிருக்கின்றன. இன்று காலை வந்திருந்தீர்களா-? மிகவும் நல்லது. 5. அடுத்த முறை உங்களை நான் சந்திக்க நேரிடும் போது ஒருக்கால் அது வசந்த காலத்தின் போது சிறிது நேரம் இருக்கும் - ஜெபர்ஸன்வில்லில் நாங்கள் கூட்டங்கள் வைப்போமா இல்லையா என்பதை ஒருக்கால் அறிந்திருப்போம் என்று கருதுகிறேன்; அந்த சமயத்தில் நான் நார்வேயிலும் ஸ்கான்டி நேவியன் நாடுகளிலும் இருக்க வேண்டியவன். இப்பொழுது, பேசுவதற்காக ஒரு பொருளை நாம் தெரிந்து கொள்வதற்கு முன்பு - ஏனெனில் ஜெபவரிசை வரப்போகிறது. அநேகர் அறைகளிலும் சுவர்களைச் சுற்றிலும் நின்று கொண்டு இருக்கின்றனர், அது உங்களுக்கு மிகவும் கடினமாயுள்ளதென்று அறிவேன். நானும் அவ்வாறு அநேக முறை நின்றிருக்கிறேன் சற்று முன்பு நான் மனைவியைக் கூட்டிக் கொண்டு அந்த வழியாக கடந்து வந்தேன். ஜனங்கள் கதவுகளின் அருகில் நின்று கொண்டிருப்பதை கவனித்தேன். அப்பொழுது நான், “சுவிசேஷமானது உலகிலேயே மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக இப்பொழுது அமைந்திருக்கவில்லை என்று யார் கூறமுடியும்-?" என்று நினைத்துக் கொண்டேன், நிச்சயமாக அது கவர்ச்சிகரமாக உள்ளது. அதில் சிரத்தை கொண்டவர்களை அது கவர்கின்றது. அதில் சிரத்தை இல்லாதவர்களுக்கு அது அப்படி அமைத்திராது. ஆனால் இயேசு, "நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்'' என்றார் (யோவான் 12:32). அது எவ்வளவு உண்மையாக உள்ளது. அங்கு நான் அடையும் போது, கூறவேண்டியவை அதிகமாயிருக்கும். இங்கு சிறிது நேரம் பேசுவதற்காகவே நான் குறித்துக் கொள்ள வேண்டியதாயுள்ளது, இல்லையெனில் நான்..... கூறுவதற்கு அதிகமாயுள்ளது, சொல்ல வேண்டியவைகளை நான் மறந்து விடுகிறேன். 6. சகோ. உன்கிரனின் தந்தை இன்று காலை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதாக கேள்விப்பட்டேன். சகோதரி உன்கிரனும் மற்றவர்களும் இங்கிருக்க நேர்ந்தால், இது அவர்களுக்கு ஒரு பெரிய காரியம் என்று நான் உறுதி உள்ளவனாய் இருக்கிறேன். ஏனெனில் அதுவே அவர்கள் அநேக ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வந்த ஜெபமாகும். சகோ. உன்கிரனே, நீங்கள் எங்கிருந்தாலும், தேவன் அபரிமிதமாக உங்களை ஆசிர்வதிப்பாராக, என் சகோதரனே. அந்த ஞானஸ்நானம் சரியாக இராவிடில், நியாயத் தீர்ப்பு நாளில் அதற்காக தேவன் என்னை பதில் கூற வைப்பாராக. அது சரியென்று எனக்குத் தெரியும். அதற்கான உத்திரவாதத்தை நான் எடுத்துக் கொள்கிறேன். அது முற்றிலும் உண்மை , ஏனெனில் அது சத்தியமாயுள்ளது. ''அதிலும் ஏதாகிலும் வித்தியாசம் உண்டா-?'' என்று நீங்கள் கேட்கலாம். அது பவுலுக்கு வித்தியாசத்தை உண்டு பண்ணினது. அவர்கள் எந்த விதமான ஞானஸ்நானம் பெற்றனர் என்று கேட்கப்பட்ட போது, அவர்கள் ஏற்கனவே இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்து அந்த மனிதனிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதாக பதிலளித்தனர். அவர்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞனஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று பவுல் கூறினான், வேதத்தில் ஒரு நபர் கூட பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. ரோமாபுரியின் நிசாயாவில் நடந்த நிசாயா ஆலோசனை சங்கத்தின் போது கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்பட்டது. அது வரைக்கும், எவருமே இந்த விதமாக ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. அப்பொழுது தான் முதலாம். பட்டங்களை உபயோகித்து ஞானஸ்நானம் பண்ணப்பட்டார். அன்றொரு நாள் ஒருவர் என்னிடம் கூறினார்..... நான், "நல்லது. இயேசுகிறிஸ்துவே ...' என்றேன். அது அவருடைய நாமம். அவர் , "நல்லது....' என்றார். நான், "ஒருவர் உங்களிடம் வந்தால்......" என்றேன். அவர், அதனால் எந்த வித்தியாசமும் இல்லை'' என்றார். (நான் அவருடைய உபதேசதைக் கொண்டே அவரை மடக்கினேன். நான், ஒருவர் உங்களிடம் வந்து, 'நான் சாரோனின் ரோஜா', பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம், விடிவெள்ளி நட்சத்திரம் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டேன்' என்பாரானால், அதற்கு நீங்கள் 'ஆமென்' என்று கூறுவீர்களா'' என்று கேட்டேன். அவர், 'இல்லை , ஐயா என்றார். நான், "நீங்கள் அவருக்கு மறுபடியும் ஞானஸ்தானம் கொடுப்பீர்களா-?'' என்றேன். அவர், ''ஆம், ஐயா'' என்றார். நான், "அவருக்கு எந்த விதத்தில் ஞானஸ்நானம் கொடுப்பீர்கள்-?' என்று கேட்டேன். அவர், ''நான் - அவருக்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின், நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பேன்' என்று விடையளித்தார். நான், நானும் அப்படித் தான் ஞானஸ்தானம் கொடுப்பேன் - பிதா, குமாரன், ஆவியின் நாமத்தில். சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கன் லீலிப் புஷ்பம், விடிவெள்ளி நட்சத்திரம் ஆகியவை நாமம் அல்ல'' என்றேன். அவர், 'அது உண்மை , அவை பட்டப் பெயர்கள் என்றார். நான், "பிதா, குமாரன், பரிசுத்த, ஆவியும் கூட பட்டப்பெயர்களே' என்றேன். 7. நான், ''அவர்களுக்கு நான், "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; பிதா, குமாரன்', பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதே. அது முற்றிலும் உண்மை என்று அவரிடம் கூறினேன். அவர் அதை புரிந்து கொண்டார். அவர் தான் சிக்காகோவைச் சேர்ந்த ஜோசப் மாட்சன் போஸ் என்பவர். நான் உடைத்தவர்களிலேயே அவர் தான் மிகவும் கடினமானவர். நான் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் போது, 300 அல்லது 400 சுதேசிகளுக்கு நான் மறுபடியும் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டியிருக்கும். இப்பொழுது... சுவிசேஷ ஒளிக்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இயேசு இவ்வுலகில் இருந்தபோது, “நான் கேட்கிறதையே பேசுகிறேன் என்றார். நான் என் பொருளை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக - அது மிகவும் சிறிய பொருளாயிருக்கும் - நான் 10 அல்லது 15 நிமிடங்களுக்குப் பேசப்போகின்றேன். பிறகு நாம் ஜெப வரிசையை அமைப்போம். நான் ஒன்றை கூறவேண்டிய நிலைக்கு என் ஊழியத்தில் வந்துள்ளேன். இயேசு என்ன காதுகளில் கேட்டாரோ, அதையே அவர் பேசினதாக அவர் கூறினார். அவர், ''நான் உங்களை சிநேகிதர் என்றேன்" என்றார். (யோவான் 15:15), ஒரு சிநேகிதன் அவனுடைய சிநேகிதனிடம் எல்லாவற்றையும் கூறி விடுவான். பவுல், ''தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல் எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்'' என்று அப்; 20:26ல் கூறியுள்ளான். நானும் இன்றிரவு அந்த முன் காலத்து மகத்தான பரிசுத்தவானுடன் சேர்ந்து, எனக்குத் தெரிந்த வரையில், தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் மறைத்து வைக்காமல் எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன் என்று கூற விரும்புகிறேன். 8. அன்றொரு நாள் யாரோ ஒருவர் செய்தியடங்கிய ஒலி நாடாக்களை கேட்டுக் கொண்டிருந்தாராம். அது வேறொவருக்கு கோபமூட்டினபடியால், அவர்கள் ஜன்னலின் வழியாக அவர்களை சுட்டார்களாம், அப்பொழுது ஒரு ஸ்திரீ காயமடைந்தாள், எனவே என்றாவது ஒரு நாள் நானும் ஒருக்கால் என் சாட்சியை முத்தரிப்பேன்... அந்த நேரம் வரும் போது, நான் செல்ல ஆயத்தமாயிருப்பேன், என் நேரம் வரும் வரைக்கும் எதுவுமே என்னை பாதிக்க முடியாது. வேதம் எவ்வாறு எழுதப்பட்டுள்ளதோ, அதே சுவிசேஷத்தில் நாம் நம்பிக்கை கொண்டு உள்ளோம். அது சரியாக குறிவைக்கப்பட்டுள்ளது. ஒரு துப்பாக்கியை சரியான குறிக்காக அமைத்திருப்போமானால், அது முதன் முறை குறியை சுட்டால் இராண்டாவது முறையும், ஒவ்வொரு முறையும் குறியை தவறாமல் சுடவேண்டும். ஒரு மரத்தில் (திராட்சை) கிளை வளர்ந்து, அந்த கிளை ஒரு குறிப்பிட்ட கனியைக் கொடுக்குமானால், அடுத்த முறை அந்த திராட்சை செடியில் கிளை வளரும் போது, அது அதே விதமான கனிகளைக் கொடுக்கும். இயேசு திராட்சை செடி, நாம் கொடிகள். அந்த திராட்சை செடியில் வளர்ந்த முதலாம் கிளை (சபை) - அவர்கள் அதைக் கொண்டு அப்போஸ்தலர்களின் நடபடிகளின் புத்தகம் ஒன்றை எழுதினர். அந்த முதலாம் கிளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தது. அவர்களுடைய மத்தியில் அவர்கள் ஜீவனுள்ள தேவனைப் பெற்றிருந்தனர். அவர் பூமியிலிருந்த போது புரிந்த அதே கிரியைகளை அவர்கள் மத்தியில் செய்தார். எனவே சீஷர்கள் படிப்பறியாதவர்களும் பேதமை உள்ளவர்களாயும் இருந்த போதிலும், ஜனங்கள் அவர்களைக் கவனித்து வந்து, அவர்கள் இயேசுவுடன் கூட இருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டார்கள். ஏனெனில் அவருடைய ஜீவன் அவர்கள் மூலமாய் வெளிப்பட்டது. 9. நான் ஏற்கனவே கூறினபடி, எனக்குள் பீத்தோவனின் ஆவி இருக்குமானால், நான் பாடல்கள் எழுதுவேன். பீத்தோவன் எனக்குள் ஜீவிப்பாரானால், நான் பீத்தோவனாயிருப்பேன், பாருங்கள். ஷேக்ஸ்பியர். எனக்குள் ஜீவிப்பாரானால், நான் ஷேக்ஸ்பியராக இருப்பேன்; நான் நாடகங்களையும் செய்யுள்களையும் எழுதுவேன். கிறிஸ்து எனக்குள் ஜீவிப்பாரானால், கிறிஸ்து செய்த கிரியைகளை நானும் செய்வேன். அது அப்படித் தான் இருக்க வேண்டும். கிறிஸ்து என்றால் என்ன-? வார்த்தை. அவர், “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ, அது உங்களுக்குச் செய்யப்படும்'' என்றார் (யோவான் 15:7). ஏனெனில் அங்குள்ள வார்த்தைக்கு வெளிச்சம் மாத்திரம் அவசியமாயுள்ளது. அந்த வெளிச்சம் அதை ஜீவிக்கச் செய்கிறது. எனவே, இப்பொழுது, நான் இதுவரை கூறாத ஒன்றை உங்களிடம் கூறப் போகிறேன். இவ்வளவு காலமாக, இத்தனை ஆண்டுகளாக இதையே நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம்- நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக, அல்லது அதற்கும் அதிகமாக. மூன்றாம் இழுப்பு இப்பொழுது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது, அது என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரியுமென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். 10. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அதை யாருமே பாவனை செய்யமாட்டார்கள், அது பாவனை செய்யப்பட முடியாது. அது இப்பொழுது இருந்து வருகிறது, இதைக் குறித்து நான் எச்சரிக்கப்பட்டுள்ளேன்.... வெகு விரைவில் - இந்த நேரத்தில் தானே, இப்பொழுது தான் அது நிகழ்ந்தது. எனவே உங்கள் மத்தியில் அதன் பிரசன்னத்தை அது அடையாளம் காண்பிக்க முடியும். பாருங்கள்-? ஆனால் உலக சபைகள் ஆலோசனை சங்கம் நெருக்கத்தைக் கொண்டு வரும் வரைக்கும், அது பெரிதான வழியில் உபயோகப்படுத்தப்படாது. அது அப்படி செய்யும் போது... பெந்தெகொஸ்தேயினர் போன்றவர்கள் எதை வேண்டுமானாலும் ஏறக்குறைய பாவனை செய்ய முடியும். ஆனால் அந்த நேரம் வரும்போது (அந்த இறுக்கம் வரும் போது), நீங்கள் தற்காலிகமாக கண்டு வந்தது அதன் முழு வல்லமையுடனும் வெளிப்படுவதைக் காண்பீர்கள். எனக்கு முதலில் கட்டளை கொடுக்கப்பட்ட பிரகாரம், நான் சுவிசேஷ ஊழியத்தை தொடர்ந்து செய்யவேண்டும், நான் தொடர்ந்து செய்ய வேண்டும். உங்களுக்கு வார்த்தை அளிக்கப்பட்டு விட்டது. நீங்கள் எதை எதிர்நோக்கி இருக்க வேண்டுமென்றும், எப்படி நிற்க வேண்டுமென்றும் உங்களுக்குத் தெரியும். நான் சுவிசேஷ ஊழியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும். என் நண்பர்களே, அமைதியாயிருந்து, முன்னேறிச் சென்று கொண்டிருங்கள். ஏனெனில் ஏதோ ஒன்று நடக்கப் போகும் அந்த மணி நேரம் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. 11. சில சிறு வினோதமான காரியங்கள் நடப்பதை நீங்கள் ஒருக்கால் காணலாம்.--பாவமான எதுவும் அல்ல அந்த அர்த்தத்தில் நான் கூறவில்லை - வழக்கமான போக்குக்கு வினோதமான ஒன்று என்னும் அர்த்தத்தில் கூறுகிறேன். ஏனெனில் இந்த ஊழித்தில் நான் அடைந்துள்ள நிலையில், நான் பின்னடைந்து, அந்த இடத்தை கவனித்து, அதை உபயோகிப்பதற்கான நேரத்துக்காக காத்துக் கொண்ருக்கிறேன். ஆனால் அது உபயோகிக்கப்படும்-! அது எல்லோருக்கும் தெரியும். முதலாவது எவ்வளவு நிச்சமாக அடையாளம் கொள்ளப்பட்டதோ, அதே விதமாக இரண்டாவதும் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது. ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் ஆழ்ந்து சிந்தித்தால், (வேதம் கூறுவது போல் இதிலே ஞானம் விளங்கும் -- வெளி. 13:8) மூன்றாவதும் கூட சரிவர அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு விட்டது. அது எங்குள்ளதென்று நாமறிவோம். எனவே மூன்றும் இழுப்பு இங்குள்ளது. 12. அது மிகவும் புணிதமானதால், அவர் துவக்கத்தில் என்னிடம் கூறினது போன்று, அதைக் குறித்து நான் அதிகம் கூற கூறக்கூடாது. அவர், 'இதை குறித்து ஒன்றும் கூறாதே'' என்னிடம் கூறினார் உங்களுக்கு அது ஞாபகமுள்ளதா, அநேக ஆண்டுகளுக்கு முன்பு-? அது தனக்காகவே பேசிக் கொள்கிறது. ஆனால் நீங்கள்...... நான் மற்ற இரன்டையும் விளக்கிக் கூற முயன்றேன், நான் தவறு செய்து விட்டேன். என் அபிப்பிராயப்படி இதுதான் (கர்த்தர் என்னிடம் இதை கூறுகிறார் என்று நான் சொல்லவில்லை; இது தான் செல்ல வேண்டியதற்காக எடுக்கப்படுதலுக்கேற்ற விசுவாசத்தை '' துவக்கும். நான் சிறிது காலம் அமைதியாயிருக்க வேண்டும். இப்பொழுது கவனியுங்கள் (இந்த ஒலிநாடாவைக் கேட்கிறவர்களே), உடனடியாக என் ஊழியத்தில் மாறுதல் ஏற்பட்டு, அது பின்னடைவதை நீங்கள் காணலாம் - முன்னேற்றமல்ல, பின்னடைதல். அந்த காலத்தில் இப்பொழுது நாம் இருக்கிறோம், அது இனியும் மூன்னேற முடியாது. எடுக்கொள்ளப்படுவதற்காக இது நிகழும் வரை, நாம் ஒரு நிமிடம் காத்திருக்க வேண்டும். அப்பொழுது அந்த நேரம் வரும். அனால் அது முற்றிலுமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு விட்டது. ஒரு நேரம் வரப்போகின்றது ... அப்பொழுது இந்த தேசம், மிருகம் முன்பு வகித்திருந்த எல்லா அதிகாரத்தையும் (அதாவது அஞ்ஞான ரோமபுரி போப்பாண்டவரின் ரோமாபுரியான போது) இது செலுத்தப்போகின்றது. இந்த தேசம் அதை செய்யும். வெளிப்படுத்தல் 13 அதை வெளிப் படையாக விளக்குகின்றது. ஆட்டுக்குட்டி பூமியிலிருந்து எழும்பி மேலே வந்தது. மற்ற மிருகம் தண்ணீரிலிருந்து எழும்பி மேலே வந்தது. தண்ணீர் திரளான ஜனங்களைக் குறிக்கின்றது. இந்த ஆட்டுக்குட்டியோ ஜனங்கள் இல்லாத இடத்திலிருந்து மேலே வந்தது. 13. ஆட்டுக்குட்டி என்பது ஒரு மதத்தைக் குறிக்கிறது தேவாட்டுக்குட்டி. அது ஆட்டுக் குட்டியைப் போல் பேசினது என்று ஞாபகம் கொள்ளுங்கள். அது ஆட்டுக்குட்டியாயிருந்தது, ஆனால் அது வல்லமையைப் பெற்றுக் கொண்ட பிறகு வலுசர்ப்பத்தைப் போல் பேசி, அதற்கு முன்பிருந்த வலுசர்ப்பத்தின் அதிகாரம் அனைத்தையும் செலுத்தினது. வலுசர்ப்பம் எப்பொழுதுமே ரோமாபுரிக்கு அடையாளம். எனவே உங்களால் காண முடியவில்லையா: ரோம ஸ்தாபனம், முத்தரிக்கப்பட்ட பிராடெஸ்டெண்டு ஸ்தாபனம், மிருகத்துக்கு சொரூபம். எல்லா பிராடெஸ்டெண்டுகளையும் ஒரு ஐக்கியத்தில் சேரும்படி வலுக்கட்டாயப்படுத்த அது வல்லமையைப் பெற்றிருக்கும். நீங்கள் சபைகளின் ஆலோசனை சங்கத்திற்குள் இருக்க வேண்டும், இல்லையேல் உங்களால் ஐக்கியங் கொள்ளவோ, அல்லது... இப்பொழுது ஏறக்குறைய அவ்விதமாகவே உள்ளது. நீங்கள் ஐக்கியச் சீட்டையோ அடையாளச் சீட்டையோ பெறாமல் ஒரு சபையில் சென்று பிரசங்கம் செய்ய முடியாது. இப்பொழுது முதல் என்னைப் போன்றவர்கள் முழுவதுமாக தள்ளப்படுவார்கள். இது முற்றிலும் உண்மை. ஏனெனில் அவர்களால் அதை செய்ய முடியாது. அது இறுக்கமடைந்து வருகிறது. பிறகு அந்த நேரம் வரும் போது, இறுக்கமானது உங்களை இறுக்கி வெளியே தள்ளும் நிலையை அடையும்போது, அப்பொழுது கவனியுங்கள் (இன்னும் சில நிமிடங்களில் உங்களிடம் கூற எத்தனித்துள்ளதை) அப்பொழுது மூன்றும் இழுப்பை கவனியங்கள். அது முற்றிலும், முழுவதுமாக இழக்கப்பட்டவர்களுக்காக இருக்கும், ஆனால் அது மணவாட்டிக்கும் சபைக்கும் இருக்கும். 14. நாம் நினைத்ததைக் காட்டிலும் அருகாமையில் இருக்கிறோம். அது எப்பொழுது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது மிக, மிக அருகாமையில் உள்ளது. வேறொருவர் ஏறுவதற்காக நான் ஒருக்கால் மேடையைக் கட்டிக் கொண்டிருக்கலாம். அந்த நேரத்துக்கு முன்பு நான் எடுக்கப்படலாம். எனக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்து இயேசுவைக் கொண்டு வரும் அந்த நேரம் அடுத்த வாரமாயிருக்கலாம். இவர் அடுத்த வாரம் வரக்கூடும். இன்றிரவும் அவர் வரக்கூடும். அவர் எப்பொழுது வருவாரென்று எனக்குத் தெரியாது. அவர் அதை நம்மிடம் கூறுவதில்லை. ஆனால் நாம் மிக அருகாமையில் இருக்கிறோம் என்றும், நான் முதிய வயதின் காரணமாக மரிக்க மாட்டேன் என்றும் நம்புகிறேன். எனக்கு 54-வயதாகியும் கூட, நான் முதிய வயதில் மரிக்க மாட்டேன், அதற்குள் அவர் இங்கிருப்பார், நான் சுடப்பட்டு, கொல்லப்பட்டு, அல்லது வேறெந்த வழியில் கொல்லப் பட்டாலொழிய - முதிய வயது என்னைக் கொல்லாது. அதற்குள் அவர் வந்து விடுவார். அதை நான் நம்புகிறேன்... இதை நான் கூற விரும்புகிறேன், இதை முன்பு நான் கூறினதில்லை, ஆனால் வேதவாக்கியங்களின்படி, 30 ஆண்டுகளுக்கு முன்பு, 33 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அங்குள்ள நதியண்டை என்னிடம் கூறினவிதமாக (1933ம் ஆண்டில்) எல்லாமே அப்படியே நிறைவேறி விட்டது. ஒருக்கால் நான் அதை செய்ய மாட்டேன், ஆனால் இந்த செய்தியானது இயேசுவை உலகிற்கு அறிமுகப்படுத்தும். ''யோவான் ஸ்நானன் அவருடைய முதலாம் வருகைக்கு முன்னோடியாய் அனுப்பப்பட்டது போல இந்த செய்தியும் அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடியாய் இருக்கும்'' யோவான், "இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' என்றான் (யோவான் 1:29). எனவே எல்லா வகையிலும் அது இணையாக உள்ளது, அது அப்படியிருக்குமென்று எனக்குத் தெரியும். செய்தியானது போய்க் கொண்டிருக்கும். இப்பொழுது, பாதையில் சில பெரிய காரியங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்று காலை நான் இங்குள்ள அறையில் பேட்டிகள் நடத்திக் கொண்டிருந்தேன், அப்பொழுது ஆட்ரி என்னும் பெயருடைய ஒரு வாலிபன் அவன் ஒருக்கால் இன்றிரவு இங்கிருக்கலாம். அவன் டெக்ஸாஸிலுள்ள சான் ஆன்டோனியாவைச் சேர்ந்தவன். நாங்கள் எப்பொழுது கலிபோர்னியாவிலிருந்து டல்லாஸுக்குச் செல்லப் போகிறோமென்றும் இப்பொழுது ஒரு இரவு மாத்திரம் அவர்களுடைய கூடாரத்துக்கு நாங்கள் வர முடியுமா-? என்றும் அவன் எங்களைக் கேட்டான். அப்படி நம்மால் செய்ய முடியுமாவென்று அவர்கள் ஒரிரண்டு நாட்களில் பரிசீலனை செய்து கூறி விடுவார்கள். அவன் என்னிடம் இதைக் குறித்து - அந்த முதல் கூட்டத்துக்கு பிறகு நான் சான்-ஆன்டோனியோவுக்கு சென்றதே இல்லை. 15. அந்த முதல் கூட்டத்துக்காக நான் சான்-ஆன்டோனியோவுக்கு சென்றிருந்த போது, இங்கு சகோ.கூட்ஸ் அவர்களுடனும் சர்வதேச வேதாகம் பள்ளியுடனும் இருந்தேன் என்று நினைக்கிறேன். நாங்கள் ஆராதனை நடத்தின அரங்கத்தின் பெயர் மறந்து விட்டது. அது முதலாம் இரவோ, இரண்டாம் இரவோ (முதலாம் இரவு என்று நினைக்கிறேன்), நான் மேடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, யாரோ ஒருவர் கட்டிடத்தின் பின்னால் இருந்து எழுந்து நின்று, மெஷின் துப்பாக்கியால் சுடுவது போன்று அந்நிய பாஷை பேசினார். அவர் உட்கார்ந்து ஓரிரண்டு வினாடிகளுக்குள், வேறொருவர் மேடையின் மேல் எழுந்து நின்று அதற்கு அர்த்தம் உரைத்தார். அவர் கூறினதைக் கேட்டேன்". நான் அவரிடம், " அந்த மனிதனை உமக்குத் தெரியுமா-?'' என்று கேட்டேன் அவர், ''இல்லை , ஐயா'' என்றார். நான் ''நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்-?'' என்றேன். அவர், "நான் யாருக்காக வேலைசெய்கிறேனோ, அவர்கள் இன்றிரவு இங்கு வந்கிருக்கிறார்கள், அவர்கள் என்னை அழைத்து வந்தார்கள்'' என்றார் (அவர் மாடு மேய்ப்பவர் ). நான் மற்றவரிடம், ''நீங்கள் என்ன செய்கிறீர்கள் -? அவரை உங்களுக்குத் தெரியுமா-?'' என்று கேட்டேன். அவர், ''இல்லை, ஐயா, அவரைப் பார்த்ததே இல்லை' என்றார் . நான் “உங்கள் தொழில் என்ன-? "என்று கேட்டேன்". அவர் பட்டினத்தில் வியாபாரியாக இருக்கிறார், அவர்கள் கூறினது..... நான் எப்பொழுதுமே.... நான் நன்கு கற்பதற்கு முன்பு, அந்நிய பாஷை பேசுவதைக் குறித்து சற்று சந்தேகம் கொண்டவனாயிருந்தேன். அது பெரும் பாலும் மாமிசம் என்று கருதினேன், அது ஒருக்கால் அப்படி இருக்கலாம். ஆனால் அங்கு அந்நிய பாஷை பேசப்பட்டு, அதற்கு அர்த்தம் உரைக்கப்பட்ட போது, அதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு நதியில் கர்த்தருடைய தூதன் உரைத்ததே அது: ''கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு யோவான் ஸ்நானன் முன்னோடியாய் அனுப்பப்பட்டது போல, இரண்டாம் வருகைக்கு நீ முன்னோடியாய் அனுப்பப்பட்டிருக்கிறாய்.'' அது அங்கு அளிக்கப்பட்டது. அந்த தூதன், அந்த ஒளி - சபையாலும், வார்த்தையாலும், விஞ்ஞானத்தாலும், எல்லாவற்றாலும். முற்றிலுமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட அந்த ஒளி- பகல் சுமார் 2 மணி அளவில், பாலத்துக்கு கீழே, இங்கே ஸ்பிரிங் தெருவில் கீழுள்ள தண்ணீரில், நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மேலே, முதன் முறையாக பொது ஜனங்களின் மத்தியில் பகிரங்கமாக பிரத்தியட்சம் ஆனது. அது கூறினதில் ஒரு அணுவும்கூட பிசகாமல் அப்படியே நிறைவேறினது. 16. இங்கிருந்த அந்த சகோதரன், தன் சபையைச் சேர்ந்திராத ஒரு பெண்ணை - சகோதரி நாயிட்டின் மகளை - விவாகம் செய்து கொண்டதாக இன்று காலை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அந்த வாலிபன் இங்கிருக்கிறனா என்று தெரியவில்லை... சகோ. ஆட்ரி, இங்கிருக்கிறாயா-? எனக்குத் தெரியவில்லை. அவன் சான்-ஆன்டோனியோவைச் சேர்ந்தவன். அவன் இங்கிருக்கிறானா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. இன்று காலையில் அவன் இங்கிருந்தான். அவனுடைய பாட்டனார் தன் வாழ்க்கை பூராவும் காக்காய் வலிப்பு கொண்டிருந்ததாகவும், அவர் அந்த கூட்டத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவன் என்னிடம் கூறினான் அது தான் ஊழியத்தின் தொடக்கம். நான் மற்றவர் கைகளை என் கைகளின் மேல் போட்டு, பகுத்தறிந்து என்ன கூறுகிறேனோ. அதுவே அது என்று என்னிடம் கூறினது. அவர்களுடைய இருதயங்களின் இரகசியங்களை நான் அறிந்து கொள்ளும் சமயம் வருமென்று நான் உங்களிடம் கூறினேன் (அதற்கு அநேகர் இன்றிரவு சாட்சிகள்)..அது நடப்பதற்கு முன்பு நான் கூறினது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா-? அதற்கு பின்பு ஐந்தாறு ஆண்டுகள் கழித்து, முதன் முறையாக அது கனடாவில் நடந்தது. அவர் ''நீ மாத்திரம் உத்தமாக இருந்து வந்தால், அது தொடர்ந்து நடக்கும்'' என்றார் இப்பொழுது மூன்றாம் காரியம் நிகழ்ந்து விட்டது. அது தொடர்ச்சியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அவனுடைய பாட்டனார் ஜெப வரிசைக்கு கொண்டு வரப்பட்டார் என்றும், அவருக்கிருந்த காக்காய் வலிப்பு அறிவிக்கப்பட்டதென்றும், அவருக்கு ஜெபம் ஜெபிக்கப்பட்டதென்றும் அவன் கூறினான். அது 16 ஆண்டுகளுக்கு முன்பு (பதின்று அல்லது 17 ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன்). அதற்கு பிறகு வலிப்பு வரவேயில்லை என்று அவன் கூறுகிறான். அவர் இப்பொழுது 85 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அன்று முதல் அவருக்கு வலிப்பு வரவே இல்லை. அது என்ன-? இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். 17. மார்ஜி மார்கன் கட்டிடத்தில் இருக்கிறாளா-? சகோதரி மார்ஜி மார்கன் - புற்று நோயால் தின்னப்பட்டிருந்த ஸ்திரீ நர்ஸ். எத்தனை பேருக்கு சகோதரி மார்கனை ஞாபகமுள்ளது-? அவள் இங்கிருப்பாளானால், அவளால் உள்ளே நுழைய முடியாது. அவள் நர்ஸ் வேலை செய்து கொண்டிருந்தாள். பாருங்கள்... அவளுடைய பெயர் லூயிவில்லில் புற்றுநோய் கொண்டவரின் பட்டியலில் இருந்தது. அந்த ஸ்திரீ 17 ஆண்டுகளுக்கு முன்பே மரித்து விட்டதாக கருதப்பட்டவள் - லூயி வில்லில் புற்று நோய் பட்டியலில் அவள் இருந்தாள். வழக்கறிஞரான (கிறிஸ்தவ வழக்கறிஞரான) டிம்-ராயின்ஸம் அதைக் குறித்து கேள்விப்பட்ட போது, அது உண்மையாவென்று அறிந்த கொள்ள அவர் பாப்டிஸ்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றார், ஏனெனில் அவருடைய தந்தை அதன் நிர்வாகக் குழுவில் இருந்தார், (அவர் பாட்டிஸ்டு ஆஸ்பத்திரியின் ஒரு தர்மகர்த்தா).. அவர்கள் 'கேஸ்'கள் அனைத்தையும் பரிசீலித்து பார்த்த போது அவள் அநேக ஆண்டுகளுக்கு முன்பே மரித்துவிட்டதாக கருதப்பட்டார். ஆனால் அவளோ ஜெபர்ஸன் வில்லிலுள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள், அவள் அங்கு நின்ற போது, அவர்கள் அவளைப்பிடித்து நிறுத்த வேண்டியதாயிருந்தது. அவள் சுயபுத்தியிலும் கூட இல்லை. ஆனால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாம். அவள் இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் லூயிவில்லுக்கு நர்ஸ் வேலைக்காக சென்ற போது, அங்கிருந்த ஒருவர் - ஷிம்ப்ஸ் மிட்டாய் கடை - திரு. ஷிம்ப்ஸ், இன்றிரவு இங்கிருக்கிறாரா-? அவர் இங்கிருப்பாரானால், அவரே. அதை கூறவேண்டுமென்று விருப்புகிறேன்- சன்னி ஷிம்ப்ஸ் திடகாத்திரமுள்ள, ஆரோக்கியமுள்ள மனிதர், அநேக முறை நான் செல்வது வழக்கம்.... இதை கூற எனக்கு விருப்பமில்லை, ஆனால் அது உண்மை. நான் வாரம் முழுவதும் வேலை செய்தால் என் தந்தை எனக்கு பத்து சென்டுகள் கொடுப்பது வழக்கம் நான் பட்டினத்திற்கு வந்து என் சைக்கிளை சகோ.மைக் ஈகன் வீட்டில் வைத்து விடுவேன் (அவர் இங்குள்ள தர்மகர்த்தாக்களில் ஒருவர்) - ஜிம்மி பூலுடன் கூட (அவருடைய மகன் இன்றிரவு இங்கிருக்கிறான் என்று நினைக்கிறேன்) - ஜிம்மி, நான், எர்னஸ்ட் ஃபிஷர் வரும் பட்டினத்துக்கு சென்று ஐந்து சென்டுக்கு சினிமா பார்ப்பது வழக்கம். நாங்கள் பழைய, உரையாடல் இல்லாத அமைதி திரை படங்ளைப் பார்ப்போம். அப்பொழுது நாங்கள் 8, 10 வயதுள்ள சிறுவர்கள். பழைய அமைதி திரைப் படங்களில் நடித்த வில்லியம் எஸ். ஹார்ட் என்னும் நடிகர் இருந்தார். (உங்களில் அநேகருக்கு அவரை ஞாபகமிருக்காது). எனக்கு அப்பொழுது படிக்கத் தெரியாது; எனவே நான் திரைப் படத்தை கவனிப்பேன், என்னால் எழுத்துக் கூட்டியே அப்பொழுது படிக்க முடியும். என்ன எழுதப்பட்டது என்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை, ஆனால் அந்த திரைப்பட நடிகரின் நடிப்பை நான் கவனிப்பேன். என்னிடம் ஐந்து செண்டுகள் மிச்சம் இருக்கும். கோன் ஐஸ் கிரீம் ஒரு சென்டுக்கு கிடைக்கும் காலம் எத்தனை பேருக்கு நினவிருக்கிறது-? சரி, என்னால் மூன்று ஐஸ் கிரீம் கோன்களும் இரண்டு சென்டு பெறுமானமுள்ள கார வகைகளும் வாங்க முடியும். என்னால் எல்ல 'ஐஸ் கிரீம் கோன்'களையும் பிடித்துக் கொள்ள முடியாது. எனவே அவைகளை தின்று விட்டு, இரண்டு சென்டுகளுக்கு கார வலைகளை வாங்கிக் கொள்வேன். அது அரை பவுண்டு எடையிருக்கும். ஷிம்ப்ஸ் தான் அந்த தின்பண்டத்தை செய்வார், அதை வாங்கிக் கொண்டு, சினிமாவுக்குச் சென்று உட்கார்ந்து கொண்டு வில்லியம்ஸ் ஹாட்டி நடிப்பை கவனிப்பேன். 18. இந்த வாலியன் (என்னை விட சற்று வயதில் மூத்தவர்) ஒரு விதமான வியாதியால் பீடிக்கப்பட்டு, லூவிலிலுள்ள ஐந்து பிரபல சிறப்பு மருத்துவர்கள் அவரைக் கைவிட்டனர். அவருடைய எடை சுமார் 45 பவுண்டாக இருந்தது. அவர் மரித்துக் கொடிருந்தார். குமாரி மார்கன் தான் அவருக்கு நர்ஸ் வேலை செய்து கொண்டிருந்தாள். அவர் மிகவும் பயங்கரமான நிலையில் இருந்தார்..... அவருக்கு எத்தனையோ தொந்தரவு இருந்தன. அவருடைய நுரையீரல்கள் போய் விட்டன, அவருடைய கைகள் இவ்வளவு சிறிதாக சுருங்கிவிட்டன. அவர் படுக்கையில் படுத்து, மரித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்துக் கொள்வதற்காக குமாரி மார்கன் வேலையில் அமர்த்தப்பட்டாள். அவள் அவரிடம், 'ஒரு காலத்தில் நான் புற்று நோய் வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தேன்'' என்று கூறி, அவரிடம் எல்லாவற்றையும் கூறினாள். அவர் , ' யார் என்று கூறினாய், பில்லி பிரான்ஹாமா-? அவருக்கு நான் எத்தனையோ முறை கார வகைகளையும், ஐஸ்கிரீம் கோன்களையும் விற்றிருக்கிறேன்'' என்றார். "அவர் வந்து எனக்காக ஜெபம் செய்வாரா என்று வியப்புறுகிறேன்' என்றார். நான் ஜுனி ஷிம்ப்ஸுக்காக ஜெபம் செய்ய சென்றேன். இப்பொழுது அவருடன் நீங்கள் பேச விரும்பினால், அது ஷிம்ப்ஸ் மிட்டாய் கடை, லியோ தியேட்டருக்கு அடுத்த கட்டிடம், இல்லை இரண்டு கட்டிடங்கள் தள்ளி உள்ளது, தெருவின் கோடியில். அது எங்குள்ளதென்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். என்னே, அது ஜெபர்ஸன்விலுள்ள மிகப்பழைமையான நிறுவனங்களில் ஒன்று. அவருக்கு 5 சிறப்பு மருத்துவர்கள் சில மணி நேரமே அவகாசம் கொடுத்து, அவர் படுக்கையில் படுத்து மரித்துக் கொண்டிருந்த போது, அது கர்த்தர் உரைக்கிறதாவது, நீ மரிக்க மாட்டாய், நீ மறுபடியும் எனக்கு கார வகைகளை விற்பாய் என்று உரைக்கப்பட்டது. நீண்ட நாட்கள்... அவர் குணமாகி விட்டாரென்று நான் அறிந்தேன், ஆனால் நீண்ட நாட்களாக அதை மறந்து விட்டேன். நாங்கள் கிறிஸ்துமஸுக்கு இங்கு வந்திருந்த போது மிட்டாய் வாங்க புறப்பட்டோம். ஷிம்ப்ஸ் கடைக்கு போக வேண்டுமென்று எங்களுக்கு எப்படி தோன்றிற்றோ தெரியவில்லை. நாங்கள் வழக்கமாக மருந்து கடைக்குச் சென்று மிட்டாய்களை வாங்குவோம், ஆனால் நாங்கள் ஷிம்ப்ஸ் கடைக்கு முன்னால் காரை நிறுத்தினோம். நான் உள்ளே சென்ற போது, அவருடைய சகோதரி, என்னைப் பார்த்து விட்டு, ''சகோ. பிரான்ஹாமே, உங்களுக்கு ஜுனியை ஞாபகமிருக்கிறதா'' என்று கேட்டாள். நான், "ஆம்" என்றேன். அங்கு திடகாத்திரமான, ஆரோக்கியமுள்ள ஒருவர் இருந்தார். நான் சரக்குகள் விநியோகிக்கப்படும் இடம் (counter) சென்று, அதைப் பார்த்து, கீழே இப்படி பார்த்துக் கொண்டே, " இந்த கார வகையில் ஒரு பவுண்டு எனக்கு வேண்டும்' என்றேன். இவர், ''சரி, ஐயா'' என்றார். அவருடைய சகோதரி என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தாள். நான் தலையைக் குனிந்து கொண்டே, ''அநேக வருடங்களுக்கு முன்பு, நான் திரைப் படங்களைக் காணும்போது இவைகளை உண்பது வழக்கம்'' என்றேன். அவர், 'ஆம், அநேக சிறுவர்கள் இதை வாங்குகின்றனர். இப்பொழுதும் கூட வாங்குன்றனர்'' என்று கூறிவிட்டு, ''என் தகப்பனார் இதை உண்டாக்கி, சிறுவர்களுக்கு விற்பார்'' என்றார் . நான், "எனக்கு இவை மிகவும் பிரியம்'' என்றேன். அவர் பொட்டலம் கட்டி விட்டு என்னிடம் கொடுத்த பின்பு, "வேறெதாகிலும் வேண்டுமா-?'' என்று கேட்டார் . நான், “எனக்குத் தெரியவில்லை'' என்று கூறிவிட்டு, என் தலையை உயர்த்தின போது... ஓ, என்னே-! அவர், ''சகோ. பிரான்ஹாமே'' என்றார் , நான், "சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தர் உரைக்கிறதாவது என்று கூறின கார வகை இது தான்'' என்றேன். 19. அவர், ''சகோ.பிரான்ஹாமே, நான் முழுவதும் குணமாகி விட்டேன். அதன் ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் ஒரு காது மாத்திரம் சற்று மந்தமாயுள்ளது'' என்றார் (அவர் 50 வயதைத் தாண்டி விட்டார் என்று நினைக்கிறேன்). அவர், எனக்கு ஒரு காது மாத்திரம் சற்று மந்தமாய் உள்ளது. நான் ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவர்கள் அதிக மருந்துகளைக் கொடுத்ததனால் ஏற்பட்ட விளைவு'' என்றார். இயேசு கிறிஸ்துவின் திகைப்பூட்டும் கிருபை. வேறெதையும் இப்பொழுது கூறுவதற்கு எனக்கு அதிக நேரமில்லை. ஆனால் இதை மாத்திரம் கூற விரும்புகிறேன். எத்தனை பேருக்கு அணில்களைக் குறித்து ஞாபகமுள்ளது-? அது என் வாழ்க்கையில் புதிரான வேத வாக்கியமாகவே இருந்து வந்தது. அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு வேறொரு வேத வாக்கியம் புதிராக இருந்தது. அதாவது, தேவன் அறிந்திருந்த வழியைக் காட்டிலும் மேலான ஒரு வழியை மோசே தேவனுக்கு சொல்லி கொடுக்க முடிந்தது. மோசே, "உங்கள் தேவனால் உங்களை வெளியே கொண்டு வர முடிந்தது. ஆனால் உங்களைக் காப்பாற்ற முடியவில்லை' என்று ஜனங்கள் கூறுவார்களே என்றான் (யாத்.32:11-14). மோசே திறப்பின் வாயிலிலே சாஷ்டாங்கமாக விழுந்தான் (சங்.106:23). பின்னர் நான் கண்டு கொண்டேன், மோசே... அது மோசேக்குள் இருந்த கிறிஸ்து, ஜனங்களுக்காக மன்றாடினார் என்று. பிறகு, 'இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி" (மாற்.11:23) என்னும் வேதவாக்கியம் (அதைக் குறித்து நான். பிரசங்கிப்பதேயில்லை). அந்த வரலாறு உங்களுக்குத் தெரியும். எனவே அதை கடந்து சென்று விடுகிறேன். 20. அது எதற்கு வழி நடத்துகிறது என்று நான் சிறிதளவும் கூட அறிந்திருக்கவில்லை. அது நிகழ்ந்த போது, இல்லை, அது நிகழ்ந்தவுடன்; இக்கட்டிடத்திலுள்ள சகோ.ராட்னியும், சகோ.சார்லியும் (கென்டக்கியைச் சேர்ந்தவர்), சகோதரி உட்டின் சகோதரரும், மற்றவர்களும், அது கென்டக்கியில் நிகழ்ந்த போது அங்கிருந்தனர், அது இரண்டாம் முறை நிகழ்ந்தது. அதாவது இல்லாத ஒன்றை பேசி சிருஷ்டித்தல் என்பது. வேத வாக்கியங்களை ஆதாரப்படுத்தி எல்லா சமயங்களிலும் பேசுதல் என்பது உற்சாகமூட்டுகிறது. அது மூன்றாம் முறை நிகழ்ந்தது ஹாட்டி ரைட் விஷயத்தில் இன்றிரவு ஹாட்டி ரைட் இருக்கிறாளா-? அது ஈடித்தின்... எத்தனை பேருக்கு ஹாட்டி ரைட்டைத் தெரியும்-? அது நிகழ்ந்த போது நானும் சகோ.உட்டும் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தோம். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், ''அவள் விரும்புவதை அவளுக்குக் கொடு' என்றார். நாங்கள் அணில்கள் எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்டன என்பதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். நான், "ஒன்று மாத்திரம் நிச்சயம், அவர் யேகோவா-யீரே'' என்றேன். ஆபிரகாமுக்கு ஒரு ஆட்டுக்கடா தேவையாய் இருந்த போது, கர்த்தர் இந்த ஆட்டுக்கடாவை அவனுக்குக் கொடுத்தார். அவர் அணில்களையும் அருளினார். அவர் பேசி அணிலை சிருஷ்டிக்க முடியும், ஏனெனில் அவர் சிருஷ்டி கர்த்தர் - அவர் பேசி ஆட்டுக் கடாவையும் அவ்வாறே சிருஷ்டிக்க முடிந்தது. ஆபிரகாம் அதைக் கேட்கவே இல்லை. அவன் அதை செய்வதற்காக ஆயத்தமானான். யேகோவா-யீரே அங்கிருந்தார் என்பதை அது காண்பிக்கின்றது. அதை நான் கூறின போது, இரு எளிய சிறிய ஸ்திரீ; அது மானிட வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரின் மேல் முதல் முறையாக நிகழ்ந்தது (அதாவது மூன்றாம் இழுப்பு), ஜீவனத்துக்காக ஒரு ஆண்டுக்கு 200 டாலர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த ஒரு தாழ்மையுள்ள எளிய ஸ்திரீ. அவ்வளவு தான் அவளுக்கு அவளுடைய சிறு பண்ணையிலிருந்து கிடைத்தது. (அவளுடைய கணவன் மரித்துப் போனார், அவளுடைய இரண்டு பிள்ளைகளும் ஒரு வகையான முரட்டுத்தனம் கொண்டு இருந்தனர்). அவள் இந்த கூடாரத்தின் கட்டிட நிதிக்காக 20 டாலர்கள் நன்கொடையாக கொடுத்தாள். அன்று காலை மேடா என்னிடம் மளிகை சாமன்கள் வாங்குவதற்காக சிறிது பணம் கொடுத்திருந்தாள் (20 டாலர்கள்). அவள் நன்கொடையாக கொடுத்திருந்த பணத்தை அவளிடம் திருப்பிக் கொடுக்கச் சென்ற போது, அவள் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டாள். அப்பொழுது நான்... அவள் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். நான், எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று, அவர் இன்னமும் யேகோவா-யீரேவாக இருக்கிறார் என்பதே என்றேன். இப்பொழுது சிறிய ஹாட்டி சரியான வார்த்தையைக் கூறினாள். அவள், அது உண்மையே அன்றி வேறொன்றுமில்லை' என்றாள். அவள் அவ்வாறு கூறின போது (இங்குள்ள சகோ - பாங்க்ஸ் உட் அப்பொழுது அங்கிருந்தார்), அந்த அறையே இடிந்து விழுந்து விடும் போல் தோன்றினது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னிடம்,'' அவள் கேட்பதை அவளுக்குக் கொடு'' என்றார் (ஆணிலைக் குறித்து பேசின அதே சத்தம்). நான், "சகோதரி ஹாட்டி, தேவனுக்கு முன்பாக சாட்சியாக இதைக் கூறுகிறேன். உன் மனதில் சந்தேகம் ஏதாகிலும் இருக்குமானால், நீ எதை வேண்டுமானாலும் கேள். அது உன் மடியில் கிடத்தப்படவில்லை என்றால், நான் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி'' என்றேன். அவள், "சகோ. பிரான்ஹாம்'' என்றாள். எல்லோரும் அழத் தொடங்கினார்கள். அவள், "நான் எதைக் கேட்பது-?'' என்றாள் . நான், 'நீ ஏழையாய் இருக்கிறாய். நீ பணமின்றி, அங்குள்ள மலையின் மேல் வாழ்ந்து வருகின்றாய் - அதை வேண்டுமானால் நீ கேட்கலாம். இங்கு உட்கார்ந்திருக்கும் ஈடித் என்னும் பெயருள்ள ஊனமுற்ற சகோதரி உனக்கிருக்கிறாள். அவளுக்காக நாம் அநேக ஆண்டுகள் ஜெபித்து வந்து இருக்கிறோம் - அவளுடைய சுகத்தை வேண்டுமானாலும் நீ கேள். உன் தந்தைக்கும் தாய்க்கும் வயதாகி உடல் நலமில்லாமல் இருக்கின்றனர் - அவர்களுக்கு உடல் நலம் வேண்டுமாறும் நீ கேட்கலாம், சகோதரி ஹாட்டி, நீ எதைக் கேட்டாலும், அது இப்பொழுதே நிறைவேறுகிறதா இல்லையாவென்று பார். 'அவள் கேட்பதை அவளுக்குக் கொடு' என்று இப்பொழுது தான் அவர் என்னிடம் கூறினார் (அதே சத்தம்)'' என்றேன். அவள் சுற்று முற்றும் பார்த்து விட்டு, 'சகோ. பிரான்ஹாம், என்ன கேட்பதென்று தெரியவில்லையே-?'' என்றாள். 21. நான், "உன் விருப்பம் எது வென்று கூறு. உனக்குள்ள மேலான விருப்பத்தை யோசித்து கூறு' என்றேன் (அவளுடைய பையன்கள் ஏளனமாக சிரித்துக் கொண்டிருந்தனர்). அவள், "எனக்குள்ள மேலான விருப்பம் என் இரண்டு மகன்களின் இரட்சிப்பு'' என்றாள். நான், ''இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களை உனக்குத் தருகிறேன்'' என்றேன். அவர்கள் எழுந்து போய் விட்டார்கள். அவர்கள் இராப்போஜனத்தில் பங்கு கொள்ள இந்த சபையில் விசுவாசமுள்ளவர்களாக இருந்து வருகின்றனர் - அங்கு உட்கார்ந்து கொண்டு இருக்கும் சிறு பையன்கள்; கால்களைக் கழுவுவதிலும் மற்ற காரியங்களிலும் நாமெல்லாரும் அதற்கு சாட்சிகளாய் இருக்கிறோம். அவள் சரியானதை தெரிந்து கொண்டாள். அவளுடைய தாய் மரிக்கவேண்டும், அவளும் மரிக்க வேண்டும்; அவர்கள் எல்லோருமே மரிக்க வேண்டும். ஆனால் அவள் கேட்டதோ நித்திய காலமாய் நிலைத்திருக்கும் - அவளுடைய பிள்ளைகளின் இரட்சிப்பு என்பது. அது மூன்றாம் முறை நிகழ்ந்தது. அது நிகழ்ந்த நான்காம் முறை (நான் சென்ற முறை இங்கிருந்த போது, அதை விளக்கிக் கூறினேன்), நான் மலையின் மேலிருந்த போது அங்கு புயல் பயங்கரமாக அடித்தது..... எத்தனை பேர் இதைக் கேட்டீர்கள்-? புயல் பயங்கரமாக அடித்துக் கொண்டிருந்தது. தேவனே என் நியாயாதிபதியாக இங்கு நின்று கொண்டிருக்கிறார். நான் டேவிட் பட்டுடன் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தேன் (அவர் எங்கோ இருக்கிறார் என்று நினைக்கிறேன்). அவர் எனக்கு ஒரு சாண்ட்விச்சை செய்து கொடுத்தார். அது மிகவும் பெரியது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய தந்தைக்கு நான் செய்து கொடுத்த 'சான்ட்விச்சின் அளவுக்கு சமமாக ஒன்றை எனக்கு செய்து கொடுக்க முயன்றார் போலும்-! அவர் 'பலோக்னா' (balogna) வையும் இறைச்சியையும் மற்றவைகளையும் ஒன்றாகக் கலந்து அந்த 'சான்ட்விச்சை தயார் செய்து கொடுத்தார். அதை என் ஜேபியில் போட்டுக் கொண்டேன். மழை பெய்தது. அது நனைந்து ஒரு பெரிய மாவு உருண்டை போல் ஆகி விட்டது. நான் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தேன். புயல் பலமாக அடித்துக் கொண்டிருந்தது. எனக்கு முன்னால் கையை வைத்தாலும் கூட என்னால் காணமுடியவில்லை. ஒன்று மாத்திரம் எனக்குத் தெரியும், அது சுழல் காற்றாய் உள்ளபடியால், நீங்களும் சுழலுவீர்கள். அதற்கு சாட்சிகள் இங்குள்ளனர். அவர்களில் ஒருவர் நமது விசுவாசமுள்ள மூப்பர்களில் ஒருவரான சகோ. வீலர். சகோ. வீலர், நீங்கள் இங்கிருக்கிறீர்களா-? அவர் எங்கே-? இதோ இங்கே- சகோ. வீலர். 22. நியூ ஆல்பனியைச் சேர்ந்த மெதோடிஸ்டு போதகர் சகோ. மான். (Bro Mann). இன்றிரவு சகோ. மான் இங்கிருக்கிறாரா-? அவர் இருக்கிறாரா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. சகோ. பாங்க்ஸ் உட்.., சகோ பாங்க்ஸ், இங்கிருக்கிறீர்களா-? அவர் ஒலிப்பதிவு செய்யும் அறையில் இருக்கிறார். சரி, டேவிட் உட்டும், சகோ. ஈவான்சும் அங்கிருந்தார்கள் என்று நினைக்கிறேன். அது சரியா, சகோ. ஈவான்ஸ்-?.... சுவற்றில் சாய்ந்து கொண்டிருக்கிறாரே, அவர் அங்கிருந்தார். அவர்கள் எவ்வளவாக எத்தனையோ நாட்கள் வானொலியில் ஒலிபரப்பு செய்தார்கள்-! இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பயங்கர பனிப் புயல் தேசத்தை தாக்கினது. சகோ.டாம் சிம்ப்சன் இன்றிரவு இங்கிருக்கிறார். அவர் டாவிலிருந்து வந்து கொண்டிருந்த போது, அவரால் கடக்க முடியாததால், வேறு வழியாக செல்லும்படி அவர்கள் அவரைக் கேட்டுக் கொண்டனர். பனி புயல் வந்து கொண்டிருந்தது. சகோ. டாம், இங்கிருக்கிறீர்களா-? நீங்கள் எங்கே-? இதோ அவர் இங்கு அமர்ந்திருக்கிறார். மேகங்கள் எழும்பிக் கொண்டிந்தன. நான். "சகோதரர்களே...' என்றேன். எல்லோரும் துரிதமாக வெளியேறிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த ஏறக்குறைய நூறு பேர்களில், எங்களுடைய சிறு குழுவையும், சவாரி செய்யும் மாட்டுப் பையனையும் (Cowboy) தவிர, வேறு யாருமே இல்லை . நாங்கள் அங்கு தங்க தீர்மானித்தோம். நான் சகோதரி ஈமான்சை தொலைபேசியில் கூப்பிட்டு, நான் அங்கு போகவில்லை என்றால், வர்த்தகரின் காலை உணவு கூட்டத்திற்கு வேறு யாரையாவது ஒழுங்கு செய்யும்படி டோனியிடம் கூறவேண்டுமென்று என் மனைவியிடம் தொலைபேசியில் கூறும்படி சொன்னேன். அன்று மலையின் மேல் நான், ''சிறிது மழை பெய்யத் தொடங்கினவுடனே, முகாமுக்குச் சென்று விடுங்கள். பத்து பதினைந்து நிமிடங்களுக்குள், அந்த பயங்கரமான பனிப்புயலில், உங்கள் கையை உங்களுக்கு முன்னால் வைத்தாலும் கூட உங்களால் காணமுடியாது. சிறிது நேரத்துக்குள் அது மலையின் மேல் இருபது அடி உயரம் பனியை குவித்து விடும்' என்றேன். 23. அப்படித் தான் ஜனங்கள்... அவர்கள் எவ்வாறு அங்கு அழிந்து போகின்றனர் என்று நீங்கள் செய்தித்தாளில் படித்திருக்கிறீர்கள். ஆனால் எங்களுக்கோ, நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்றும், அந்த சூழ்நிலையில் எப்படி வெளியேறுவது என்றும் தெரியும். எனவே நாங்கள் அங்கு தங்க முடிவு செய்தோம், அந்த மலையின் மேல் பனிப்புயல் தொடங்கின போது, நான் கீழே இறங்கத் தொடங்கினேன். அது தொடங்கின இடத்திலிருந்து அரை மைல் சென்றிருப்பேன். அப்பொழுது தேவனுடைய சத்தம், "நீ வந்த இடத்திற்கு திரும்பிச் செல் என்றது. அவர் கட்டளையிட்டபடியே நான் திரும்பிச் சென்றேன். நான் சற்று நேரம் காத்திருந்து, டேவிட் கொடுத்த, 'சான்ட்விச்'சை தின்று விட்டு, மேலே ஏறி அந்த இடத்திற்கு சென்று உட்கார்ந்து கொண்டேன். நான் அங்கு உட்கார்ந்து கொண்டு இருந்த போது காற்று மரங்களைச் சுழற்றி, மேல் பாகத்தை வீழ்த்திக் கொண்டிருந்தது. காற்றில் பனிக்கட்டிகள் பறந்து கொண்டிருந்தன), ஒரு சத்தம், "நானே சிருஷ்டிப்பின் தேவன்'' என்று உரைத்தது. நான் மேலே நோக்கி, அது எங்கிருந்து வந்தது என்று எண்ணினேன். அது ஒருக்கால் காற்றாக இருக்கலாம் என்று நினைத்தேன். அவர்", "நானே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தேன். கடலின் மேல் அடித்த புயல் காற்றை அமரப் பண்ணினவர் நானே'' என்று இவ்வாறு பேசிக் கொண்டே சென்றார். நான் குதித்தெழுந்து நின்று என் தொப்பியை கழற்றினேன். அவர், "நீ புயலிடம் பேசு, அது நின்று விடும். நீ என்ன உரைத்தாலும், அது நிறைவேறும்'' என்றார். நான், "புயலே, நில். சூரியனே, நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு எங்கள் இடத்தை அடையும் வரைக்கும், நான்கு நாட்களுக்கு வழக்கம் போல் பிரகாசி'' என்றேன். அவ்வாறு நான் உரைத்த மாத்திரத்தில், பனிக்கட்டி கலந்த மழை, உறைபனி எல்லாமே நின்று விட்டது. ஓரிரண்டு நொடிகளில், சூரியன் என் முதுகின் மேல் உஷ்ணத்துடன் பிரகாசிக்கத் தொடங்கினது. காற்று இவ்வாறு வடக்கிலிருந்து - இல்லை, அது மேற்கிலிருந்த கிழக்கு நோக்கி வந்தது. அது திசை மாறி இந்த வழியாக வந்தது. மேகங்கள் அதிசயவிதமாக மேலே தூக்கப்பட்டு, சூரியன் சில நிமிடங்களுக்குள் பிரகாசிக்கத் தொடங்கினது. சிறிது கழித்து, கர்த்தராகிய இயேசு அங்கு என்னிடம் என் மனைவியைக் குறித்து பேசினார். அது உங்களுக்குத் தெரியும். நான் சென்ற அந்த இடத்தில்... நான் இன்னும் ஒரு முறை கூட எங்கள் விவாக நாளை வீட்டில் கழித்ததில்லை. எங்களுக்கு விவாகமாகி 22 ஆண்டுகள் ஆகின்றன. எங்கள் முதலாம் விவாக நாளின் போது (அதாவது எங்களுக்கு விவாகமான அன்று) அவளை வேட்டைப் பயணத்துக்கு அழைத்துச் சென்றேன். ஏனெனில் வேட்டைப் பயணம் மேற்கொள்ளவும் தேன் நிலவுக்கும் செல்லவும் என்னிடம் போதிய பணமில்லை. எனவே இவ்விரண்டையும் நான் ஒன்றாக இணைத்தேன். அன்று முதல், ஒவ்வொரு விவாகநாளின் போதும் நான் வேட்டையாடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு பரிதாபம்... அவளை நான் நடத்தின விதத்தைக் கண்டு. 24. அது நான்காம் முறை நிகழ்ந்தது. உங்களிடம் ஒன்றைக்கூற விரும்புகிறேன். நான் உண்மையை அப்படியே கூறவேண்டும். ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்கு முன்பு, நான் சகோ. ஜான் ஷரிட் என்பவருடன் கலிபோர்னியாவில் இருந்தேன். நான் அங்கு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. நானும் மேடாவும், சகோதரன், சகோதரி ஷாரிட்டும் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தோம். அப்பொழுது பால் மாலிக்கி என்னும் பெயர் கொண்ட ஒருவர் - அவர் அநேக முறை இந்த கூடாரரத்திற்கு வந்திருக்கிறார். அவர் மிகுந்த செல்வம் படைத்த ஆர்மீனியர். அவருடைய மனைவிக்கு கலிபோர்னியாலிலுள்ள ஃபிரெஸ்னோவில் குழந்தை பிறந்தது. அவர்கள் இங்கு வசித்து வந்தனர்... அவர் மனைவியைக் கூட்டிக் கொண்டு என்னைக்காண ஒட்டலுக்கு வந்திருந்தார், அவர், ''சகோ. பிரான்ஹாமே, நான் மனைவியை மேலே கொண்டு வரலாமா-?'' என்று கேட்டார். நான், ''சரி, கொண்டு வாருங்கள்'' என்றேன் (அடுத்த நாள் நான் காடலினாவுக்குச் செல்ல விருந்தேன்), எனவே அவர் மனைவியை மேலே அழைத்து வந்தார். அவள் வியாதியாயிருந்தாள். அவள்..... நான், 'சகோதரி மாலிக்கி, உன் கையை: என் கையின் மேல் போடு. கர்த்தர் நம்மிடம் உரைக்கிறரா என்று பார்க்கலாம்'' என்றேன். அவள் தன் கையை என் கையின் மேல் போட்டவுடனே, நான், ''ஓ, அது பால் கால் (Milk leg) என்றேன் (பால் கால்' என்பது பிரசவம் கழிந்தவுடன் கால்களில் உண்டாகும் வீக்கம்.- தமிழாக்கியோன்). 25. அவள் , '' அற்கான அறிகுறிகள் எதுவும் எனக்கு இருப்பதாக தெரியவில்லையே' என்றாள். நான், "நீ கவனித்து வா'' என்றேன். இரண்டு நாட்களுக்குள், மருத்துவர்கள் அவளுக்கு பால் காலுக்காக கிசிச்சை செய்தனர். இங்குள்ள ஜிம்மி பூலின் சிறு குழந்தையைப் போன்று. அன்றொரு நாள் அவர்கள் மாரடைப்பு என்று நினைத்துக கொண்டு என்னிடம் வந்தார்கள். அது ஆஸ்துமா இழுப்பாக இருந்தது. என் கையை அவன் மேல் போட்டு, ''அவனை இரண்டு நாட்களுக்கு கவனித்து வாருங்கள். அவனுக்கு விளையாட்டு அம்மை (measles) உள்ளது, அது எழும்பி வரப்போகின்றது. அதற்கான ஜுரம் அவனுக்கு இப்பொழுது உள்ளது'' என்றேன். நான் சென்ற இரவு ஜிம்மி பூலைச் சந்தித்தேன். அவர், ''அவன் உடல் பூராவும் விலையாட்டு அம்மை தோன்றியுள்ளது'' என்றார் . நான் சகோதரி மாலிக்கியிடம் அவளுடைய கையைக் குறித்து பேசிக் கொண்டிருந்தேன், அவள், "சகோ. பிரான்ஹாமே அது மிகவும் அதிசயமான காரியம். அது எல்லா கைகளிலும் கிரியை செய்யுமா-?'' என்று கேட்டாள். நான், 'அவர்களுக்கு வியாதி இருக்குமானால்'' என்றேன். நான் , ''இங்கே என் கையை ... போடுகிறேன். (அநேகர் அதை கவனித்தீர்கள்). ஒன்றும் நேரிடாது'' என்று கூறி விட்டு, "பாருங்கள், என் மனைவிக்கு எந்த வியாதியும் இல்லை... உன் கையை என் மேல் போட்டுக் கொள்கிறேன், பாருங்கள்'' என்றேன் (என் மனைவி அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தாள்). அவள் தன் கையை என் கை மேல் போட்டாள். அவள் போட்டவுடன், நான், 'உன் இடது கருப்பையில் ஒரு வீக்கம் (Cyst) எழும்பியுள்ளது. உனக்கு பெண்களுக்கு ஏற்படும் கோளாறு உள்ளது'' என்றேன். ''அவள், 'அப்படி ஒன்றும் எனக்குத் தோன்றவில்லையே'' என்றாள். நான், “ அனால் உனக்கு இருக்கிறது'' என்றேன். என் மகள் பெக்கிக்கு இப்பொழுது இரண்டு வயது - சற்று முன்பு பியானோ இசைத்தவள். அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து சாராள் பிறந்தாள். அவள் அறுவையின் மூலம் பிறந்தாள் (Caesarean). நான் கார்ட்டனிலுள்ள எங்கள் மருத்துவர், டாக்டர் டில்மனிடம், ''அவளுடைய வயிற்றை அறுத்து திறக்கும் போது, அவளுடைய இடது கருப்பையை கவனியுங்கள்'' என்றேன். அவர் பார்த்து விட்டு, ''நான் ஒன்றையும் காணவில்லையே'' என்றார். என் கையை அவள் கை மேல் போட்டு பார்த்தேன். அது அப்பொழுதும் அங்கிருந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து ஜோசப் பிறந்தான். நான் மறுபடியும் மருத்துவரிடம் பார்க்கக் கூறினேன். அவர், "நான் ஒன்றும் காணவில்லையே'' என்றார். என் கையைப் போட்டேன் -- அது அப்பொழுதும் அங்கிருந்தது. நாங்கள் அதைக் குறித்து மறந்தே போய் விட்டோம். 26. நான் இதை கூறியே ஆகவேண்டும். இதை கூற எனக்கு விருப்பமில்லை. ஆனால் உண்மையை சொல்ல வேண்டும், பாருங்கள், அது தான் உங்களுக்கு அவசியம். என்ன நடந்த போதிலும் எப்பொழுதும் உண்மையையே கூறுங்கள். ஆண்டுகள் கழிந்தன, நாங்கள் கவனம் செலுத்தவேயில்லை. இதை நான் கூறுகிறேன் -- அவள் இங்கு இல்லாததனால் இதை கூறுகிறேன், அவள் இங்கு இருப்பதனால் அல்ல. என் மனைவியைக் காட்டிலும் சிறந்த மனைவி இவ்வுலகில் இருக்க முடியாது என்பது என் கருத்து. அவள் எப்பொழுதும் அதே விதமாக இருப்பாள் என்று நம்புகிறேன். நானும் அவளுக்கு விசுவாசமுள்ள கணவனாக இருக்க விரும்புகிறேன். இந்த கட்டிடத்திலுள்ள வாலிபர் ஒவ்வொருவரும் மணம் புரிந்து கொள்ளும் போது, என் மனைவியைப் போன்ற ஒரு மனைவியைப் பெற்றுக் கொள்வார்களென நம்புகிறேன். நாங்கள் எவ்வளவு காலம். அவ்வாறு வாழ்வோம்.. என்று எனக்குத் தெரியாது. நாங்கள் இவ்வுலகில் இனிமேலும் வாழப் போகும் நாட்கள் முழுவதிலும் என்று நம்புகிறேன் நாங்கள் ஒன்றாக மிக்க மகிழ்ச்சி உள்ளவர்களாய் இருக்கிறோம். அவளை மணந்து கொள்ள தேவன் தான் என்னிடம் கூறினார். அதே சமயத்தில் அவளை மணந்து கொள்ளாதிருக்க நான் முயன்று வந்தேன் (அவருக்கு அது தெரியாது). அவளை நான் நேசிக்காததனால் அல்ல, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க முடியாது என்று நான் கருதின காரணத்தினால் தான். அவள் மிகவும் அருமையானவள், நான் அதற்கு தகுதியற்றவன் என்று எண்ணினேன். அவள் ஜெபம் செய்ய புறப்பட்டுச் சென்று வேதாகமத்தை திறந்தாள்... அவள் 'இதை நான் முன்பு செய்ததில்லை, ஆனால் எனக்கு உதவி செய்ய ஒரு வேத வசனத்தை அளிப்பீராக. அவரை நான் மறக்க வேண்டுமானால், நான் மறந்து தான் ஆக வேண்டும்'' என்றாள். அவள் ஒரு சிறு கொட்டகைக்கு சென்று ஜெபம் செய்து விட்டு வேதாகமத்தை திறந்த போது, ''இதோ, நான் தீர்க்கதரிசியாகிய எலியாவை அனுப்புகிறேன்-!' என்று மல்கியா 4ல் உரைக்கப்பட்டுள்ள வேதவசனத்தை அவள் கண்டாள், அது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு. இந்த நாளின் ஊழியத்தைக் குறித்து அப்பொழுது ஒன்றுமே தெரியாது. நான் அங்கு ஆற்றங்கரையில் படுத்துக் கொண்டிருந்தேன். அவர் ஒரு இரவு என்னை எழுப்பினார். அவர் வாசற்படியில் நின்று கொண்டு பேசுவதைக் கேட்டேன். அவர், ''நீ சென்று. அவளை மனைவியாக அடைந்து கொள். உன் விவாகம் வரும் அக்டோபர் மாதம் 23 தேதி நடைபெறும்' என்றார், நான் அவர் கூறினபடியே செய்தேன். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். தேவனுடைய கிருபையினால் எங்களிடையே சண்டை எழுந்ததில்லை. அவள் இதயத்திற்கு இனியவளாக இருந்து வருகிறாள். ஒரு நாள் நான் வீட்டுக்குள் நுழைந்தேன். நான் ஊழியத்திற்கு சென்று விடுவதால், அவள் பிள்ளைகளை தனியாக வளர்ந்து வருகிறாள். அநேக பெண்கள் அதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு அது தெரியும்..... அது மிகவும் கடினம்..... நான் உள்ளே நுழைந்த போது, அவள் ஏதோ ஒன்றை கூறிவிட்டாள். எங்களுக்கு ஜோசப் இருந்தான். அவன் துடுக்கான பையன்-! அவனுடைய தாயின் தலையிலும், என் தலையிலும் சில நரைமயிர் தோன்ற அவன் காரணமாய் இருந்தான். அவன் உண்மையில் துடுக்கான பையன். அவன் மிகவும் மோசமான ஒன்றை செய்து விட்டான். நான் அவளிடம்.... அவள் என்னிடம். "பில், அவனை அடியுங்கள்' என்றாள். நான், ''எனக்கு போதிய தைரியமில்லை'' என்றேன். அவள், "உங்களுக்கு அது நேர்ந்திருந்தால் தெரிந்திருக்கும்" என்று சொல்லி விட்டு 'படார்' என்று கதவை என் முகத்தில் மூடினாள், அது பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன். அந்த ஏழை பையன் அதை வேண்டும் என்று செய்யவில்லை. நான் காரைக் கழுவுவதற்காக வெளியே சென்றேன், நான் வெளியே சென்ற போது, அந்த சம்பவம் பரிசுத்த ஆவியானவருக்கு பிடிக்கவில்லை. அவர் "நீ போய் அவளிடம் சொல்...'' என்றார் , அது 2 நாளாகமம், 22-ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். நான் ஒருக்கால் கற்பனை செய்கின்றேனோ என்று முதலில் நினைத்தேன். நான் காரைக் கழுவிக் கொண்டிருந்தேன். அவர் மறுபடியும் என்னிடம், "அதை படிக்கும்படி அவளிடம் சொல்'' என்றார். நான் உள்ளே சென்று, வேதாகமத்தை கையிலெடுத்து அதைப் படித்தேன். அந்த வேத பாகத்தில் தான் தீர்க்கதரிசினியாகிய மிரியாம், தன் சகோதரன் மோசே எத்தியோப்பிய ஸ்திரீயை விவாகம் செய்து கொண்டதால் பரியாசம் செய்ததைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. தேவனுக்கு அது பிடிக்கவில்லை. அவர், ''அவள் அப்படி செய்ததைக் காட்டிலும் அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பியிருந்தால் நலமாயிருக்கும்'' என்றார் (என் . 12:14). 27. எனவே மிரியாமுக்கு மேலெல்லாம் குஷ்டம் பிடித்தது. ஆரோன் அவனுடைய சகோதரி இடம் வந்து... அவனுடைய சகோதரனிடம், ''அவள் குஷ்டரோகத்தினால் மரித்துக் கொண்டு இருக்கிறாள்'' என்றான். மோசே அவளுக்காக பரிந்து பேசுவதற்காக பலிபீடத்தண்டை ஓடினான். அப்பொழுது அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்தது - தேவன். அவர் ''நீ மிரியாமையும் ஆரோனையும் இங்கு அழைத்துக் கொண்டு வா'' என்றார். ஆரோனும் இதில் ஈடுபட்டிருந்தான். எனவே அவர், அவர்களை இங்கு வரும்படி அழைத்து வா என்றார். அவர், ''உங்களுக்குள்ளே ஒருவன் (தேவன் இப்பொழுது அவர்களிடம் பேசுகின்றார்) ஆவிக்குரியவனாக அல்லது தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் என்னை அவனுக்கு வெளிப்படுத்துவேன். நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன், சொப்பனத்தை வெளிப்படுத்தித் தருவேன்' என்றார் (எண். 12:6), அவர், '' என் தாசனாகிய மோசேயோ - அவனைப் போல் தேசத்தில் ஒருவனும் இல்லை, அவனுடைய காதில் உதடுகளை வைத்து பேசுகிறேன். உங்களுக்கு தேவனிடத்தில் பயமில்லையா-?' என்றார். பாருங்கள், தேவனுக்கு அது பிடிக்கவில்லை. அதை நான் கண்ட போது, நான் உள்ளே ஓடிச் சென்றேன். அவள் வேறொரு அறையில் இருந்தாள். நான் கதவைத் தட்டினேன் (அவள் கதவை அடைத்திருந்தாள். நான் அவளிடம் பேச விரும்புவதாக கூறினேன். நான் உள்ளே சென்று அவளிடம் பேசி, அது என்னவென்று அவளிடம் கூற முனைந்தேன். நான்," இதயத்துக்கு இனியவளே, உன்னை நான் எவ்வளவாக நேசிக்கிறேன் என்று உனக்குத் தெரியும். ஆனால் தேவனுக்கு அது பிடிக்கவில்லை. நீ அப்படி சொல்லி இருக்கக் கூடாது'' என்றேன். உடனே அவளுக்கு பக்கவாட்டில் கோளாறு ஏற்பட்டது. நாங்கள் லூயிலில்லிலுள்ள மருத்துவரிடம் அவளைக் கொண்டு சென்றோம் (டாக்டர் ஆர்தர் ஷோன் என்பவர்). அவர் இடது கருப்பையில் ஒரு கட்டியை (tumor) கண்டு பிடித்தார் - நான் 15, 16 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்த ஒன்றை - இடது கருப்பையில் 'வால் நாட்' கொட்டை (Walnut) அளவுக்கு ஒரு கட்டி, நான், 'டாக்டர், அதைக் குறித்து என்ன-?'' என்று கேட்டேன். அவர், '' என்ன நடக்கிறதென்று பார்க்கலாம். சில மதங்கள் கழித்து அவளை மறுபடியும் கொண்டு வாருங்கள்'' என்றார் (ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்து). நாங்கள் அவளை மறுபடியும் கொண்டு சென்றோம். அது 'வால் நட்' கொட்டை அளவிலிருந்து எலுமிச்சம் பழம் அளவுக்கு பெரிதாக வளர்ந்திருந்தது. அவர், ''அது வெளியே வந்து விடுவது நல்லது. அது மிருதுவாகி, புற்று நோயாக மாறி விடும்'' என்றார். நான், "அப்படியா-? நாங்கள் டூசானுக்குச் செல்கிறோம், கர்த்தர் என்னை டூசானுக்கு அனுப்புகிறார்'' என்றேன். அவர் பெண்களின் வியாதிகளுக்கான சிறப்பு மருத்துவரிடம் அவளை அனுப்பினார் (அவர் தமது கைகளில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை) இவர் அவரிடம் என்னுடைய ஊழியத்தைக் குறித்து கூறியிருக்க வேண்டும். ஏனெனில் அந்த சிறப்பு மருத்துவர், " அது வெளியே வந்தே ஆக வேண்டும்' என்றார். எனவே அவர் கூறினார்... நாங்கள் டூசானுக்குச் செல்வதாக அவரிடம் கூறினோம். அவர், ''அங்கு ஒரு சிறப்பு மருத்துவர் இருக்கிறார். அவர் எனக்கு நெருங்கிய நண்பர்'' என்றார். இவர் இதற்கு முன்பு டூசானில் வசித்து வந்தார். அவர், " உங்களை நான் அவரிடம் அனுப்பப்போகிறேன்' என்றார். எனவே அவர் குறிப்பு ஒன்றை எழுதி அவருக்கு அனுப்பி,'' திருமதி பிரான்ஹாம் நல்லவர்கள்'' என்று ஆரம்பித்து தொடர்ச்சியாக எழுதிக் கொடுத்து, அந்த கட்டியின் அளவைக் குறிக்கும் படமொன்றையும் அனுப்பினார் (அது அப்பொழுது கட்டியாக மாறியிருந்தது). அவர், ''அவரை அறிவேன்...'' என்று எழுதினார். அவருக்கு என்னைத் தெரியும்... அவர் என்னை "தெய்வீக சுகமளிப்பவர்" என்று குறிப்பிட்டிருந்தார் என்று நினைக்கிறேன் (அவ்வளவு தான் அவருக்கு என்னைக் குறித்து எழுத தெரியும்). நான், ''அது கட்டாயமாக வெளியே எடுக்கப்பட வேண்டுமானால், எடுத்து விடுங்கள். அதற்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன்' என்றேன். அது எங்கள் விசுவாசம் சோதிக்கப்படுதலாம் 28. நாங்கள் தொடர்ந்து ஜெபித்து வந்தோம். நாங்கள் அதிகமாக ஜெபிக்குந்தோறும், அந்த கட்டி பெரிதாக வளர்ந்து கொண்டே வந்து, முடிவில் அது பக்கவாட்டில் வெளியே தள்ளிக் கொண்டு வந்தது. நாங்கள் அதை இரகசியமாக வைத்திருந்து (இங்குள்ள ஒரு சிலருக்கு மாத்திரமே அது தெரியும்), என்ன நேரிடுகிறதென்று கவனித்து வந்தோம். நாட்கள் அவ்வாறே கடந்து சென்றன. முடிவில் நான் கனடாவிலிருந்து திரும்பி வந்த போது... அங்க இந்திய பழங்குடியினரை கிறிஸ்துவிடம் நடத்த கர்த்தர் கிருயை செய்தார் (கர்த்தருக்கு சித்தமானால், அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க, நான் மறுபடியும் வசந்த காலத்தின் போது அங்கு செல்வேன்). நான் திரும்பி வந்த போது, அவளுக்குச் செல்ல சமயம் வந்தது - நான் நியூயார்க்கிலிருந்த போது; இல்லை, இங்கிருந்த போது ..அவளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட அல்லது கடைசி முறையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட சமயம் வந்தது. நான் நியூயார்க்குக்கு சென்றிருந்தேன். நான் திரும்பி வரும் வழியில், இந்த இடத்திற்கு வந்து. அங்கு சென்றேன்... இங்கு கூட்டத்தை நடத்தி முடித்த பின்பு - கடைசி கூட்டத்தை - நான் சகோ. உட் வீட்டிற்கு சென்று அங்கிருந்து அவளைத் தொலை பேசியில் கூப்பிட்டேன். அவள், 'பில், துணிகள் அதன் மேல் பட்டாலும் கூட, என்னால் வேதனை பொறுக்க முடியவில்லை' என்றாள், அது அவளுடைய பக்கவாட்டிலிருந்து வெளியே இப்படி பிதுங்கி வந்திருந்தது. அந்த பக்கத்திலுள்ளவளுடைய கால்- அவள் நொண்டி நடந்தாள். அதுவே அவளுக்கிருந்த மிகவும் மோசமான வாரம், அவள் அங்கு உட்கார்ந்து கொண்டு, நான் தொலைபேசியில் பேசுவதைக் கேட்டாள் - அவளுக்கிருந்த மிகவும் மோசமான வாரம். 29. அவள், 'நான் நாளை மறு நாள் மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்'' என்றாள். நான், ''ஓ, தேவனே, அவர்கள் அறுவை சிகிச்சை செய்தால், கிறிஸ்துமஸின் போது நாங்கள் வீட்டிற்கு செல்லாதபடி அது தடுத்து விடும். அப்பொழுது நான் அங்கிருப்பேன் என்று ஜனங்களிடம் கூறி விட்டேனே" என்று நினைத்தேன். "என்ன ஒரு நேரம்... ஓ, என்னே" என்று எண்ணினேன். "அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால், கிறிஸ்துமஸ் கழியும் வரைக்கும் அதை நீட்டி வைக்கும்படி அவரிடம் கூறலாமா" என்று நினைத்தேன். பிறகு நான் யோசித்தேன்; ஒருக்கால் அது புற்று நோய் கொண்டதாக இருக்குமானால், அது தீங்கு விளைவிப்பதாயிருக்கும். அது சிறு நீரகத்தில் பரவி, அதுவும் புற்று நோய் கொண்டதாக மாறி அவளைக் கொன்று விடும். ''நான் என்ன செய்வேன்-?. என்று எண்ணினேன். மேடா, "சரி, பிறகு என்னை தொலைபேசியில் கூப்பிடுங்கள்" என்றாள், நான் ஷ்ரீவ்போர்ட்டை அடையும் அன்று (அதாவது அதற்கடுத்த நாள் ) அவள் மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். எனவே அவள்... திருமதி நார்மன் அவளுடன் கூட சென்றாள். உங்கள் எல்லாருக்கும் திருமதி நார்மனைத் தெரியும் - இந்த கூடாரத்துக்கு வருபவர்களுக்கு. என் மனைவியை இவள் சிறப்பு மருத்துவரிடம் கூட்டிச் செல்வது வழக்கம். எனவே என் மனைவி. "முதல். இரவு கூட்டம் முடிந்து திரும்பி வந்தவுடன் என்னை தொலை பேசியில் கூப்பிடுங்கள். ஏனெனில் இவ்விரண்டு இடங்களுக்கும் இடையே நேரத்தில் வித்தியாசம் உண்டு (இரண்டு மணி நேரம்]. இப்பொழுது நான் என்ன செய்யவேண்டுமென்று உங்களிடம் கூறுகிறேன்'' என்றாள். நான், "சரி'' என்றேன், 30. எனவே நான் புறப்பட்டு சென்றேன். அடுத்த நாள் காலை அந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு முன்பு, நான் பில்லியோடும் லாயிசோடும் தொடர்பு கொள்ள எத்தனித்தேன். [அவர்களிருவரும் இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். எப்பொழுதுமே.... எங்களிடம் சகோ.பாமா எங்களுக்கு மெத்தை தைத்துக் கொடுத்த ஒரு பழைய 'ஸ்டூல்' (Stool) உள்ளது. (ஸ்டூல்' என்பது ஒருவர் உட்காரக் கூடிய இருக்கை அதற்கு நாற்காலிக்கு இருப்பது போல் பின்னால் சாய்ந்து கொள்வதற்கு ஒன்றுமிராது - தமிழாக்கியோன்). நாங்கள் எப்பொழுதுமே அந்த 'ஸ்டூல்ச் சுற்றிலும் ஒன்று சேர்ந்து ஜெபம் செய்வது வழக்கம்.... மெத்தை தைத்த ஸ்டூல். நான் கூட்டங்களுக்குச் செல்லும் போது, நாங்கள் அதைச் சுற்றிலும் ஒன்று சேர்ந்து தேவன் எங்களுக்கு உதவி செய்யும்படி ஜெயிப்போம். நான் அங்கு சென்று இரண்டு நாட்கள் ஆயின. எனக்குத் தனிமை உணர்வு ஏற்பட்டது. வீட்டிலே... பிள்ளைகள் சென்று விடுவார்கள், அவளும் சென்று விடுவாள். ஒரு காலத்தில் எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் உண்டாயிருந்தது என்று உங்களில் அநேகருக்குத் தெரியும் - யாருமில்லாத வீட்டுக்குச் செல்லுதல். என் மனைவி ஹோப்பை நான் மாத்திரம் அடக்கம் செய்தேன். நான்... அந்த நிலை மீண்டும் வருகிறது. நான் வீடு திரும்பினவுடன், "நான் ஜெபம் செய்து, பிறகு பில்லியையும் லாயிசையும் கூட்டிக் கொண்டு செல்வேன்" என்று நினைத்தேன். நான் ஜெபம் செய்யத் தொடங்கின போது, "கர்த்தாவே, இன்று காலை இதைச் சுற்றிலும் அவர்கள் இல்லை. அவர்களுக்கு நீர் உதவி செய்து அவர்களை ஆசிர்வதிப்பீராக. நாங்கள் எல்லோரும் மறுபடியும் இந்த இடத்திற்கு வரும்படி அருளும்" என்றேன். நான், '' அவர்கள் வேறு இடத்தில் இருப்பதன் காரணம், ஒரு தரிசனத்தின் மூலம் நீர் என்னை அங்கு அனுப்பினீர். அதை நிறைவேற்றி விட்டீர். அடுத்தபடியாக நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் கூறப் போகின்றீர் என்பதைக் காண நான் காத்திருக்கிறேன். அவளுக்கு நீர் இரங்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். அங்கு நடக்கவிருக்கும் கூட்டத்தில் எனக்கு உதவி செய்வீராக'' என்று இவ்வாறு தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே சென்றேன். நான், ''அது புற்றுநோயாக மாறவிடாதேயும். அதை எடுத்துவிட, மருத்துவர் அடுத்த ஆண்டு முதலாம் தேதிக்கு பிறகு வரை காத்உ இருக்கட்டும். அவளை இந்நிலையில் காண எனக்கு விருப்பமில்லை...'' என்றேன். நான் மேலும், " கர்த்தாவே, அன்று காலை அவள் அதை வேண்டுமென்று செய்ய வில்லை. அவள் அப்படி செய்ய வேண்டுமென்று நினைக்கவில்லை. கர்த்தாவே, நான் கூட்டங்களுக்கு செல்வதைக் குறித்தும், கூட்டங்களின் நிமித்தம் அநேக மாதங்கள் வெளியில் தங்குவதைக் குறித்தும் அவள் ஒரு முறையாவது ஒரு வார்த்தையும் கூட கூறினதில்லை - அது எதுவாயிருந்தாலும் அவள் ஒரு முறை கூட வாயைத் திறந்து ஒன்றும் கூறினதில்லை. அவள் எப்பொழுதுமே சலவைக்கு என் துணிகளை அனுப்பி, என் 'ஷர்ட்டுகளை அவளே துவைத்து, நான் கூட்டத்திற்கு செல்வதற்காக எல்லாவற்றையும் ஆயத்தம் செய்து வைப்பாள். இவைகளைச் செய்த பிறகும், அவள் எவ்வாறு தேவனை சேவிப்பது என்று யோசிப்பாள்'' என்றேன் , ஸ்திரீகளே, உங்கள் கணவருக்கு சேவை செய்யும் போது, நீங்கள் தேவனுக்கு சேவை செய்கின்றீர்கள். நிச்சயமாக. இப்பொழுது... பிறகு நான் களைப்புடன் வீடு திரும்புவேன். ஜனங்கள் எல்லாவிடங்களிலுமிருந்தும் வருவார்கள், நான் எங்காவது மீன் பிடிக்கும் பயணத்தையோ, வேட்டை பயணத்தையோ மேற்கொள்ள வேண்டிவரும், அந்நிலையில் அநேக பெண்கள் கோபம் கொண்டிருப்பார்கள். இவள் என்ன செய்தாள்-? என் வேட்டை உடைகளை எனக்காக ஆயத்தப்படுத்தி என்னைப் போக விட்டாள். நான், ''கர்த்தாவே, அவள் வேண்டுமென்று செய்யவில்லை. அவளுடைய பிரசவம் அறுவை சிகிச்சையின் மூலம் நடத்தப்பட்டதல், மூன்று முறை அவளுடைய வயிற்றை அறுத்து திறக்க வேண்டியதாயிற்று. அவளுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடப்பதைக்காண நான் விரும்பவில்லை'' என்றேன். அப்பொழுது என் அறையில் ஒரு சத்தத்தைக் கேட்டேன். நான் மேலே நோக்கின போது ஒரு சத்தம், "எழுந்து நில் என்றது. ''நீ என்ன கூறினாலும், அதன் படி நடக்கும்'' என்றது. நான் ஒரு நிமிடம் அமைதியாயிருந்தேன். "மருத்துவரின் கை அவளைத் தொடுதற்கு முன்பு, தேவனுடைய கரம் அந்த கட்டியை எடுத்துப் போட்டு, அது காணாமலிருப்பதாக" என்றேன். என்னைப் பொறுத்த வரையில், அத்துடன் அது முடிந்து விட்டது. அவளை நான் தொலை பேசியில் கூப்பிடவில்லை, நாங்கள் தொடர்ந்து கூட்டங்களை நடத்தினோம். நான் சென்று பில்லியையும் லாயிசையும் அழைத்துத் கொண்டு, ஷ்ரீவ் போர்ட்டுக்குச் சென்றேன். 31. அடுத்த நாள் இரவு அவளை நான் தொலை பேசியில் கூப்பிட்டேன். அவள் மகிழ்ச்சி கொண்டாள். அவள், "பில், உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்...'' என்றாள். (அவள் இங்கு இருக்கிறாள். அது உண்மையென்று அவள் ருசுப்படுத்த முடியும்). அவள் நொண்டிக் கொண்டே மருத்துமனைக்கு செல்ல வேண்டியதாயிருந்தது. அவள் நர்ஸுனும் திருமதி நார்மனுடனும் அறைக்குள் சென்று, பரிசோதனைக்காக மேலாடையை [gown] உடுத்துக் கொண்டாள். அவளால் எழுந்து மேசையின் மேல் படுக்க முடியவில்லை, அந்த கட்டி இவ்வளவு பெரிதாக தொங்கிக் கொண்டிருந்தது. அவள்... மருத்துவர் அறைக்குள் நுழைந்து அவளுடன் பேசிக் கொண்டிருந்தார். அவளைத் தொட்டு பரி சோதனை செய்வதற்காக பரிசோதனை மேசையை உயர்த்தி சரிவாக்கினார். அவர் தொடுவதற்கு முன்பே அது மறைந்து விட்டது. கட்டி எந்த பக்கம் இருந்தது என்று மருத்துவருக்கு தெரியவில்லை . 32. அவர், "ஒரு நிமிடம் பொறுங்கள்'' என்றார். அவர் வரை படங்களுடனும், படங்களுடனும் தேடின போதும், அதன் சிறிதளவையும் கூட அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் மீண்டும் மீண்டும் அவளை பரிசோதனை செய்தார். அவர், "என்னால் இதற்கு விளக்கம் தர இயலாது. ஆனால், திருமதி பிரான்ஹாமே, அந்த கட்டி அங்கு இல்லை'' என்றார். அதன் பிறகு அவளுக்கு அதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை அது என்ன-? கவனியுங்கள், அது சொன்ன விதமாகவே நிறைவேறினது: "மருத்துவரின் கை அதை தொடுவதற்கு முன்பு.'' ஒரு வினாடிக்குள் அவருடைய கை அதை தொட்டிருக்கும். தேவனுடைய வார்த்தை எவ்வளவு பிழையற்றதாய் உள்ளது-! என் மனைவி இங்கு இருக்கிறாள். நாங்கள் இருவரும் தேவனுடைய சமுகத்தில் இருக்கிறோம். மருத்துவரின் கை அவளுடைய சரீரத்தைத் தொடுவதற்கு முன்பு- அது அவளிடம் இப்படி வந்து கொண்டிருந்தது - ஏதோ ஒன்று சம்பவித்தது. கட்டி அவளை விட்டுப் போய் விட்டது. அவர்களால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் இவ்வாறு கூறினார் - அப்படித் தான் நினைக்கிறேன், இல்லையா இருதயத்துக்கு இனியவளே திருமதி பிரான்ஹாம், உங்களிடம் மீண்டும் உறுதிபடுத்த விரும்புகிறேன்'' அப்படித்தானே அவர் சொன்னார்-? சரி " அந்த கட்டி அங்கில்லை. உங்களுக்கு கட்டியே இல்லை'' அது என்ன-? கர்த்தருடைய வார்த்தையின்படி பிழையின்றி அப்படியே நிறைவேறுதல். ஆமென். அது ஐந்தாம் முறை. ஐந்து என்பது கிருபையின் எண். அது வி-சு-வா-ச-ம் என்பதன் எண்ணும் கூட. [ சகோ. பிரான்ஹாம் ஆங்கிலத்தில் f-a-i-t-h என்று ஐந்து எழுத்துக்களை எழுத்துக் கூட்டுகிறார் - தமிழாக்கியோன்]. என் மனதில் இனிமேல் சந்தேகமேயில்லை. மூன்றாம் இழுப்பு என்னவென்று எனக்குத் தெரியும், அது என்ன செய்கிறதென்று எனக்குத் தெரியும். பயபக்தியாயிருங்கள்; அமைதியாயிருங்கள். தேவன் நமக்கு சில பெரிய காரியங்களைச் செய்யப் போகும் அந்த மணி நேரம் விரைவில் வரும். 33. இப்பொழுது ஜெபத்திற்காக நாம் தலைவணங்குவோம். கர்த்தராகிய இயேசுவே, அதை மற்ற ஜனங்களின் மேல் கண்டிருக்கிறேன், ஆனால் அது என் சொந்த, விலையேறப் பெற்ற மனைவிக்கு வந்த போது - கர்த்தாவே, அது என் குடும்பத்தில், கர்த்தாவே . என் சொந்த கண்களால் அதை கண்டேன், என் சொந்த கைகளால் அதை தொட்டேன் ... நான் - அதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தாவே, உம்மால் வெளிப்படுத்தப்பட்டது. ஏதாவது உரைக்கப் பட்டால், அது நிறைவேற வேண்டும். அப்பொழுது கர்த்தாவே, நீர் ஜனங்களுக்கு செய்த தன் பேரில் எனக்கிருந்த நம்பிக்கையை எனக்கு காண்பித்து வந்தீர், அவர்களுக்கு நான் உதவி செய்வதற்கென, இப்பொழுதும் எனக்குத் தெரியப்படுத்தி வந்தீர், என் சொந்த வீட்டிலேயே அது நிறைவேறும்படி செய்தீர். முன்பு அது முதலாம் இழுப்பாயிருந்தது. இப்பொழுது மூன்றாம் இழுப்பு முதலாம் இழுப்பை ஊர்ஜிதப்படுத்தினது. பிதாவே, நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். எங்கள் குறைகளை எங்களுக்கு மன்னித்தருளும். நாங்கள் எளியவர்கள் நாங்கள் படிப்பில்லாதவர்கள் - ஏறக்குறைய படிப்பறிவில்லாதவர்கள்-ஆனால் எங்களுக்கு எல்லாம் வல்ல தேவன் இருப்பதற்காக நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். அவர் எங்களைக் கவனித்து, எங்களுக்காக கவலை கொள்கிறார். எங்களுக்கு எங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாது. எங்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். பிதாவே, எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஓ, ஆண்டவரே, இந்த மூன்றாம் இழுப்பைக் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நீர் உரைத்து வந்து, அதை அடையாளக் குறிகளினாலும் (markings) மலைகளின் மேலும் காண்பித்து, அதை படிப்படியாகக் கொண்டு வந்தீர், அது என்னவென்று அறிந்து கொள்ள நான் கவனித்துக் கொண்டே வந்தேன். இப்பொழுது அது முழுவதுமாக உறுதியாகி விட்டது பிதாவே, முன்னைக் காட்டிலும் நான் இதைக் கொண்டு அதிக பயபக்தியாய் இருக்க எனக்குதவி செய்யும். நீரே எல்லா மகிமையும் எடுத்துக் கொள்ளும். இதே பிரசங்க பீடத்திலிருந்து முதாவது கூறப்பட்டது. பிறகு இரண்டாவது, இப்பொழுது மூன்றாவது. நீர் கூறினவை அப்படியே நிறைவேறினது. தேவனாகிய கர்த்தாவே, உம்மை நாங்கள் விசுவாசிக்கிறோம். எங்கள் அவிசுவாசத்தையும், எங்கள் மூடநம்பிக்கையையும் (superstitions) எறிந்து விடும்படி எங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்து, நாங்கள் ஜீவனுள்ள தேவனுடைய சமுகத்தில் நிற்கும்படி செய்யும். என் மனைவிக்கிருந்த கட்டியை எடுத்துப் போட்ட அதே தேவன் இப்பொழுது பிரசன்னராய் இருக்கிறார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்... அது இருந்தது உண்மையென்று தேசத்திலே நமக்குள்ள பிரபல மருத்துவர்களாலே பரிசோதிக்கப்பட்டு, படம் எடுக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டது. இப்பொழுதோ அது மறைந்து விட்டது. நீரே தேவன், உம்மைத் தவிர வேறே தேவன் இல்லை. உம்மை நாங்கள் நேசிக்கிறோம். ஏனெனில் நீர்... நாங்கள் உமது ஊழியராயிருக்க நீர் அனுமதித்திருக்கிறீர். எங்கள் வாழ்நாள் முழுவதும் உம்மை பயபக்தியோடும் கனத்தோடும் சேவிக்க அருள் புரியும். கர்த்தாவே, இதை அருள்வீராக. ஆண்டவரே, நானும், என் குடும்பமும், இந்த ஜனங்கள் எல்லோரும் பிரகாசிக்கும் விளக்குகளாகவும், உப்பாகவும் இருந்து, எங்களுக்கு அதிகமாய் செய்துள்ள இந்த இயேசுவின் பேரில் மற்றவர்களுக்கு தாகத்தை உண்டாக்குபவர்களாக இருக்கும்படி செய்யும். 34. இப்பொழுதும் நான் வேதாகமத்தைத் திறந்து, ஒரு சிறு பொருளுக்காக இதை படித்து, பிறகு வியாதியுள்வர்களுக்காக ஜெபிக்கும் போது, ஆண்டவரே, எனக்குதவி செய்யும். எங்களோடு பேசும், வியாதியஸ்தரை சுகப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். நீங்கள்... எனக்கு நேரமிருக்கிறதா-? ஒரு பொருளின் பேரில் துரிதமாக பேசினால், இப்பொழுது நீங்கள் படிக்க விரும்புகிறேன் (அல்லது குறித்துக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். முதலாம் பாகம் எண்ணாகமம் 21:5-9-ல் உள்ளது. அதை நாம் படிக்க விருப்புகிறோம் : ''ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன-? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு [தூதர்களின் ஆகாரம்] எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக்கடித்ததினால் இஸ்ராவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய் [பாவ அறிக்கை கவனியுங்கள்]: நாங்கள் ... பாவம் செய்தோம் சுகமடைவதற்கு செய்ய வேண்டிய முதல் காரியம் இதுவே. முதலாவது, பாவ அறிக்கை. "நாங்கள் பாவம் செய்தோம்." ....நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய் பேசினதினாலே பாவம் செய்தோம்; சர்ப்பங்கள் எங்களை விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணம்பப் பண்ண வேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின் மேல் தூக்கி வை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் இதை நோக்கிப் பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி அதை ஒரு கம்பத்தின் மேல் தூக்கி வைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்த போது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான். நான்: சகரியாவின் புத்தகத்திலிருந்தும் ஒரு வேத வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். 12-ம் அதிகாரம், 10-ம் வசனம். நான் தாவீது குடும்பத்தாரின் மேலும் எருசலேம் குடிகளின் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்: அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறது போல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறது; போல எனக்காக மனங்கசந்து தூக்கிப்பார்கள். இப்பொழுது ஒரு பொருளுக்காக, "பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள்'' என்பதை தெரிந்து கொள்ளப்போகின்றேன். உலகத்தினின்று பார்வையைத் திருப்பி, இயேசுவை நோக்கிப் பாருங்கள். மோசே சர்ப்பத்தை உண்டாக்கினான். என்ன நேரிடப் போகிறதென்று தீர்க்கதரிசி பின்பு எதைக் குறித்து பேசுகின்றான் - பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பார்த்தல். வேதம் ஏசாயா 45;22-ல், ''பூமியின் எல்லை எங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்'' என்று தேவன் கூறினதாக நாம் காண்கிறோம். இப்பொழுது பூமியானது அதன் முடிவை அடைந்துள்ள போது, அல்லது பூமியின் ஒழுங்கு அதன் முடிவை அடைந்துள்ள போது, ஜனங்கள் அவரை நோக்கிப் பார்ப்பார்களாக, ''இது ஒவ்வொரு சந்ததியிலும் கூறப்படுவதை நாங்கள் கேட்டிருக்கிறோம். இதை நாங்கள் நீண்ட காலமாக கேட்டு வருகிறோம்'' என்று நீங்கள் கூறலாம். அது உண்மை தான். அது நீண்ட காலமாக பிரசங்கிக்கப்பட்டு வருகிறது ... அநேக போதகர்கள் இதே பொருளை எடுத்து பேசி உள்ளனர் ஆயிரக்கணக்கானவர்கள். ஆனால் இன்றிரவு, அடுத்த சில நிமிடங்களுக்கு, உங்கனை நான் கேட்க விரும்புவது இதுவே. நீங்கள் நோக்கும் போது... கேள்வி என்னவெனில்: நீங்கள் நோக்கிப் பார்க்கும் போது எதைக் காண்கிறீர்கள்-? நீங்கள் எதை காண எதிர் நோக்குகின்றீர்களோ, அதை பொறுத்தது. அவர், ''பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்'' என்றார். மோசே, சர்ப்பத்தை மேலே உயர்த்தினான், அதை நோக்கிப் பார்த்தவர் எவரும் சுகமடைந்தனர். நீங்கள் எதைக் காண எதிர் நோக்குகின்றீர்களோ, அதை பொறுத்தது. 35. ஜனங்கள் கூட்டங்களுக்கு வந்து [இந்த கடைசி நாட்களில்] அவர்களால் ஓரிரண்டு நிமிடங்கள் மாத்திரம் உட்கார முடிவதை நான் கண்டிருக்கிறேன். அவ்வளவு தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிகிறது. அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. என்னால் மறக்க முடியாது... ஐயோவாவிலுள்ள யாரையும் இது பாதிக்கவில்லை என்று நம்புகிறேன். நான் வாட்டர்லூவில் கூட்டம் நடத்திய போது... சகோ. லீ வேயில், இன்று காலை அவர் இங்கிருந்தார். இன்றிரவு அவர் இங்கிருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. லீ, இங்கிருக்கிறீர்களா-? இன்று காலை அவர் இங்கிருந்தார். ஆம், பின்னால் ஒலிப்பதிவு செய்யப்படும் அறையில் ... அங்கு பின்னால், சரி. சகோ.லீயும் நானும் எங்களால் இயன்றதை செய்து, போதகர்களிடம் பேசுவதற்காக, போதகர்கள் சங்கத்தினருக்கு இலவசமாக காலை உணவு அளித்தோம். சகோ. லீ வேயில் ஒரு பண்டிதர், வேத சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் உண்மையில் படித்து, அந்த பட்டத்தை பெற்றார். எனவே இந்த லூத்தரன்கள், பிரஸ்பிடேரியன்கள் போன்றவர்களிடம் அவரை பேசும்படி கேட்டுக்கொண்டேன். அவரோ, "இல்லை, நீ பேசுவீரென்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்' என்றார். போதகர்கள் உணவு அருந்தி முடித்த பிறகு, "நான் பரம தரிசனத்துக்குக் கீழ்ப்படியாவனாய் இருக்கவில்லை'' என்னும் பொருளைத் தெரிந்து கொண்டேன். நான் வேத பாகத்தை படித்த உடனே, இரண்டு பேர் பார்த்தார்கள்... அவர்கள் வெளியே சென்று விட்டனர். பவுல் அவனுடைய காலத்தில் ஒரு வினோதமான ஊழியத்தைக் கொண்டிருந்தானென்றும், அவன் அகிரிப்பாவின் முன்னால் நின்று, அந்த பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை என்று கூறினான் என்றும் பேசத் தொடங்கின போது... மேலும் இரண்டு, மூன்று பேர் எழுந்து சென்று விட்டனர். அந்த பொருளைக் குறித்து ஏதாவதைக் கூறும் நேரம் வந்த போது, மூன்று அல்லது நான்கு பேர் மாத்திரமே அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தனர். மற்றவர் அனைவரும் எழுந்து போய் விட்டனர். 36. அதற்கு காரணம் இதுவே: ஒரு சுவிசேஷகனைக் குறித்து கேள்விப்படும் போது சிலர் கூட்டங்களுக்கு வருகின்றனர். அவர் உடுத்தும் முறைக்கும் ஜனங்களுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. அவர் சரியான உடைகளை உடுத்தியிராவிடில் - அவர்களில் சிலர், அன்றொரு நாள் ஒரு மனோதத்துவ நிபுணர், இவ்வாறு கூறக் கேட்டேன் - டாக்டர் நார்ராமோர், அருமையானவர், கிறிஸ்தவர் அவருடைய நிகழ்ச்சிகள் கே. ஏ.ஐ.ஆர் இல் எப்பொழுதும் ஒலி பரப்பப்படுகின்றது. அவர், "ஒரு மனிதனுக்கு புத்தி மாறாட்டம் ஏற்படுகின்றதென்று, அவன் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் உடை உடுக்காமல் இருப்பதில் இருந்தே அறிந்து கொள்ளலாம்'' என்றார் [அதாவது, பொது ஜனங்களுக்கு முன்னால் அவன் எப்படிப்பட்ட தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்று, உங்களுக்குத் தெரியும். அதுவே அவனுக்கு புத்திமாறாட்டம் ஏற்படுகிறது என்பதன் அறிகுறி. அப்படியானால் அதன் அடிப்படையில், என் வாழ்க்கை பூராவுமே நான் புத்தி மாறாட்டம் உள்ளவனாக இருந்து வந்திருக்கிறேன், ஏனெனில் நான் மேலுடை (overalis] போன்றவைகளை உடுத்துகிறேன், பாருங்கள். என் உத்தியோகத்துக்கு பொருந்தும்படி, நான் ஒரு குருவான-வரைப் போல் உடை உடுக்க வேண்டும். வேறு விதமாகக் கூறினால், ஒரு குருவானவராக இருக்க. இயேசு குருவானவரைப் போல் உடை உடுக்கவில்லை என்று எண்ணுகிறேன். அவர் ஒரு சாதாரண மனிதனைப்போன்று உடை உடுத்தார். அவர் ஜனங்களின் மத்தியில் சென்ற போது, பிரத்தியேகமான உடை ஒன்றும் உடுக்கவில்லை. இது வெறும் - பாருங்கள் எப்படி - மனிதரின் கருத்துக்களாம். அந்த மனோதத்துவ நிபுணரான டாக்டர் இந்த மனிதனைக் குறித்து என்ன நினைப்பார் என்று வியப்புறுகிறேன். அதாவது வேதாகமத்தில், ஒரு தீர்க்கதரிசி தன் ஆடைகளைக் கழற்றி ஜனங்களின் முன்னால் நிர்வாணியாய் நடக்க வேண்டுமென்று கட்டளை இடப்பட்டான். இக்காலத்தில், அவன் உண்மையில் புத்தி மாறாட்டம் உள்ளவனாக கருதப்படுவான். இல்லையா-? ஆனால் அவன் அவ்வாறு செய்ய வேண்டுமென்று தேவன் கட்டளை இட்டார். வேறொருவன் 340 மாதங்களாக [அப்படித் தான் நினைக்கிறேன்] ஒருக்களித்து படுத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது - ஒரு பக்கத்தில் (390 நாட்கள்... தமிழாக்கியோன். எசே.4:4-5], மறுபடியும் மறுபக்கம் ஒருக்களித்து படுத்து, அவன் சமைத்த ஒரு பானை' சிறுப்பயிற்றை சாப்பிட வேண்டியதாயிருந்தது. அவன் அதை ஒன்றாக கட்டி, பொங்கி, எல்லா நாட்களிலும் சாப்பிட வேண்டியதாயிருந்தது. அவன் படுத்துக் கொண்டே கையை நீட்டி பானையிலிருந்து ஒரு கைப்பிடியளவு எடுத்து சாப்பிட்டான். ஒரு அடையாளத்திற்காக இதை செய்தான். ஓ, ஜனங்கள் எவ்வளவாக தேவனுடைய வார்த்தையை விட்டு தூரம் செல்ல முடியும்-! அவர்கள் தேவனை விட்டு அகன்று செல்லும் அளவிற்கு கல்வி கற்றிருக்கிறார்கள். ஒரு மனிதன் தான் கல்வி கற்றவன் என்று பேசும்போது, அவன் தேவனிடமிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறான் என்று எனக்குத் தெரியும், ஒரு .... டாக்டர் பட்டம் [இதை நான் டாக்டர் வேயிலுக்கு விரோத மாய் கூறவில்லை, அவர் அப்படிப்பட்டவர் அல்ல). ஆனால் வழக்கமாக, ஒரு மனிதன் டாக்டர் பட்டத்தைப் பெறும் போது, அவன் அவ்வளவாக தேவனை விட்டு தூரம் சென்றிருக்கிறான் என்று தான் அர்த்தம் கொள்வேன். அவன் தன்னை வார்த்தைக்கும் தேவனுக்கும் நிலைபடுத்திக் கொண்டாலொழிய. 37. சிலர் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்று கேட்க வருகின்றனரென்று காண்கிறோம். அவர்கள் காணவரும் போது - நீங்கள் தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும் கர்த்தரைக் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி பேசுபவர் அவர்கள் கொண்டுள்ள கருத்தின் படியோ அல்லது படித்த மேதையாக இராமல் இருப்பாரானால், அவர் கொச்சை வார்த்தைகளை உபயோகிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்... அது தேவனை விட்டு தூரமுள்ள ஒன்று என்று கருதுகின்றனர். இயேசு பேசின எளிய மொழி, இன்று வரைக்கும் பேராசிரியர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏனெனில் அவர்கள் தங்கள் பாண்டியத்துக் கேற்ப அதை வியாக்கியானப்படுத்த முயல்கின்றனர். இந்தக் காலத்து மொழி தெருவில் பேசப்பட்ட மொழி ஆகும். எனவே ... ஏன், நமது அமெரிக்க ஐக்கிய நாடுளிலும் கூட, பேசப்படும் மொழிகளில் அதிக வித்தியாசம் காணப்படுகின்றது. தென்பகுதியை சேர்ந்த ஒருத்திக்கும், வடபகுதியை சேர்ந்த ஒருத்திக்கும் இடையே மொழி பெயர்த்து அர்த்தம் உரைப்பதற்கென, நான் பிளாரிடாவிலிருந்து நியூயார்க்குக்கு தொலைபேசியில் பேசி ஒரு ஸ்திரீயை செயின்ட்லூயிக்கு அழைக்க வேண்டியதாயிற்று. அவர்கள் பேசின மொழிகளில் அவ்வளவு வித்தியாசம் இருந்தது. நிச்சயமாக. காரியம் என்னவென்றால், ஜனங்கள் அப்படிப்பட்டவைகளை எதிர்நோக்கியிருக்கின்றனர்... தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக சிறந்த சொற்பொழிவுகளை. வாரத்தை வெளிப்படுதலே அது சரியென்பதற்கு ஆத்தாட்சியாம் - வார்த்தை வெளிப்படுதல். இதை அவர்கள் பார்ப்பதில்லை. உங்களுக்கு அறிவில் விளைந்த கருத்துக்கள் (intellectual conception) இருக்கவேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.... ஒரு வேதகலாசாலைக்குச் சென்று, எப்படி தலை வணங்குவதென்றும், ஓரிடத்தில் எப்படி நின்று கொன்டு பிரசங்கிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அப்படிப்பட்டவை, உண்மையில் பரிசுத்த ஆவியால் நிறைந்துள்ள ஒரு போதகரை மூச்சுத் திணறவைத்து விடும். அவை அனைத்தும் புத்தி கூர்மையால் விளைந்தவை. இந்த தேசம் முழுவதுமே அந்த வழியைத் தான் கொண்டிக்கிறது. அது கிறிஸ்துவைக் குறித்து அறிவில் விளைந்த கருத்தைக் கொண்டிருக்கிறது. அதைத் தான் அவர்கள் எதிர் நோக்குகின்றனர். கிறிஸ்து உங்களுக்குள் வாசமாயிருந்தால், நீங்கள் பண்டிதர்களாகவும், புத்தி கூர்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமென்று அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் கிறிஸ்துவைக் குறித்து அவர்கள் அத்தகை எண்ணம் கொண்டுள்ளனர். 38. வேறொரு காரியம், அவர் எப்படி இருக்க வேண்டுமென்று தங்கள் சொந்த அபிப்பிராயங்களை தங்கள் சொந்த கருத்துக்களை - ஏற்படுத்திக் கொள்கின்றனரே அன்றி, வார்த்தை என்ன கூறுகிறது என்பதை எடுத்துக் கொள்வதில்லை. அது தான் அவர்களுடைய முறை... எனவே - அவர்கள் இயேசுவையே பார்த்தாலும் கூட அவரை அடையாம் கண்டு கொள்ளத் தவறுகின்றனர். அவர்கள் பெந்தெகொஸ்தே நாளன்று அவ்வாறு செய்னர், அவர் மாமிசத்தில் இருந்த போது அவ்வாறு செய்தனர். அவர் தொழுவத்தில் இருந்த போது அவ்வாறு செய்தனர். அவர் எருசலேமின் தெருக்களில் நடந்து கொண்டிருந்த போது, அவ்வாறு செய்தனர். அவர் சிலுவையில் தொங்கின போது அவ்வாறு செய்தனர். அவர் அந்த வார்த்தையின் நிறைவேறுதலாக இருந்தார். ஆயினும், மேசியா பரலோகத்தின் நடை பாதையில் இருந்து நேரடியாக இறங்கி வருவார் போன்ற தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். ஏனெனில் அவை அறிவில் விளைந்த கருத்துக்கள். எனவே அவர்கள் அவரை முகமுகமாய் பார்த்த போதும், அவரைக் காணத்தவறினர். இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. நீங்கள் நோக்கும் போது எதைக் காண்கிறீர்கள்-? அவரை அவர்கள் நோக்கும் போது ஒரு புத்தி கூர்மையுள்ள மகத்தான சபை ஸ்தாபகரைக் காண எதிர் பார்க்கின்றனர் - ஜனங்கள் அனைவரும் பின்பற்றச் செய்யும் கோட்பாட்டை தயாரித்து அளிக்கக் கூடிய ஒருவரை. அவர்கள் காணும் போது, அதை தான் எதிர்பார்க்கின்றனர். சிலர் ஒரு கட்டுக்கதையைக் காண நோக்குகின்றனர் சான்டாகிளாஸ் போன்ற ஒருவரை. அவர்கள் வேதாகமத்தைப் படித்து விட்டு, ''ஓ, அது ஒரு கட்டுக் கதை. அது ஏதோ மனிதன் எழுதி வைத்தது'' என்கின்றனர். அப்படித் தான் அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் வேதாகமத்தைக் குறித்து கொண்டுள்ள அபிப்பிராயம் தான், தேவனைக் குறித்துப் கொண்டு உள்ள அபிப்பிரராயம், பாருங்கள். சிலர் ஒரு குழந்தையைக் காண நோக்குகின்றனர், சிலர் ஒரு முயலையோ அல்லது சான்டா கிளாஸையோ காண நோக்குகின்றனர், சிலர் நேற்றைய வரலாறு புத்தகத்தை நோக்குகின்றனர் - இன்றைய புத்தகத்தை அல்ல. ஆனால் கேள்வி என்ன எனில், நீங்கள் நோக்கும் போது. எதைக் காண்கிறீர்கள்-? 39. பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக உரிமைகோரும் உங்களில் அநேகர் நோக்கும் போது, திரித்துவத்தின் இரண்டாவது ஆளைக் காண்கிறீர்கள். அது வேதத்தில் கூறப்படவே இல்லை. அப்படிப்பட்ட ஒன்று கிடையாது. திரித்துவம் என்னும் சொல் வேதாகமத்தின் மேலுறைகளிலும் கூட கிடையாது. ஆயினும் நீங்கள் இயேசுவை நோக்கும் போது, அவரை மூன்றாவது ஆளாக, இல்லை இரண்டாவது ஆளாகக் கருதுகின்றீர்கள் அதன் காரணமாகத் தான் நீங்கள் எந்த நிலையும் அடையவில்லை. அவர் என்ன சொன்னார் தெரியுமா-? 'நானே தேவன். என்னைத் தவிர வேறே தேவன் இல்லை'' என்று. நீங்கள் எதை எதிர் நோக்குகின்றீர்களோ, அதை பொறுத்தது. நீங்கள் அதிர்ஷ்டம் கொண்டு வரும் சிறு பையனை (Mascot (boy) - தாடி வைத்துள்ள ஒரு கிழவனை - வைத்து, அப்படித் தான் நீங்கள் இயேசுவை தேவனில் இருந்து வித்தியாசப்பட்ட ஒருவராக காண்பீர்களானால், நீங்கள் தவறாகக் காண்கிறீர்கள் நீங்கள் அதை காணவேயில்லை. அண்மையில் நான் இருகண் தொலைநோக்கி மூலம் வயலில் இருந்த ஒரு மானைப் பார்த்தேன். என் மகன் அதை எனக்குக் காண்பித்தான். அவன் அப்பொழுது மிகச் சிறியவன். அவன், ''அப்பா தொலைநோக்கியை எடுத்து விடுங்கள். மான் அங்கேயே நின்று கொண்டு இருக்கிறது'' என்றான். நான், "என் இயற்கை கண்களினால் காண முடிகின்றது" என்றேன். அவன் , தொலை நோக்கியை எடுத்து விடுங்கள்'' என்றான். நான் தொலைநோக்கியின் மூலம் பார்த்தபோது, ஏறக்குறைய பத்து மான்களைக் கண்டேன். ஏனெனில் என் தொலை நோக்கியின் மண்டல மையம் (focus) சரிப்படுத்தப்படவில்லை. அதை நான் சரிப்படுத்தின போது, பத்து மான்களும் இணைந்து ஒரே மானாக ஆயின. அது போன்று உங்கள் சிந்தையை தேவனுடைய வார்த்தையின் பேரில் நீங்கள் சரிபடுத்தினால், மூன்றும் ஒன்றாகி விடும். ஆனால் உங்கள் வேத சாஸ்திர தொலைநோக்கியின் மண்டலமையம் சரிப்படுத்தப் படாததனால், அவரை மூன்று ஆட்களாக செய்து விட முயல்கின்றீர்கள். அவர் ஒருவரே. நீங்கள் எதை நோக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது, நீங்கள் நோக்கும் போது, எதைக் காண்கிறீர்கள்-? அவரை வார்த்தையின் மூலம் பார்த்தால் மாத்திரமே அவரைக் காண முடியும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவரை ஒரு பாட புத்தகத்தின் மூலம் காண முடியாது. அவரை ஒரு கோட்பாட்டின் மூலம் காணமுடியாது. அப்படியானால் அந்த கோட்பாடு களின் மூலாக அவரை 2, 3 தெய்வங்களாக நீங்கள் காண்பீர்கள். அவரை வார்த்தையின் மூலமாக பாருங்கள். அப்பொழுது அவர், இம்மானுவேல்... தேவன் நமது மத்தியில் மாமிசமானார்- என்பதைக் காண்பீர்கள். அவர், 'நானே தேவன், என்னைத் தவிர வேறே தேவன் இல்லை'' என்று கூறியுள்ளார். 40. ஏசாயா (அந்த தீர்க்கதரிசி) ஒரு சமயம் நோக்கினான். அவன் இயேசுவைப் பார்த்தபோது (என்னுடைய பொருள்: இயேசுவை நோக்கிப்பார்த்தல் - பார்வையைத் திருப்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள்.) ஏசாயா அவரைக் காண உலகத்தினின்று பார்வையைத் திருப்பின போது, அவன், “நான் ஆலோசனை கர்த்தரை, சமாதானப் பிரபுவை, வல்லமையுள்ள தேவனை, நித்திய பிதாவைக் காண்கிறேன்' என்றான். அதை தான் ஏசாயா தன் பார்வையைத் திருப்பிக் கண்டான். ஒரு சமயம் தானியேல் நின்று கொண்டு புறஜாதி ராஜ்யம் முடிவடைவதைக் கண்டான். அவன் நெபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட அந்த சொரூபத்தைக் கண்டான். அது தலையில் இருந்து இறங்கி வரும் போது, எவ்வாறு ஒரு ராஜ்யம் மற்றொரு ராஜ்யத்துக்குப் பின்பு தோன்றும் என்பதைக் கண்டான். முடிவில் என்ன நேரிடும் என்று காண அவன் நோக்கின போது, அவன், இயேசுவை, கைகளால் பெயர்க்கப்படாத மலையிலிருந்த ஒரு கல்லாக, புறஜாதி ராஜ்யத்தை நொறுக்குவதைக் கண்டான். நெபுகாத்நேச்சார் தேவனை விசுவாசித்து அவருடைய வார்த்தையில் உறுதியாய் நின்ற மூன்று எபிரேய பிள்ளைகளை எரிகிற அக்கினி சூளையிலே போட்டான். அவர்கள் அதற்காக மரிக்க நேரிட்டாலும், தாங்கள் கடைபிடித்ததில் உறுதியாய் நின்றன - வேறு' முறையில் தங்கள் முழங்கால்களை முடக்குவதை அவர்கள் சிறிய காரியமாகக் கருதவில்லை. நெபுகாத்நேச்சார் பார்வையைத் திருப்பி இயேசுவைக் கண்ட போது, அவர் அக்கினி சூளையில் இருந்த 4-வது ஆளாக இருந்தார். அது அவருக்கு கீழ்ப்படிந்த தாசர்களிடமிருந்து அக்கினியின் உஷ்ணத்தை அகற்றினது. அதை தான் நெபுகாத்நேச்சார் கண்டான். ஒரு நாள் அவரைக் காண எசேக்கியல் தன் பார்வையைத் திருப்பினான். அவர் "சக்கரத்துக்குள் சக்கரமாக' பூமியிலிருந்து எழும்பி ஆகாயத்தின் நடுவிலே இருந்தார் (எசே.1:16.) அவர் சக்கரத்துக்கு மையகுடமாக (hub) இருந்தார். அங்கு. தான் எல்லா அரைக்கால் பழுவும் (Spoke) இணைந்துள்ளன. ஆமென்-! பெரிய சக்கரம் விசுவாசத்தினால் சுழன்றது, ஆனால் அந்த சிறிய சக்கரமோ கர்த்தருடைய வல்லமையினால் சுழன்றது. எசேக்கியல் பார்வையைத் திரும்பின போது, அவரைத் தான் கண்டான். ஒரு நாள் யோவான் ஸ்நானன் பார்வைத் திருப்பின போது, ஒரு புறாவைக் கண்டான், ஒரு சத்தம், "இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குள் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்" என்றது. அதைத்தான் அவன் கண்டான். அப்பொழுது அவன், இயேசுவும் தேவனும் ஒரே ஆள் என்பதை கண்டு கொண்டான். ஏனெனில் ஆவியானவர் புறாவைப் போல் இறங்கி வந்து, "இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குள் வாசமாயிருக்க பிரியமாய் இருக்கிறேன்'' என்றார். அதைத்தான் அவன் கண்டான். கவனியுங்கள், அந்த வழியில் தான் அவர் தம்மை அடையாளம் காண்பிக்கிறார். 41. அவரைக் காண நோவா பார்வையைத் திருப்பின போது அவருடைய வார்த்தையைப் புறக்கணித்த இவ்வுலகக்த்தின் மீது, தேவனுடைய நியாயமான நியாயத் தீர்ப்புவருவதைக் கண்டான். அவன் பார்வையைத் திருப்பின போது, அதை தான் அவன் கண்டதாக நோவா கூறினான். மோசே பார்வையைத் திருப்பின போது, அவன் ஒரு முட் செடி எரிகிறதைக் கண்டான், மோசே அதனருகில் சென்ற போது', அக்கினி ஸ்தம்பம் தன்னை அந்த முட்செடியில் இறக்கியிருந்தது, அவர், " உன் பாதரட்சைகளைக் கழற்றிப் போடு, நான் இருக்கிறேன்'' என்றார். ''இருக்கிறேன்'' என்னும் சொல்லை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், அது இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலமென்னும் மூன்று காலங்களுக்கும் உரியது. இருக்கிறேன் - நித்தியமானவர், பாருங்கள், இருக்கிறேன். அவன், இருக்கிறேன் என்பவரைக் கண்டான். அவரைத்தான் அவன் எரிகிற முட்செடியில் கண்டான். மோசே உண்டாக்கின வெண்கல சர்ப்பத்தை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டு, வியாதியஸ்தர்கள் சுகமடைவதற்காக இயேசு பட்ட துன்பங்களை முன்கூட்டி அறிந்தனர். சர்ப்பம் பிராயச்சித்தத்துக்கு எடுத்துக் காட்டாக இருந்தது. இயேசுவே அந்த பிராயச்சித்தம். "சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும்... உயர்த்தப்பட வேண்டும்.'' (யோவான் 3:14-15) அதே நோக்கத்துக்காக. ஏன்-? அவர்கள் பாவம் செய்து வியாதிப்பட்டனர். பாவங்களையும் வியாதியையும் போக்குவதற்காக அது செய்யப்பட்டது. நம்முடைய மீறுதல்களினிமித்தம் இயேசு காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம் (ஏசா.53:5). கிறிஸ்துவிலிருந்து நீங்கள் தெய்வீக சுகமளித்தலை எடுத்து விட்டால், பிராயச்சித்தத்தை நீங்கள் இரண்டாக முறித்து விடுகிறீர்கள். 42. நீங்கள் நோக்கும் போது எதைக் காண்கிறீர்கள்-? அதை நீங்கள் காண்கிறீர்களா-? நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம் என்பதைக் காண்கிறீர்களா-? உங்கள் பார்வையை திருப்பும் போது, உங்களால் அதை காணமுடிகிறதா-? அல்லது பிராயச்சித்தத்தின் ஒரு பக்கத்தை மாத்திரமே உங்களால் காண முடிகிறதா-? நீங்கள் நோக்கும் போது, உங்களால் இரண்டு பக்கங்களையும் காண முடிகிறதா-? நீங்கள் இதை கோட்பாட்டின் மூலம் நோக்கினால் அவர்கள் "தெய்வீக சுகமளித்தலின் நாட்கள் முடிந்து விட்டன'' என்று கூறுவார்கள். ஆனால் நீங்கள் அதை வார்த்தையின் மூலம் நோக்கினால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதைக் காண்பீர்கள். கொந்தளிக்கும் கடலில் சீஷர்கள் இருந்த போது, அவர்கள் அவரை நோக்கிப் பார்த்தார்கள். அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய ஒரே உதவி வருவதை அவர்கள் கண்டார்கள். மரணம் நேர்ந்த போது, மார்த்தாள் அவரை நோக்கிப் பார்த்தாள். அவர் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார் என்பதைக் கண்டாள். ஆமென்-! அவரை நோக்கின போது, மார்த்தாள் கண்டாள் - அவர் அவளுடைய ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தார். அவர் நிராகரிக்கப்பட்டிருந்தார். அவள் அவருக்கு ஆள் அனுப்பின் போது கூட, அவர் அவளுடைய சகோதரனிடம் வரவில்லை. ஆனால் முடிவில் அவர் வந்த போது, அவரை நோக்குவதற்கென அவள் அவர் கால்களில் விழுந்தாள். அவர் உயிர்த்தெழுலும் ஜீவனுமாய் - இவ்விரண்டுமாய் இருக்கிறார் என்பதை கண்டுக் கொண்டாள். ஆமென்-! இயேசு அதே காரியத்தை ஒரு இரகசிய விசுவாசிக்குச் செய்தார்: உண்மையாக விசுவாசித்த ஒரு பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு; ஆனால் அவனுடைய ஸ்தாபனம் அவனை அனுமதிக்காததனால், அவன் வரமுடியவில்லை. அப்படி செய்தால் அவன் சபை பிரஷ்டம் செய்யப்படுவான். ஆனால் அவனுடைய ஒரே சிறு குமாரத்தி மரணத்தருவாயில் இருந்த படியால், அவன் கண்டிப்பாக போக வேண்டியதாயிற்று. அவன் அவரைக் கண்டு கொண்டான். செய்தி கொண்டு வரும் ஒருவன் ஓடி வந்து, "போதகரை வருத்தப்படுத்த வேண்டாம், உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள்' என்றான். அவனுடைய இருதயம் நின்று விடும் போல் இருந்தது. ஆனால் அவரோ, 'நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்கு சொல்லவில்லையா-?' என்றார். யவீரு இயேசுவை நோக்கின போது, அவர் மரித்தோரை உயிரோடெழுப்ப முடியும் என்பதைக் கண்டு கொண்டான் . பசியுள்ளோர் அவரை நோக்கிப் பார்த்து, ஜீவனை அளிக்கும் ஆகாரத்தைப் பெற்றுக் கொண்டனர். அது சரீரத்துக்கான உணவு. ஆனால் ஆவிக்குரிய விதமாய் பசியுள்ளோர் அவரை நோக்கிப் பார்த்து அவர், ஜீவ அப்பம் என்பதைக் கண்டு கொள்ள முடியும். 43. சிலுவையில் மரித்துக் கொண்டிருந்த கள்ளன், அவனால் என்ன காணமுடியுமென்று அறிய, இயேசுவை நோக்கிப்பார்த்த போது, அவனுடைய மன்னிப்பை அவரில் பெற்றுக் கொண்டான்." ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்.'' இயேசு அவனை நோக்கி, "இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்" என்றார் (லூக் 23:42-43). அவனுடைய மரணவேளையின் போது அதைத் தான் அவன் கண்டான். வியாதியஸ்தர் அவரை நோக்கிப் பார்த்து, சுகமளிப்பவரைக் கண்டனர். குருடர் அவரை நோக்கிப் பார்த்து பார்வை அடைந்தனர். நீங்கள் எதை நோக்கிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் எதை நோக்கிப் பார்க்கிறீர்கள்-? பேதுருவும் நாத்தான்வேலும் நோக்கி அவர்களுடைய தீர்க்கதரிசியாகிய மோசே வாக்களித்திருந்த" உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்க தரிசியை எழும்பப் பண்ணுவார், அவரிடத்தில் ஜனங்கள் சேர்ந்து கொள்வார்கள். அந்த தீர்க்க தரிசியின் சொற்கேளாதவனெவனோ - (அவரை விசுவாசியாதவன்) - இவன் ஜனங்களின் மத்தியிலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்னும் வார்த்தை வெளிப்படுவதைக் கண்டனர். [அப். 3:23]. பேதுரு இயேசுவின் சமுகத்தில் சென்ற போது, அவர்," உன் பெயர் சீமோன். நீ யோனாவின் குமாரன்" என்றார். அவன் இயேசுவை முதன் முறையாக பார்த்த பொழுதே, அவர் என்னவாய் இருப்பார் என்று தேவனுடைய வார்த்தை உரைத்ததன் நிறைவேறுதலாக இருந்தார் என்பதை உடனடியாக கண்டுக் கொண்டான். நீங்களும் அவரை முதன் முறையாக பார்த்த பொழுது அதையே கண்டு கொண்டீர்களா என்று வியப்புறுகிறேன். அவரை நீங்கள் பார்த்த பொழுது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை தன்னை உங்களுக்கு வெளிப்படுத்தினதா என்று வியப்புறுகிறேன், நாத்தான்வேல் இயேசுவின் சமுகத்தில் வந்தவுடனே, சிறிது சந்தேகம் கொண்டிருந்தான். பிலிப்பு அவனிடம் சென்று, " நாங்கள் யாரைக் கண்டோம் என்று வந்து பார்'' என்றான் என்று காண்கிறோம். நாத்தான்வேல் வந்து, " அவர் எங்கே-?'' என்றான். அவன், " அதோ வியாதியஸ்தர்களுக்கு ஜெபம் செய்து கொண்டிருக்கிறாரே, அவராகத் தான் இருக்க வேண்டும்" என்றான். அவரைக் காண்பதற்காக இவன் கூட்டத்தை தள்ளிக் கொண்டு முன்னால் சென்றான். இயேசு அவனைக்கண்ட போது, "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்,'' என்றார் (யோவான் 1:47). அவன், "ரபி, நீர் என்னை எப்படி அறிவீர்-!'' என்றான் . அவர், '' பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்தி மரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்'' என்றார். 44. நாத்தான்வேல் எதை கண்டு கொண்டான்-? இஸ்ரவேலின் ராஜா அங்கிருக்கிறார் என்பதைக் கண்டு கொண்டான். அவன், "நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா" என்றான். அவன் நோக்கின போது, அதை்ததான் அவன் கண்டான். வேத வாக்கியத்தின் வியாக்கியானம் அவனுக்கு முன்னால் வெளிப்படையானதை அவன் கண்டான். அவன் அதை கண்டான்" என்னைப் போல் அவர், ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பார்'' என்று அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசியாகிய மோசே உரைத்த அதே வேதவாக்கியம், கிணற்றண்டை இருந்த ஸ்திரீ ஒரு சமயம் நோக்கினாள். அவள் என்ன கண்டாள்-? அவள் அதை பட்டினத்தில் அறிவித்தாள். அவள், "நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன மனிதனை வந்து பாருங்கள். அவர் மேசியாவல்லவா-? என்றாள். அவள் முதன் முறையாக இயேசுவை நோக்கின போது மேசியாவைக் கண்டாள். இன்றைக்கு ஜனங்கள் அதையே கண்டு, அதை மனோசக்தியினால் அறிவித்தல் (mental telepathy) என்றழைக்கக் கூடும். அது ஆவிகளுடன் தொடர்பு கொண்டு செய்யப்படுதல் (spiritualism) என்றழைப்பார்கள். எந்த விதமான பிசாசின் பெயரைக் கொண்டும் அதை அழைப்பார்கள். ஏனெனில் அவர்கள் எதை நோக்குகின்றனர் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆமென். அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் ஒரு கோட்பாட்டை எதிர் நோக்கி இருக்கின்றனர். சபையை ஒழுங்குபடுத்த அவர்கள் ஒரு மேதையை எதிர் நோக்குகின்றனர். அவர்கள் அதிக அங்கத்தினரை எதிர் நோக்கி இருக்கின்றனர். ஆசிர்வதிக்கப்பட்ட இயேசுவை. அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட தமது வார்த்தையில் காணத் தவறுகின்றனர். அது உண்மை . நீங்கள் எதை எதிர்நோக்கி இருக்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தது. இன்றைக்காக அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறுவதை நீங்கள் எதிர்நோக்கினால், அதை காண்பீர்கள். ஆனால் நீங்கள் புத்தி கூர்மை கொண்ட யாரையாவது எதிர்நோக்கினால் அவர்கள் எப்பொழுதுமே அப்படிப்பட்ட ஒருவரை எதிர் நோக்கி வந்துள்ளனர் - பெரிய ஸ்தாபகரை, பெரிய சரித்திரக்காரரை, அப்படிப்பட்ட ஒருவரை எதிர் நோக்கினால், அதை நீங்கள் காணத் தவறுவீர்கள். ஆனால் அவரை நீங்கள் வார்த்தையின் மூலம் நோக்கினால், அவர் யாரென்பதை வார்த்தை பிரகடனம் செய்யும். அவர் தமது காலத்திலுள்ள ஜனங்களிடம், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யும்படி சவால் விடுத்தார். அவர்களால் அவரைக் காண முடியவில்லை. அவர், "குருடருக்கு வழிகாட்டிகிற குருடர்களே, மோசே உங்களுடைய தீர்க்கதரிசி என்று உரிமை கோருகின்றீர்களே. நீங்கள் மோசேயை அறிந்தால் என்னையும் அறிவீர்கள். மோசே என்னைக் குறித்து எழுதியிருக்கிறான் என்றார். அதைக் காணக் கூடாதபடிக்கு அவர்கள் குருடராய் இருந்தனர். அதை நேரடியாக அவர்கள் நோக்கின போதும், அதைக் காணக் கூடாதபடிக்கு அவர்கள் குருடராயிருந்தனர். சில நிமிடங்களுக்கு இன்று காலையில் அந்த கண் கூசும் ஒளியை (glare) புறாவின் சிறகுகளைப் போல் இணைத்து காண்பிக்கிறேன், அவர்கள் நோக்குகின்றன. ஆனால் அவர்கள் எதை எதிர்நோக்குகின்றனர் என்பதை அறியாமல் இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் கண்டு பிடிக்க முயற்சிப்பதைக் குறித்து தவறான கருத்தைக் கொண்டு உள்ளனர். நீங்கள் எதை எதிர் நோக்குகின்றீர்கள் என்று அறியாமலிருந்தால், நீங்கள் காண விழைவதை எப்படி கண்டு கொள்வீர்கள் 45. ஒரு பூசணிக்காயை நீங்கள் பார்த்திராமல், அதைக் குறித்து கேள்வியும் படாமல், அதை எப்படி நீங்கள் தேடிச் செல்ல முடியும்-? தர்ப்பூசணிப்பழம் என்று ஒன்றுள்ளது என்று அறியாமல், அது எப்படி இருக்கும் என்று அறியாமல், நீங்கள் எப்படி ஒன்றைக் கண்டு பிடிக்க முடியும்-? நீங்கள் ஒரு தொட்டியைப் பார்த்து விட்டு, அது தான் தர்ப்பூசணிப்பழம் என்று நினைத்துக் கொள்ளலாமே. வேறெதாவதொன்றைப் பார்த்து விட்டு, ஒரு மரக்கட்டையை பார்த்து விட்டு, அது தர்ப்பூசணிப்பழம் என்று நினைக்க வகையுண்டு. நீங்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்தவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் எதைக் காணத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளக் கூடிய ஒரே வழி - நீங்கள் இயேசுவைக் காணத் தேடிக் கொண்டிருந்தால், நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு செல்வீர்கள். ஏனெனில் அவரே வார்த்தையாய் இருக்கிறார்... (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி). தேவன் பிதாக்களிடம் தீர்க்கதரிசிகளை அனுப்பின் போது, அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்று கல்லறையில் அடக்கம் செய்தனர். " வந்த தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவரையும்''. இயேசு, "அவர்களில் யாரை உங்கள் பிதாக்கள் கல்லெறியாமல் இருந்தார்கள்-? உங்கள் பிதாக்கள் செய்த கிரியைகளையே நீங்களும் செய்வீர்கள்'' என்றார். ஆமென்-! நீதிமான்கள், பரிசுத்தவான்கள், உங்கள் விரலைச் சுட்டிக் காட்ட முடியாதவர்கள். ஆயினும் இயேசு அவர்களை சர்ப்பங்கள் என்றும், பிசாசுகள் என்றும் அழைத்தார். நீங்கள் எதை எதிர்நோக்குகின்றீர்கள்-? நீங்கள் பக்தியுள்ள யாரையாகிலும் எதிர் நோக்கினால் - சிலர் நினைக்கின்றனர். பரிசுத்த ஆவி உங்களில் கிரியை செய்வதால், அது நீண்ட பக்தியுள்ள ஒருவராக - அது பரிசுத்த ஆவியல்ல. தேவன் அப்படிப்பட்ட தேவ தூதர்களுடன் ஈடுபடுவதில்லை - தேவ தூதர்கள் என்று கருதப்படுபவர்களுடன். தேவன் மனிதன் மூலமாகவே தொடர்பு கொள்கிறார். ''எலியா என்பவன் நம்மைப் போலப்பாடுள்ள மனிதனாய் இருந்தான்'' என்று வேதம் கூறுகின்றது, (ஆங்கிலத்தில் "Elias was a man subiect to like passions as we are" என்று எழுதப்பட்டுள்ளது -- அதாவது நம்மைப் போல் உணர்ச்சி கொண்டவன் - யாக். 5:17). ஆனால் நீங்கள் இயேசுவைக் காணும் வரைக்கும் அவருடன் கூட இருக்க முடியாது. அலங்கார வாசலண்டையிலே பேதுருவும் யோவானும் அந்த சப்பாணியை சுகப்படுத்தின விஷயத்தை அவர்கள் கேள்விப்பட்ட போது, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமை உள்ளவர்களென்றும் அறிந்து, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்றும் அறிந்து கொண்டார்கள் (அப், 4:13). ஏனெனில் அவருடைய ஜீவன் அவர்கள் மூலமாய் பிரதிபலித்தது. 46. நீங்கள் எதை எதிர்நோக்கி இருக்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தது, அந்த ஸ்திரீ வேதத்தைப் படித்திருந்தாள் மேசியா வரப்போகிறாரென்றும், அவர் என்ன செய்வாரென்றும் அவள் அறிந்திருந்தாள். இயேசு அவளிடம் "தாகத்துக்குத் தா என்று கேட்ட போது அவள், ''அது வழக்கமல்லவே'' என்றாள். அவர் ஒரு சாதாரண மனிதனாகக் காணப்பட்டார். அவர் அங்கு பெரிய தலைப்பாகையுடனும், ஆபரணங்களை அணிந்து கொண்டும் (பரிசுத்த மனிதனைப் போல) உட்கார்ந்திருப்பாரானால், அந்த ஸ்திரீ, ''அதோ ஒரு ஆசாரியர்' அல்லது ''அதோ ஒரு ரபீ'' என்று சொல்லி போயிருப்பாள். குருவானவரோ, யாரோ ஒருவர் - இன்று நான் உண்ண சென்ற இடத்தில் ஒரு மனிதனைக் கண்டேன். அவர் உள்ளே நுழைந்த போது, அவர் போதிய சிலுவைகளை அணிந்து கொண்டு இருந்தார். அவர்கள் அப்படி அணிந்து கொண்டிருப்பது சில நேரங்களில் நல்லதாகத் தோன்றுகிறது. ஆனால் ஒரு மனிதன் தன் வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமென்பதே என்னுடைய கருத்து. நீங்கள் யாரென்பதை நிரூபிக்க, குருவானவரின் உடைகளை நிறைய அணிந்து கொள்ள வேண்டுமெனும் அவசியமில்லை. சில சமயங்களில் அவர்கள் மது அருந்தியும், புகை பிடித்தும், இப்படிப்பட்ட செயல்களில் அதிகமாக ஈடுபடுவதால், அவர்கள் குருவானவர் என்று அறிந்து கொள்ள குருவானவர்களின் உடைகளை அணிந்து கொள்ள வேண்டியதாய் உள்ளது. அது உண்மை. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு மனிதன் உடுக்க வேண்டிய குருவானவரின் உடை பரிசுத்த ஆவியின் அபிஷேகமே. அதுவே நீங்கள் இயேசுவுடன் கூட இருந்தவர்கள் என்பதை அடையாளம் காண்பிக்கும், நீங்கள் எதை காண எதிர்நோக்கி இருக்கின்றீர்களோ அதை பொறுத்தது என்று நாம் காண்கிறோம். நீங்கள் நன்றாக உடை உடுத்தி, ஒரு விதமான தலைப்பாகை அணிந்து, ஒழுங்காகக் காணப்படும் ஒருவரைக் காண எதிர் நோக்கி இருந்தால், அவரை காணவே மாட்டீர்கள். ஏனெனில் அவர் ஒரு சாதாரண மனிதனாய் இருந்தார். தேவன் மனிதனுடன் தொடர்பு கொள்கிறார். இயேசு ஒரு மனிதனாக இருந்தார். தேவன் அந்த மனிதனுக்குள் இருந்தார், அவர் தேவனானார், நாம் பார்க்கிறோம், அவள் செய்த தவறை; அவள் இருதயத்தில் மறைந்திருந்ததை அவளிடம் எடுத்துக் கூறின அந்த அறிவுக் கெட்டாத அடையாளத்தை அந்த ஸ்திரீ கண்ட போது, அவர் மேசியா என்று அப்பொழுதே கண்டு கொண்டாள். அவள் இயேசுவை நோக்கின போது மேசியாவைக் கண்டாள். மேசியாவின் கிரியைகள் எவை-? இருதயத்திலுள்ள இரகசியங்களை அறிவது. அது உங்களை சரியாகப் பற்றிக் கொண்டதா-? உங்களால் புரிந்து கொள்ள முடியுமா என்று வியப்புறுகிறேன். இன்றிரவு அவரைக்கான நீங்கள் எதிர்நோக்குவீர்களானால், நீங்கள் எதை எதிர் நோக்குவீர்கள்-? அவர் மாறாதவராக இருப்பார். மேசியா என்பவர் வார்த்தை... வார்த்தை. வேதம் எபிரேயர் 4-ம் அதிகாரத்தில், "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், உருவக் குத்துகிறதாயும்' இருதயத்தின் நினைவுகளையும் யோசனையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது'' என்று கூறுகிறது (பி. 4:12). மேசியா அந்த வார்த்தை வெளிப்படுபவராக இருக்க வேண்டுமென்றும், அவளுடைய தவறுகளை அவரால் எடுத்துரைக்கு முடியுமென்றும் அவள் அறிந்து இருந்ததனால், அவர் மேசியா என்பதை கண்டு கொண்டாள். அவர் எப்படி உடுத்தி உள்ளார் என்றோ, அவர் எவ்வளவு படித்திருக்கிறார் என்றோ அல்ல, ஆனால் அவர் காண்பித்த அடையாளத்தின் மூலமாக அவர் மேசியாவென்று அறிந்தாள். எனவே அவள் இயேசுவைக் கண்ட போது மேசியாவைக் கண்டாள். 47. இந்த அபிஷேகம் பண்ணப்பட்ட காலத்துக்கு தேவன் ஒரு மனிதனுக்குள் இருந்தார். ஆனால் உங்களுக்கு இது தெரியுமா-? நான் பேசிக் கொண்டிருந்த அந்த காலங்கள் அதைக் காண இயலவில்லை. அவர்கள், அநேகர் அதைக் காணவில்லை. இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. அநேகர் மோசேயை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அநேகர் எலியாவை அடையாளம் கண்டு கொள்ளவில்லை... அவர்கள் மரிக்கும் வரைக்கும், அவர்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் மரித்த பிறகு, அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர். நோவாவின் காலத்தில் அவிசுவாசி அதன் பிறகே - அவிசுவாசி எதை நோக்கினான்-? விசுவாசி எதைக் கண்டான் என்று உங்களிடம் கூறினேன். இப்பொழுது அவிசுவாசிகள் எதைக் கண்டார் என்று நாம் பார்க்கலாம். நோவாவின் காலத்திலிருந்து அவிசுவாசிகள் நோக்கின போது எதைக் கண்டனர்-? பேழை என்று அழைக்கப்படும் ஒன்றை வைத்துக் கொண்டு பெருந்தவறு செய்யும் ஒரு மூடபக்தி வைராக்கியம் உள்ளவனைக் கண்டனர். அதை மாத்திரமே அவர்கள் கண்டனர் - விஞ்ஞான ஆய்வுகளையும் நிரூபணங்களையும் எதிர்த்து, ''மேலே தண்ணீர் உள்ளது'' என்று கூறும் நீண்ட தாடியுடைய , புத்தி மாறாட்டம் ஏற்பட்ட ஒரு பைத்தியக்காரக் கிழவனை, அந்த ஏழை கிழவனுக்காக அவர்கள் பரிதாபம் கொண்டனர். அவனை அவர்கள் கடந்து சென்ற போது, ''விரைவில் அவன் பைத்தியக்காரன் என்று தீர்மானிக்கப்படுவான். அவனுக்கு புத்தி மாறாட்டம் ஏற்பட்டுள்ளது'' என்றனர். ஆனால் அவனிடமோ கர்த்தருடைய வார்த்தை இருந்தது. அதன் அடிப்படியில் அவன் பேழையைக் கட்டிக் கொண்டு சென்றான். வெள்ளம் வரப்போகிறதென்று தேவன் அத்தாட்சிகளைக் காண்பித்து வந்தார். பேழை அவர்களுக்கு ஒரு அடையாளமாக இருந்தது. நோவா கூறினதை விசுவாசியாதவர்கள் அந்தகாரத்துக்குள் அலைந்து திரிந்து, தண்ணீர் மரணத்திலும் பாதாளக் கல்லறையிலும் முடிவடைந்தனர். பார்வோன் - அவன் ஒரு முறை நோக்கினான். அவன் எதைக் கண்டான். பார்வோன் கண்டது என்ன-? - அவன் ஒரு மூடபக்தி வைராக்கியம் கொண்டவனை, தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுபவனை, மீட்பிற்காக அநேக உபாயங்களைக் கொண்டு உள்ளதாக உரிமை கோரும் ஒருவனைக் கண்டான். அவன் கண்டு கொண்டது அவ்வளவு தான் - மண் பிசைபவன், ஜனங்களின் மத்தியில் நின்று கொண்டு, அற்புதங்களைச் செய்யத் தான் தேவனால் அனுப்பப்பட்டவன் என்று கூறிக் கொண்ட ஒரு அடிமை. ஏன், அவனுக்கு புத்தி மாறாட்டம் ஏற்பட்டு விட்டதாக அவர்கள் கருதினர்..." அவன் பிதற்றிக் கொண்டிருக்கட்டும். சிறிது கழிந்து அவன் பைத்தியக்காரன் என்று அறிவிக்கப்படுவான்'' என்றனர். ஆனால் அவனிடம் ''கர்த்தர் உரைக்கிறதாவது' என்பது இருந்தது. ஆரோன், யோசுவா போன்ற அநேக விசுவாசிகள் மோசேயில் தேவனைக் கண்டனர். மோசே, தேவனுடைய கிரியைகளைக் செய்தான், அதன் காரணமாகத் தான் தேவன் மோசேக்குள் இருந்தார் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். அவர்கள் நோக்கி, மோசேயில் தேவனைக் கண்டனர். 48. ஐசுவரியவான் அவரை நோக்கி, அவர் யாரென்பதை சரியாக கண்டான். ஆனால் அவன் அவரைப் பின்பற்ற மறுத்தான். அவன் உலகக் காரியங்களின் மேல் மிகவும் அதிகமாக விருப்பங் கொண்டிருந்ததால், அவனால் இயேசுவைப் பின்பற்ற முடியாமல் போயிற்று. இப்படிப்பட்ட எத்தனையோ ஐஸ்வரியமுள்ளர் இந்த ஒலி நாடாவை கேட்க வகையுண்டு. நீங்கள் பணத்தினால் மாத்திரம் ஐசுவரியமுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. நீங்கள் இச்சைகளிலும், இந்த வாழ்க்கையின் இன்பங்களிலும் கூட ஐசுவரியம் உள்ளவர்களாய் இருக்கலாம். எத்தனை மனிதர்கள், எத்தனை வாலிபப் பெண்கள், எத்தனை வாலிபர்கள் தாங்கள் இனக்கவர்ச்சி ராணிகள்; அல்லது ஒரு 'பாஞ்சோ -! (banjo)வையோ அல்லது ஒரு 'கிட்டாரை' (guitar)யோ கையில் வைத்துக் கொண்டு 'ராக் அண்டு ரோல்' இசையினால் மக்களை மகிழ்விக்கும் ரிக்கி'கள் என்று தாங்கள் பெற்றுள்ள கீர்த்தியை விட்டு விட மனதில்லாது இருக்கின்றனர்-? அத்தகைய கீர்த்தியின் ஐசுவரியத்தைக் கொண்டுள்ள எத்தனை பேர், இந்த கூட்டங்களில் அமர்ந்து தேவனுடைய கரம் அசைவாடி அவருடைய வார்த்தையை பிரகடனம் செய்வதைக் கண்ட பிறகும், அதை விட்டுவிட மறுக்கின்றனர்-? எத்தனை பேர் அப்படி செய்வார்கள்-? அந்த ஐசுவரியவான் தன் வாழ்க்கையைக் கடைபிடிக்க தன் ஸ்தாபனத்தை தெரிந்து கொண்டான். அவனுடைய ஸ்தாபனத்திற்கு இயேசு மூடபக்தி வைராக்கியமுள்ள ஒருவராக காணப்பட்டார். எனவே அவன் இயேசு கூறினதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அவன் ஸ்தாபனம் கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவன், ஏன் அவனுடைய குருவானவரிடம் சென்று, ''நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்-?'' என்று கேட்கவில்லை-? அவனுடைய குருவானவருக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியாது என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அவன் இயேசுவினிடம் வந்து, ''நான் என்ன செய்ய வேண்டும்-? என்று கேட் டான். இயேசு, "கற்பனைகளைக் கைக்கொள்'' என்றார் ( அதை அவனுடைய மடியிலே எறிந்தார்). அவன், ''நான் கைக்கொண்டிருக்கிறேன்'' என்றான். அவர், "கற்பனைகளைக் கைக்கொள்'' என்றார். அவன் அதைக் கைக்கொண்ட போதிலும், நித்திய ஜீவனைப் பெற்றிருக்கவில்லை. அவன் பெற்றிருக்கவில்லை என்பதை அறிந்திருந்தான். நீங்கள் எல்லா கற்பனைகளையும் கைக்கொள்ளலாம், ஆயினும் நீங்கள் நித்திய ஜீவனைப் பெறாமல் இருக்கிறீர்கள். எனவே இயேசு, 'நீ சரியானதை செய்ய விரும்பினால், உனக்குண்டானதெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு; பின்பு என்னைப் பின்பற்றிவா'' என்றார். அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 49. அவன் அவரை நோக்கி, அவர் யாரென்பதை கண்டான், ஆயினும் அதை ஏற்க மறுத்தான் என்று காண்கிறோம். அவனுடைய அடுத்த பார்வை பாதாளத்திலிருந்து. அவன் மேலே நோக்கி, லாசருவை ஆபிரகாமின் மடியில் கண்டான். ஒரு சமயம் இயேசுவை அவர்கள் கொண்டு வந்த போது. பிலாத்து அவரை நோக்கினான். அதற்கு முன்பு அவன் அவரைப் பார்த்ததேயில்லை - அவருடைய கைகள் கட்டப்பட்டிருந்தன; அவருடைய முதுகிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது; அவருடைய தலையில் முட்கிரீடம் இருந்தது. பிலாத்துவுக்கு அவரைக் குறித்து உறுதி ஏற்பட்டது. ஏனெனில் ஒரு குதிரை தெருவின் வழியாய் அதிவேகமாக பாய்ந்து வந்தது. சவாரி செய்தவன் கீழே குதித்து ஓடி வந்து, ''உங்கள் மனைவி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்" என்றான். பிலாத்து அதைப் படித்தான். அவள், ''என் அன்புள்ள கணவர் பிலாத்துவே, நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகுபாடுபட்டேன்" என்று எழுதியிருந்தாள் (மத். 27: 19), அவன் நடுங்கினான், அவனுடைய முழங்கால்கள் மோதிக்கொண்டன. அவன், "நீ தேவனுடைய குமாரனேயானால், நீ ராஜாவானால், வாயைத் திறந்து ஏன் சொல்லக் கூடாது-?'' என்றான். அவர், ''நீர் சொல்லுகிறபடி நான் ராஜா தான்'' என்றார் (யோவான் 18: 37). அவன், "உண்மையைச் சொல்'' என்றான். அவர், ''இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்'' என்றார். பிலாத்து ஆச்சரியப்பட்டான். அவன் எல்லோருமே கெஞ்சி, அழுது, காலில் விழுந்தனர். அவன், " உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டு, உன்னை விடுதலை பண்ண எனக்கு அதிகாரமுண்டு'' என்றான். (யோவான் 19: 10). இயேசு, "பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால் என் மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது'' என்றார். ஆம், ஐயா. அவர் ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவர் என்று அவன் முற்றிலும் உறுதி கொண்டான். நிச்சயமாக அவன் உறுதி கொண்டான். ஆனால் என்ன-? அவனுடைய அரசியலும் கீர்த்தியும் மிகப்பெரிதாக இருந்தது. எனவே அவன் அவரைப் புறக்கணித்தான், அவனுடைய கீர்த்தி மிக அதிகமாக இருந்தது. அரசியல்... அவன் வாழ்க்கையில் பெற்றிருந்த ஸ்தானம், இந்த மூடபக்தி வைராக்கியமுள்ளவரை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு மிகப் பெரிதாக இருந்தது. 50. இதை எத்தனை பிலாத்துக்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று வியப்புறுகிறேன். ஸ்தாபனத்தில் நீங்கள் கொண்டு உள்ள ஸ்தானம் உண்மையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு மிகவும் உயர்வாக இருக்கலாம் - அவர் இன்று உள்ள இந்நிலையில். சிலுவையண்டை இருந்த ரோமப் போர்ச்சேவகன் இயேசுவை நோக்கினான். பூமியானது நடுக்கங்கொண்டு சாஷ்டாங்கமாய் விழுந்த பிறகு மலையில் பாறைகள் இல்லாத வரைக்கும் அது அதிர்ந்தது. சூரியன் நடுப்பகலில் மறைந்து இருள் சூழ்ந்தது. நட்சத்திரங்கள் ஒளி கொடுக்கத் தோன்றவில்லை. பூமியானது வெடித்து கற்பாறைகள் உருண்டன. பூமியதிர்ச்சி உண்டாகி, கோணலான மின்னல் வானத்தில் பிரசாசமாகத் தோன்றி, தேவாலயத்தின் திரைச் சீலையை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழித்தது. ஜனங்கள் இங்குமங்கும் ஓடி. கூக்குரலிட்டனர். என்ன நடந்ததென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவரை சிலுவையில் ஆணியடிக்க உதவிய அந்த ரோமப் போர்ச் சேவகன் பட்டயத்தை அவருடைய இருதயத்துக்குள் பாய்ச்சினான். அதன் பிறகு அவன் நோக்கினான், ஆனால் அது மிகவும் தாமதமாகி விட்டது. அவன் நோக்கி விசுவாசித்தான், ஆனால் அவன் விசுவாசிப்பதற்கு அது மிகவும் தாமதமாகி விட்டது. அவன் செய்தது அவனுடைய முடிவை. முத்தரித்து விட்டது. அவன் இரட்சகரின் இருதயத்துக்குள் ஈட்டியைப் பாய்ச்சினான். அது மிகவும் தாமதமாகி விட்டது. எத்தனை ரோமன்கள் அதே காரியத்தை செய்தனர், அதே காரியத்தை இனியும் செய்வார்கள் என்று வியப்புறுகிறேன். நீங்கள் என்றாவது ஒரு நாள் நோக்கலாம், ஆனால் அப்பொழுது தாமதமாகி இருக்கக்கூடும். இன்றுள்ள அநேகர் அந்த நாளில் வந்து அதே நிலையில் இருப்பார்கள். அவர்கள் அறிந்து உள்ளனர். நேற்று இங்குள்ள சகோ. உட் (இது செய்தியில் இருப்பதால் இதை கூறுகின்றேன்) ஸ்லைடர் கம்பெனிக்கு சென்றார். அங்கு ஒரு ரோமன் கத்தோலிக்கர் இருந்தார். சகோ. உட் இங்குள்ள கூடாரம் கட்டுவதற்காக கான்கிரீட் வாங்க அங்கு சென்றிருந்தார். அது எதற்காக வேண்டும் என்று அவர் கூறினார். அந்த ரோமன் கத்தோலிக்கர் "இது சகோ. பிரான்ஹாமுக்கா-?" என்று கேட்டார். அப்பொழுது அவர், "நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அவர் ஜெயித்தால் தேவன் பதில் அளிக்கிறார்" என்றாராம். அதை தெரிந்தும், அது உண்மையான சுவிசேஷம் என்று உறுதிப்படுவதைக் கண்டும் கூட - நான் மாத்திரமல்ல, இயேசுவின் பிரதிநிதியாயுள்ள எந்த மனிதனும் - நாம் வார்த்தையைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் - மனிதனைக் குறித்தல்ல . 51. நான் இதைத்தான் கூற முயல்கிறேன்: ரோமபோர்க் சேவகனைப் போன்றும், பிலாத்துவைப் போன்றும், மற்றவர்களைப் போன்றும் அவர்கள் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையை தெளிவாகக் காண்கின்றனர். ஆனால் அதைக் குறித்து ஏதாகிலும் செய்ய மிகவும் தாமதம் ஆகும் வரைக்கும் நீங்கள் காத்திருக்கப் போகின்றீர்களா-? அந்த ரோமப் போர்ச்சேவகன் ஈட்டியை மறுபக்கம் திருப்பி தன்னைக் குத்திக் கொள்ள உபயோகித்திருக்க வேண்டும். நோவாவின் காலத்தில் நடந்தது போல், கதவுகள் தடைபடும். அப்பொழுது மிகவும் காலம் தாமதமாகி இருக்கும். ஒரு நாள் காலையில் நீங்கள் உறக்கத்தினின்று எழுந்து, "இந்த குழப்பத்தை விட்டு வெளிவர எண்ணுகிறேன் எனலாம். நீண்ட காலம் காத்திருக்காதீர்கள். இப்பொழுதே நோக்கிப் பார்த்து வாழ்தல் நலம். லூத்தர் கத்தோலிக்க ஸ்தாபனத்திலிருந்து பார்வையைத் திருப்பினார். அவர் எதைக் கண்டார்-? அக்கினி ஸ்தம்பத்தை. சுயாதீனமுள்ள ஒரு சபையை அவர் கண்டார். வெஸ்லி ஆங்கிலிகன் ஸ்தாபனத்திலிருந்து பார்வையைத் திருப்பினார். அவரும் அதையே கண்டார் பெந்தெகொஸ்தேயினர் எல்லா ஸ்தாபனங்களிலிருந்தும் பார்வையை திருப்பினர். அது என்னவானது-? மகத்தான மக்கள். அவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்தனர்-? லூத்தர் வெஸ்லி போன்ற ஸ்தாபகர்கள் பார்வையைத் திருப்பி, அவர்கள் செய்ததைக் கண்டு, முன்னேறிச் சென்றனர். ஆனால் அவர்களுக்கு பின்னால் வந்த பிள்ளைகளோ, அவர்கள் வெளிவந்த ஸ்தாபனங்களை பின் நோக்கி, அவர்கள் எந்த குழப்பத்தின்று வெளி வந்தனரோ, அதே குழப்பத்திற்கு அவர்களை மீண்டும் கொண்டு சென்றனர். 52. நீங்கள் எதை நோக்குகின்றீர்கள்-? ஸ்தாபகர்கள் சரியாகத் தான் நோக்கினர், ஆனால் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் அவர்களுடைய ஸ்தாபகர்கள் வெளி வந்ததைப் பின் நோக்கி, தேவனால் அபிஷேகம் பெற்ற அந்த ஸ்தாபகர்கள் எதற்கு விரோதமாயிருந்தனரோ, அதையே செய்ய முற்பட்டனர். நான் சீக்கிரம் முடிக்க வேண்டும், ஏனெனில் இதை தொடர்ந்து ஓரு ஜெபவரிசை வரப் போகிறது. உங்களில் அநேகர் பிரயாணம் செய்ய வேண்டுமென்று நானறிவேன், ஒரு நாள் நான் நோக்கி, வார்த்தை மாமிசமானவரைக் கண்டேன். நான் அல்பாவும் ஓமெகாவுமானவரைக் கண்டேன். நான் 3, 4, 5 பேர்களைக் காணவில்லை. நான் ஒருவரை மாத்திரமே கண்டேன். என் இரட்சகரை நான் கண்டேன், அவரைக் கண்டேன் - வார்த்தையை. அவரைக் கண்டேன்- ஒளியை. அவரைக் கண்டேன் - வல்லமையுள்ள தேவனை. தேவனை அவரில் கண்டேன். நான் அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டேன். அவர் யாரென்று வேதம் கூறினதோ, அதை அப்படியே அவரில் கண்டேன். அவர் அல்பாவும் ஓமெகாவுமானவர் என்றும், அவர், அக்கினி ஸ்தம்பம் என்றும், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரென்றும் கண்டேன். அந்த அக்கினி ஸ்தம்பம் யோவானிடம், '' என்றென்றும் தவறாத அவருடைய பிரசன்னம்.'' (அங்கு யோவானிடம் அவர் கூறினது போன்று)" என்றென்றும் தவறாக அவருடைய பிரசன்னம் உன்னை விட்டு விலகுவதே இல்லை'' என்று கூறுவதை நான் கண்டேன். சகோதரனே, இன்றிரவு என் அபிப்பிராயம் என்னவெனில் -- அந்த பாடலைப் பாடுங்கள்: என் சகோதரனே, நோக்கிப் பார்த்து வாழு இயேசுவை நோக்கிப் பார்த்து வாழு நீ நோக்கிப் பார்த்தால் மாத்திரமே வாழமுடியுமென்று அவருடைய வார்த்தையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது-! அல்லேலூயா 53. நோக்கிப் பாருங்கள்-! நீங்கள் என்ன காண்கிறீர்கள்-? நீங்கள் மீட்பைக் காண்கிறீர்களா-? அவர் என்னவாயிருக்கிறார் என்று காண்கிறீர்களா-? நீங்கள் வார்த்தையை நோக்கி, அவர் என்னவாயிருந்தார் என்று காணுங்கள்; பிறகு இதே வார்த்தையை நீங்கள் நோக்கி, அவர் அன்றிருந்தவாறே இன்றும் இருக்கிறார் என்பதைக் காணுங்கள். அவர் வனாந்தரத்தில் இருந்த வெண்கல சர்ப்பம் அடையாளத்தின் நிறைவேறுதலாக இருக்கிறார். அதே நோக்கத்திற்காக - பாவத்துக்கும் வியாதிக்கும். ஒரு நாள் யூதாஸ் அவரை நோக்கினான். அவன் அவரை நோக்கின போது (அவரை அவன் உண்மையாக நோக்கின பிறகு) - அதற்கு முன்பு அவன் பணத்தை தான் நோக்கிக் கொண்டு இருந்தான் (அவர்கள் வைத்திருந்த பணப்பையை). ஆனால் ஒரு நாள் இயேசுவை நோக்கிப் பார்த்த போது, என்ன கண்டான் தெரியுமா-? அவன் குற்றவாளி என்பதைக் கண்டான். அவன் இனி வாழத்தகுதியில்லையென்பதை கண்டு. நான்று கொண்டு செத்தான். ஒரு நாள் காலையில், காலத்தின் வரலாற்றிலேயே மிகவும் பெரிதான காலையில் (முடிக்கும் முன்பு இதைக் கூறுகிறேன்) ஏதோ ஒன்று எருசலேமில் நடந்து கொண்டிருந்தது. சடுதியாக ஒரு கூட்டம் போர்ச்சேவகர்கள் சிறைச்சாலைக்கு வந்தனர், சங்கிலிகளின் சத்தத்தையும் என்னால் கேட்க முடிகிறது. அங்கு யாருள்ளது-? பரபாஸ் - அவன் மரிக்க ஆயத்தமாயிருக்கிறான். அவன் ஒரு கள்ளன்; அவன் பொல்லாதவன், கொள்ளைக்காரன், கொலையாளி. அவன் மரிக்கப் போகின்றான். "இதெல்லாம் எனக்காக தான். நாளை காலை நான் தூக்கிலிடப்படுவேன்'' என்றான். காவல்காரன் சிறைச்சாலையின் கதவைத் திறந்து, "பரபாஸே. வெளியே வா' ' என்றான், 54. அவன் வெளியே வந்து, ''இதுவே முடிவு என்று நினைக்கிறேன்" என்று மனதில் எண்ணினான். காவல்காரன், “பரபாஸே, நீ முற்றிலும் விடுதலையாகி விட்டாய்'' என்றான். "என்ன-? நான் என்ன-? முற்றிலும் விடுதலையானேனா-? "நீ விடுதலையாகி விட்டாய்'' என்றான். அவன், " பரபாஸே, இங்கு வா. அங்கு மேலே நோக்கிப் பார். அங்கு மரித்து கொண்டிருக்கும் மனிதனைக் காண்கிறாய் அல்லவா-? அவர் உன் இடத்தை எடுத்துக் கொண்டார்.'' இன்றிரவு நாமனைவரும் நோக்கிப் பார்த்து, பரபாஸ் கண்டதையே காணமுடியுமா என்று வியப்புறுகிறேன் - வேறொருவர் நமது இடத்தை எடுத்துக் கொள்ளுதல். நமது மீறுதல்கள் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் நான் குணமானேன், நீங்கள் குணமானீர்கள். குற்றவாளிகளாகிய நாம், வியாதியாயிருக்க வேண்டியவர்கள், நமது மீட்பில் அவரைக் காண முடிகின்றதா என்று வியப்புறுகிறேன். நரகத்துக்குப் போக வேண்டியவர்களாகிய நீங்கள் உங்கள் விடுதலையை அவரில் காணுங்கள் - பரலோகத்துக்கு செல்ல உங்கள் அனுமதிச் சீட்டு, அன்று பரபாஸ் கண்டதை உங்களால் காண முடிகின்றதா என்று வியப்புறுகிறேன். அவர், "இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்" என்றார். (யோவான் 14:19). ஓ, சபையே, அவர், "நீங்கள் என்னைக் காண்பீர்கள்" என்று சொல்லி இருந்தால், மறுபடியும் காண்பீர்கள் என்பதற்கு அதுவே நிரூபணமாயுள்ளது. "நீங்களோ என்னைக் காண்பீர்கள். உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனே வாசம் பண்ணி, உங்களுக்குள்ளே இருப்பேன்.'' 55. அவரை நீங்கள் எப்படி காண்பீர்கள்-? வார்த்தையில், அவரே வார்த்தையாயிருக்கிறார், வார்த்தையை நோக்கி, வாக்குத்தத்தம் என்னவென்று காணுங்கள். ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் . அவர் கலிலேயாவில் நடந்த போது என்னவாயிருந்தாரோ, அதே விதமாக அவர் இன்றிரவு ஜெபர்ஸன்வில்லில் இருக்கிறார், அதே விதமாக பிரான்ஹாம் கூடாரத்தில் இருக்கிறார். நீங்கள் எதைக் காண நோக்குகின்றீர்கள்-? ஒரு ஸ்தாபகரையா-? ஸ்தாபனத்தைச் சேர்ந்த மனிதன் ஒருவரையா-? அதை நீங்கள் இயேசுவில் காணவே முடியாது. நீங்கள் ஒரு பெரிய குருவானவரின் தன்மைகளைக் காண நோக்குகின்றீர்களா-? நீங்கள் அதை இயேசுவில் காணவே முடியாது. முடியவே முடியாது. நீங்கள் இயேசுவை எப்படி காணலாம்-? தேவனுடைய வார்த்தை வெளிப்படுவதன் மூலம். ஏனெனில் அவர் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருந்தார். அவர் அன்று என்னவா விருந்தாரோ, அவ்வாறே இன்றிரவும் உள்ளார், என்றென்றும் அவ்வாறே இருப்பார். நாம் சற்று நேரம் தலை வணங்குவோம். இந்த பிரசங்கத்தை ஒரு விதமாக காத்துக் கொண்டேன். கர்த்தராகிய இயேசுவே, வாழ்க்கையின் கவலைகளிலிருந்து என் பார்வையைத் திருப்பிக் கொள்வேனாக என்பதே என் ஜெபமாயுள்ளது. கர்த்தாவே, நாங்கள் படிப்பில்லாது, சாதாரண ஜனங்கள் என்பதை அறிந்திருக்கிறேன். இவ்வுலகத்தின் பொருட்கள்' எங்களிடம் அதிகம் இல்லை, ஆனால் நாங்கள் உம்மை நேசிக்கிறோம், ஆண்டவரே. இந்த ஜனங்களுக்காக நான் மன்றாடுகிறேன். உம்மைத் தவிர வேறு யாரையும் காண்பதற்காக அவர்கள் இப்படிப்பட்ட ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டும், ஜனக்கூட்டத்தில் நெருக்கிக் கொண்டும், நசுங்கிக் கொண்டும், வெயிலில் தீய்த்தும், குளிரில் உறைந்தும், தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு நின்றும், வியாதியஸ்தர்களையும் துன்பப்படுபவர்களையும் இவ்வாறு கொண்டு வர மாட்டார்கள், 56. கர்த்தாவே, இந்த ஜனங்கள் ஒரு மனிதனைக் காண்பதற்காக வரவே மாட்டார்கள். தெருக்களில் அநேக மனிதர்கள் உள்ளனர். அவர்களெல்லோரும் காண்பதற்கு ஒரே போல் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அந்த மனிதனை - அந்த தேவனுடைய மனிதனே, மாமிசத்தில் தோன்றிய நசரேனாகிய இயேசு.., தேவனாய் இருப்பதை காண வருகின்றனர். பிதாவே, இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் உம்மைக் காணாது என்று நீர் எங்களுக்கு சொல்லியிருக்கிறீர். அவர்கள் எவ்வளவு தான் நோக்கினாலும், அவர்கள் அதை காணவே மாட்டனர். ஆனால் நீர், ' நீங்களோ (அதாவது உண்மையான விசுவாசி) என்னைக் கான்பீர்கள். ஏனெனில் நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடனே வாசம் செய்து, உங்களுக்குள்ளே இருப்பேன் என்று உரைத்திருக்கிறீர். நாங்கள் நோக்கினால் காண்போம் என்று நீர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறீர். இன்றிரவு அந்த வேத வாக்கியத்தை மறுபடியுமாக எங்களுக்கு நிறைவேற்றித் தர வேண்டுமாய் ஜெபிக்கிறேன் - நாங்கள் நோக்கி, இயேசு எப்பொழுதுமே தம்மை வெளிப்படுத்தும் அதே முறையில் - அதாவது, தமது வார்த்தையை நிறைவேற்றுவதன் மூலம் - இன்றைக்கும் வெளிப்படுத்துவதை நாங்கள் காணும்படி செய்யும். இப்பொழுது முதல், ஆண்டவரே - இதற்கு முன்பு நான் ஒரு அறிக்கை விடுத்தேன். இழுப்புகளைக் குறித்து நீர் என்னிடம் கூறினவைகளை என் இருதயத்திலிருந்து உண்மையாக உரைத்தேன். அது பரம ரகசியமாக இருப்பது போல் காணப்பட்டாலும் எங்கள் உள்ளான மனச்சாட்சியை நாங்கள் தட்டி எழுப்புவோமானால் அது தேவனிடத்திலிருந்து வந்தாலொழிய, இவைகளை அவ்வளவு பிழையின்றி முன்னறிவிக்க முடியாது என்பதைக் காண்போம். முதலாவது காரியம் நிகழ்ந்திருப்பதை நாங்கள் எப்படி கண்டிருக்க முடியும்-? 2-வது, எப்படி நிகழ்ந்திருக்க முடியும்-? 3-வது எப்படி நிகழ்ந்திருக்க முடியும்-? ஏழு முத்திரைகளைக் கூறக்கூடிய சம்பவம் எவ்வாறு டூசானில் நிகழுமென்றும், காலத்தின் தோற்றம் முதற்கொண்டு தேவன் மறைபொருளாக வைத்திருந்த பரமரகசியங்கள் அப்பொழுது வெளியாகுமென்றும், அது நிகழ்வதற்கு அநேக மாதங்களுக்கு முன்பே எப்படி எங்களால் இங்கு நின்று கொண்டு அதை முன்னறிவிக்க முடிந்தது-? அது சாட்சியாக அறிவிக்கப்பட்டு, காணப்பட்டு, விஞ்ஞான ரீதியாய் நிருபிக்கப்பட்டதை நாங்கள் கண்டோமே-! 57. கர்த்தாவே, நீரே எங்கள் அடைக்கலமும் பெலனுமாயிருக்கிறீர். நாங்கள் பெற்றுள்ள எல்லாம் நீரே, உமது மகத்தான ஒழுங்கில் ஒரு பாகமாக இருக்கிறதற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் இங்குள்ள அநேகருடனும், உலகம் பூராவிலுள்ள வெவ்வேறு சபைகளிலுள்ள அனைவருடனும் உம்முடைய சரீரத்தின் காணக்கூடாத கிறிஸ்துவின் சரீரத்தின் - அங்கத்தினனாய் உள்ளதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஒவ்வொரு முறை நாங்கள் நோக்கும் போதும், நாங்கள் அவரைக் காண்கிறோம். பறவைகள் பாடும் போதும், சூரியன் உதயமாகும் போதும், மறையும் போதும் அவரைக் காண்கிறோம், பாடலில் அவரைக் கேட்கிறோம். அவருடைய ஜனங்களில் அவரைக் கவனிக்கிறோம். அவருடைய வார்த்தையை அவர் உறுதிப்படுத்துவதை நாங்கள் காண்கிறோம். ஓ , கர்த்தாவே, நீரே எங்கள் தேவன். அதிகாலையில் உம்மை நாங்கள் கூப்பிடுவோம். நீர் எங்கள் இரக்கமுள்ள பிதா. எங்கள் தவறுகளை எங்களுக்கு மன்னியும். கர்த்தாவே, நாங்கள் முடிவு காலத்தில் இருக்கிறோம், விரைவில் கதவுகள் - தருணமாகிய கதவுகள் - அடைபடுவதை நான் காண்கிறேன். பகற்காலம் இருக்கும் போதே, இந்த இடங்களுக்கு நான் செல்ல எனக்கு உதவி செய்யும். எனக்கு வயதாகின்றது. எனக்கு பெலனைத்தாரும். என் வாலிபத்தை புதுப்பியும், கர்த்தாவே, அந்த மகத்தான நேரம் வருவதற்காக நான் காத்திருக்கும் போது, நான் அங்கிருப்பதற்காக ஏதாவதொன்றை செய்ய எனக்குதவி புரியும். கர்த்தாவே, நான் வெளியே செல்லும் போது, கர்த்தராகிய இயேசுவைக் கொண்டு வரும் அந்த கடைசி முன் குறிக்கப்பட்ட வித்தை எவ்வகையிலாகிலும் நான் பிடிக்க எனக்குதவி செய்யும். ஓ. தேவனே, உதவி செய்யும். 58. வேறு யாராகிலும் நிற்பதற்காக நான் அஸ்திபாரம் போட்டுக் கொண்டிருந்தால், கர்த்தாவே, வார்த்தை நிறைவேறுவதற்காக அது விரைவில் நிகழ அருள்வீராக. உமது வார்த்தை நிறைவேறுவதைக் காண்பதே எங்கள் இருதயங்களின் வாஞ்சையாயுள்ளது. உம்மை நாங்கள் நேசிக்கிறோம். உம்மை நாங்கள் விசுவாசிக்கிறோம். இன்று நாங்கள் பெற்றுள்ள அவிசுவாசமுள்ள, சந்தேகமுள்ள ஜனங்களைக் கொண்ட சந்ததியின் மத்தியில், தேவனாகிய கர்த்தாவே, உமது வார்த்தை ஒருபோதும் தவறாது என்று நாங்கள் இன்னமும் விசுவாசிக்கிறோம். வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அது ஒரு போதும் தவறாது. நாங்கள் விசுவாசிக்கிறோம். அதற்காக நாங்கள் தீரமுள்ளவைகளாய் நிற்கிறோம். பிதாவே, காத்துக் கொண்டிருந்த இந்த சிறு கூட்டம்: இங்கு அநேகர் வியாதியாயுள்ளனர். இங்கு அநேகர் இரட்சிக்கப்படாமல் இருக்கலாம் - இரட்சிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியினால் நிறையப்படாதவர்கள். தேவனாகிய கர்த்தாவே, ஜனங்கள் நோக்கி இயேசுவைக் கண்டு, வணங்கி தங்கள் இருதயங்களை உமக்களிக்க, வாக்களிக்கப்பட்ட உமது வார்த்தையின் மூலம் நீர் காட்சியில் வரும்படியாக வேண்டிக் கொள்கிறோம். வியாதியஸ்தர்கள் நோக்கி தேவனைத் தவிர வேறு யாருமே இதை செய்வதென்பது கூடாத காரியம் என்பதைக் காண அருள் புரியும். ஏனெனில் அது வாக்களிக்கப்பட்ட அவருடைய வார்த்தையாய் உள்ளது. இன்றைக்கு நாங்கள் கூறினவை (இரண்டு செய்திகளும்) இப்பொழுது ஊர்ஜிதப்படுவதாக கர்த்தாவே, இவையெல்லாம் உமது கரங்களில் உள்ளன. நானும் உம்முடைய கரங்களில் உள்ளேன், சபையோரும் உம்முடைய கரங்களில் உள்ளனர். உமது மகத்தான நாமத்தை கனப்படுத்த ஆண்டவரே, எங்கள் மூலம் கிரியை செய்யும். ஓ. நித்தியமானவரே, தேவனுடைய மகிமைக்கென்று இதை அருள்வீராக. ஆமென். 59. உஷ்ணமாய் உள்ளதென்று அறிவேன். இப்பொழுது வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கலாம் என்றிருக்கிறேன். எனக்கு நீங்கள் 15 அல்லது 20 நிமிடங்கள் கொடுப்பீர்களானால் எத்தனை ஜெப அட்டைகள் கொடுத்திருக்கிறார்களென்று எனக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கத் தொடங்கப் போகின்றோம். (சகோ. பிரான்ஹாம் ஜெப அட்டைகளைக் குறித்து விசாரிக்கிறார்-ஆசி.) இப்பொழுது கவனியுங்கள். அது என்ன-? குறித்த நேரத்தைக் காட்டிலும் எங்களுக்கு சிறிது தாமதித்து விட்டது - சுமார் 15 நிமிடங்கள் - என்றறிவேன். ஆனால் இந்த ஒன்றைக் கூற விரும்புகிறேன். அது நித்தியத்தை பரலோகத்திலோ அல்லது நரகத்திலோ கழிக்க வேண்டிய வித்தியாசத்தை உண்டாக்கக் கூடும், பாருங்கள். கவனியுங்கள். பயபக்தியாய் இருங்கள். ஒரு நிமிடம் கவனியுங்கள். வார்த்தைக்கு செவி கொடுத்து, அவர் இன்னமும் கிறிஸ்துவாக இருக்கிறாரா என்பதை அறிந்து கொள்ளுங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் ஒருக்கால் என்னை அறிந்திருக்கலாம், ஆனால் உங்களில் அநேகரை எனக்குத் தெரியாது. ஏனெனில் உங்களைத் தெரிந்து கொள்வதற்கு நான் அதிக நாட்கள் இங்கிருப்பதில்லை. மேலும் உங்களில் அநேகர் இந்த நகரத்துக்கு வெளியே தங்குபவர். எத்தனை பேர் நகரத்துக்கு வெளியே உள்ளவர்கள்-? கைகளை உயர்த்துங்கள். பாருங்கள். அன்றொரு நாள் நகரத்துக்கு கீழேயுள்ள ஒருவரிடம் ''நீங்கள் எப்பொழுதாவது மேலே வந்ததுண்டா -?'' என்று கேட்டேன். அவர், "நாங்கள் வரவேண்டிய அவசியமில்லை. நகரத்துக்கு வெளியேயுள்ள அநேகர் அங்கு வந்து விடுகின்றனர். எங்களால் உள்ளே வரமுடியவில்லை' என்றார். அது பரவாயில்லை. அவர்களும் பெற்றுக் கொள்ள நாங்கள் வழி செய்கிறோம். நீங்களும் எப்படியாகிலும் வாருங்கள். உங்களுக்கு முன்னால் அவர்களுக்கு தருணம் கிடைத்து விட்டது 60. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். நான் உங்கள் சகோதரன் மாத்திரமே. அதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன். நான் மனிதன், அவர் தேவன். தேவன் மாத்திரமே கிரியை செய்ய முடியும். அவர் எப்பொழுதுமே மனிதன் மூலமாக மாத்திரமே கிரியை செய்து வந்துள்ளார். இன்றிரவு என்னையல்ல, வேறு யாரையும் அல்ல, இயேசு கிறிஸ்துவை நோக்குங்கள். வேத வாக்கியம் என்ன வாக்கு அளித்துள்ளதென்று இன்றிரவு நோக்குங்கள். எத்தனை பேர்- நான் எல்லாவிதமான வேத வாக்கியங்களையும் அளிக்க முடியும் - ஆனால் எத்தனை பேர் எபிரேயர் 13:8-ஐ விசுவாசிப்பீர்கள்-? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்' என்பதை-? எத்தனை பேர் யோவான் 14:12-ஐ விசுவாசிக்கிறீர்கள்-? ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்' என்பதை-? அவர் வருகைக்கு சற்று முன்பு, அவர் செய்த கிரியையாகிய இருதயத்தின் சிந்தனைகளைப் பகுத்தறிதல் என்பது கடைசி நாட்களில் திரும்ப வரும் என்று அவர் வாக்களித்துள்ளார் என்பதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்-? உங்கள் எல்லோருக்கும் அது தெரியும். இன்னும் எத்தனை - நூற்றுக்கணக்கான வேத வாக்கியங்கள் ; நமக்கு அவை தெரியும். இப்பொழுது கவனியுங்கள், ஒரு ஊழியரைக் காண நோக்க வேண்டாம்; ஒரு போதகரைக் காண நோக்க வேண்டாம். இயேசுவைக் காண நோக்குங்கள். மனிதனை நீங்கள் காண வேண்டாம்; இயேசுவைக் காணுங்கள். நீங்கள் நோக்கும் போது, அவரைக் காணுங்கள். உங்களுக்கு என்னால் உதவி செய்ய முடியுமானால், நான் நிச்சயம் செய்வேன். ஆனால் என்னால் முடியாது. என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. நான் உங்கள் சகோதரன் மாத்திரமே, ஆனால் அவர் உங்கள் கர்த்தர். அவரை நோக்கிப் பார்த்து விசுவாசியுங்கள். (சகோ.பிரான்ஹாம் ஜெபவரிசையை அழைக்கிறார் - ஆசி) ஓ, நண்பர்களே, இப்பொழுது என்ன-? நாம் எங்குள்ளோம்-? நாம் முடிவுக்கு வந்திருக்கிறோம். ஏதாகிலும் ஒன்று செய்யப்பட்ட வேண்டிய நேரத்தை நாம் அடைந்து இருக்கிறோம். ''ஆம்'' அல்லது 'இல்லை'' என்று சொல்ல வேண்டும். தேவன் சரியாயிருக்கிறார் அல்லது தவறாய் இருக்கிறார் என்று கண்டு கொள்ளப்பட வேண்டும். 61. இன்று இரண்டு பிரசங்கங்களை பிரசங்கித்தேன் - கடினம் - அவர் என்னவாயிருக்கிறார் என்று உங்களிடம் கூற முயன்றேன்; நேரம் முடிவடையப் போகிறதென்று உங்களிடம் கூறினேன் - அவர் என்னவாயிருக்கிறார் என்றும், அவர் என்னவாயிருந்தார் என்றும், இன்றிரவு நாம் நோக்கும் போது, அவரை நோக்கிப் பார்ப்போமாக. ஒவ்வொரு நபரும், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உங்கள் இருக்கைகளில் அமர்ந்திருங்கள், நடந்து கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் அழைக்கப்படும் வரைக்கும் மிகவும் அமரிக்கையாக அமர்ந்திருங்கள். சிறு பிள்ளைகள்..... இப்பொழுது, "தலை வணங்குங்கள்'' என்று நான் கூற நேர்ந்தால், உடனே அதை செய்யுங்கள். தேனே, ஏனெனில் புற்று நோய், மற்ற நோய்கள் போன்ற பொல்லாங்கானவை விட்டுப் போகும் போது, அவை ஜனங்களின் மத்தியில் சென்று, மற்றவர்களுக்குள் நுழைந்து விடுகின்றன. அது வேத வாக்கியங்களின்படி உண்மை என்று அறிந்து அதை விவாசிப்பவர்கள் "ஆமென்'' என்று சொல்லுங்கள். பொல்லாத ஆவிகள் வெளியே துரத்தப்பட்ட போது, அவை ஒருவரிலிருந்து மற்றவருக்குள் நுழைந்து, தங்களுக்கென ஒரு இடத்தைக் கண்டு பிடிக்க முயல்கின்றன என்று நாம் வேதத்தில் காண்கிறோம். நாம் கூட்டங்களில் எத்தனை முறை கண்டிருக்கிறோம்... ஜனங்கள் முற்றிலும் ஆரோக்கியமுள்ளவர்களாய் கூட்டங்களுக்கு வந்து, உட்கார்ந்து கொண்டு குற்றம் காணுகின்றனர் (criticize); அதற்கு பிறகு ஓரிரண்டு நாட்கள் கழித்து முழுவதும் குருடாகி விடுகின்றனர், புற்று நோயால் அல்லது திமிர் வாதத்தால் பீடிக்கப்படுகின்றன. (பாருங்கள்). ஏனெனில் அவர்கள் அவிசுவாசிகள். அவர்களுக்கு நான் பொறுப்பாளியல்ல, விசுவாசிகளுக்கு மாத்திரமே. அவர்களில் அநேகர் அநேக ஆண்டுகளுக்கு முன்பே பைத்தியக்காரர் விடுதிகளில் சேர்க்கப்பட்டு, இப்பொழுதும் அங்கேயுள்ளனர். சிலர் மரித்து கல்லறைகளுக்கு சென்று விட்டனர். அவர்கள் கர்வம் கொண்டு, அவிசுவாசித்த காரணத்தால். இப்பொழுது அவிசுவாசிகளுக்கு இடமேயில்லை. இது விசுவாசிகளுக்கான இடம். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்-! 62. பரலோகப் பிதாவே, இப்பொழுது, இந்த கூட்டம் உம்முடையது. அது எப்பொழுதுமே உம்முடையதாய் இருந்து வந்துள்ளது. எனக்கு உம்முடைய வார்த்தையின் பேரில் பேச முடிந்தது. ஆனால் இப்பொழுது முதல் என்னால் பேச முடியாது, இப்பொழுது பேசுபவர் நீரே, கர்த்தாவே. உமது தாசன் அவர்களுக்கு சந்திப்பதை எடுத்துரைத்தான் என்று அறியப்படட்டும். இங்குள்ள அநேகர்- ஒருக்கால் ஜெபவரிசையில் இல்லாத அநேகர் வியாதியாயிருக்கக் கூடும். ஆனால் கர்த்தாவே. நீர் இன்னும் இங்கிருக்கிறீர். எனவே அங்கிருப்பவர்களை நீர் சுகப்படுத்த முடியும். அவர்கள் எங்கிருந்தாலும் நீர் சுகப்படுத்த முடியும். உமது வார்த்தை பகிரங்கமாக அறியப்படட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். இப்பொழுது சிறிது நேரம் உங்களுடைய முழு கவனமும் எனக்குக் கிடைக்குமானால். இந்த ஜெபவரிசையில் உள்ளவர்களை நான் காண விரும்புகிறேன் - இதிலுள்ள ஒருவரையும் எனக்குத் தெரியாதென்று எண்ணுகிறேன். இந்த ஜெப வரிசையிலுள்ள எல்லாம் எனக்கு அந்நியரா-? உங்களை எனக்குத் தெரியாதென்று உங்களுக்குத் தெரியும். அப்படியானால் உங்கள் கைகளை யுயர்த்தங்கள். அவர்கள் எனக்கு அந்நியரே-! வரிசைக்குப் புறம்பேயுள்ள எத்தனை பேர் உங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாதென்று அறிந்திருக்கிறீர்கள்-? உங்கள் கையையுயர்த்துக்கள் - புறம்பேயுள்ளவர்கள். நிச்சயமாக-! 95 சதவிகிதம் ஜனங்கள். அவர்களைக் குறித்து எனக்குத் தெரியாது - அது உண்மை . 63. இங்கு ஒரு ஸ்திரீ இருக்கிறான். அவளை நான் வாழ்க்கையில் கண்டதில்லை. அவள் எனக்கு முற்றிலும் அறிமுகமாகாதவள். அவள் ஒருக்கால் வியாதிப்பட்டு இங்கிருக்கலாம் - ஒருக்கால் அவள் ஏதாவதொன்றைக் செய்திருப்பாள். ஒருக்கால் பணக் கஷ்டத்தின் காரணமாக அவள் இங்கிருக்கலாம்; அல்லது குடும்பத் தொல்லையாயிருக்கும்; அல்லது வேறு யாருக்காவது ஆள் இங்கிருக்கலாம். எனக்குத் தெரியாது. அதை குறித்து ஒரு அறிவும் எனகில்லை. பரி. யோவான் 4-ம் அதிகாரத்தில் உள்ள அதே காட்சி தான் இது. ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் முதல் முறையாக சந்திக்கின்றனர். சந்தேகமின்றி, இயேசுவை சந்தித்த அந்த வாலிப ஸ்திரீயைக் காட்டிலும் இயேசு முதியவராயிருந்தார். ஏனெனில் காண்பதற்கு அவர் 50 வயது கொண்டவர் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர் போன்றிருந்தார். ஒருக்கால் கிற்றண்டையிருந்த அந்த அழகான ஸ்திரீ ஒரு வாலிபப் பெணாய் இருந்திருப்பாள். இன்றிரவு மறுபடியுமாக இருவர் - வாலிபப் பெண்ணும் வயதில் மூத்தவரும் - ஒருவரைக் குறித்து மற்றவர் அறியாதவர்களாய் சந்திக்கின்றனர். அவள் அங்கு நின்று கொண்டு இருக்கிறாள். ஏதோ ஒரு காரணத்தினால் அவள் அங்கிருக்கிறாள். எனக்குத் தெரியாது, ஒருக்கால் அவள் ஏமாற்றுபவளாய் இங்கு நின்று கொண்டு, இல்லாத ஒன்றை சொல்லலாம்... அப்படி இருக்குமானால், என்ன நடக்கப் போகின்றது என்பதைக் கவனியுங்கள். இந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது. அவளை நான் கண்ட தில்லை. சற்று முன்பு தான் நான் அவளுக்கு அந்நியன் என்று அவள் கையுயர்த்தி அறிவித்தாள். அவள் எனக்கு அறிமுகம் ஆகாதவள் என்று நானும் அறிவிக்கிறேன். அவளை நான் கண்டதில்லை. இப்பொழுது, நான்.... ஒரு மனிதன் என்னும் முறையில் நான், ' ஸ்திரீயே, உனக்கு என்ன நேர்ந்தது-? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்-? உனக்கு என்ன வேண்டும்" என்றும் கேட்க வேண்டும். அவள், ''திரு. பிரான்ஹாமே, நான் புற்று நோயால் அவதியுறுவதால் அல்லது காசநோயால் அவதிறுவதால், அல்லது கட்டியால் அவதியுறுவதால், இங்கிருக்கிறேன்'' எனலாம்; அல்லது ''எனக்கு பணமில்லை, என் கணவர் என்னை விட்டு சென்று விட்டார்; அல்லது எனக்கு திருமணமாகவில்லை, என் பையன் நண்பன் (boy friend) எனக்கு தவறிழைத்து விட்டார்'' எனலாம். அவள் இதையெல்லாம் என்னிடம் கூற வேண்டும். அப்பொழுது நான், "சரி, என் கைகளை உன் மேல் வைத்து ஜெபிக்கிறேன்'' என்று கூறி விட்டு, ''தேவனாகிய கர்த்தாவே, இந்த ஸ்திரீ விரும்புவதை அவளுக்குத் தந்தருளும். ஆமென். இயேசுவே. அதை செய்யும்'' என்று ஜெபித்து, அவளைப் போக விடுவேன். அவள் அதை விசுவாசித்தால், சுகம் பெறுவாள், அது சரி தான். அப்படிப்பட்ட ஒரு ஊழியம் அநேக, அநேக ஆண்டுளாக இருந்து வந்துள்ளது. 64. ஆனால் கடைசி நாட்களில் இது வாக்களிக்கப்பட்டு உள்ளது. அதாவது தூதன் - சோதோம் எரிந்து போவதற்கு சிறிது முன்பு தேவன் மானிட சரீரத்தில் வாசம் பண்ணி இங்கு வந்து, சாராள் இருந்த கூடாரத்திற்கு தமது முதுகைத் திருப்பினவராய் உட் கார்ந்து கொண்டு, அவள் கூடாரத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை ஆபிரகாமிடம் கூறினார் - தேவன் மாமிசத்தில் மானிட உடைகளை உடுத்தியிருத்தல். இன்றைக்கும் தேவன் அந்த ஒரு வழியில் தான் செய்ய முடியும், உங்கள் மாமிசத்தில் நுழைந்து கொள்ளும் போது தேவன் மாமிசத்தில் வெளிப்படுவார் என்பதைக் காண்பித்தல். "சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் போது நடக்கும்'' என்று இயேசு கூறினார். நமக்கு செய்தியாளர் பில்லிகிரகாமும் மற்றவர்களும் சோதோமில் உள்ளனர். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட சபையோ செய்தியையும் ஒரு செய்தியானையும் பெற்றுக் கொண்டது. இப்பொழுது இந்த ஸ்திரீ- பரிசுத்த ஆவியானவர் (அவர் செய்வார் என்று நான் கூறவில்லை. அவர் செய்வாரானால்) வந்து நீ எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று என்னிடம் கூறுவாரானால் - உனக்கு என்ன வேண்டுமென்றோ, அல்லது நீ செய்த ஒன்றைக் குறித்தோ , அல்லது நீ செய்ய நினைத்திருப்பதைக் குறித்தோ, அப்படியானால் அது இயற்கைக்கு மேம்பட்ட இடத்திலிருந்து வந்திருக்கவேண்டுமென்று நீ அறிந்து கொள்வாய், ஏனெனில் நாம் இங்கு நின்று கொண்டிருந்த மாத்திரம் செய்கிறோம். நான் கூறுவது உண்மை அல்லவா-? 65. அப்பொழுது அது இயற்கைக்கு மேம்பட்ட சக்தியிடமிருந்து வந்திருக்க வேண்டுமென்று நீ அறிந்து கொள்வாய், இயேசு அதையே செய்தாரென்றும் மறுபடியும் கடைசி நாட்களில் அதை செய்வதாக வாக்களித்துள்ளார் என்றும் வேதம் கூறியிருக்குமானால், நீயும் அவருடன் சேர்ந்து விசுவாசிப்பாய், எத்தனை பேர் அதை விசுவாசிப்பீர்கள்-? அப்பொழுது நீங்கள் இயேசுவைக் காண்பீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தையைக் காண்பீர்கள். ''அவர் வார்த்தையா-?'' என்று நீங்கள் கேட்கலாம். இவர் வார்த்தையென்று வேதம் கூறுகின்றது. வார்த்தை இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறது என்று வேதம் உரைக்கிறது. அது சரியா-? அப்படியானால் நினைவுகள் வகையறுக்கப்பட்டு, அது மானிட உதடுகளின் மூலம் பேசப்படும் வார்த்தையாக அமைந்திருக்கும் - என்னால் முடியாது. அதை செய்ய எனக்கு ஒரு வழியுமில்லை, பாருங்கள். ஏனெனில் எனக்கு அவளைத் தெரியாது. ஆனால் அவர் அவளை அறிவார். அவர் வார்த்தையாய் இருக்கிறார். அவர் ஒருவர் தான் எங்கள் இருவரின் ஆவிகளையும் எடுத்துக் கொண்டு கிணற்றண்டை இருந்த ஸ்திரீயும் அவரும் போல - அவைகளை ஒன்றாகக் கலந்து, அவள் எதற்காக இங்கு இருக்கிறாள் என்றும், அவள் என்ன செய்திருக்கிறாள் என்றும், அவளுக்கு என்ன வேண்டும் என்றும் எனக்குக் காண்பிக்க முடியும். பிறகு நான் பேசி இதைக் கூறமுடியும் - அது அவளைப் பொறுத்தது. ''சகோ. பிரான்ஹாமே, அவளை உங்களால் சுகப்படுத்த முடியுமா-?'' என்று கேட்கலாம். இல்லை, இல்லை. என்னால் அதை செய்ய முடியாது. அவர், ஏற்கனவே அதை செய்து முடித்து விட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். அவள் என்ன செய்திருக்கிறாள் என்றும், அவளுடைய தேவை என்னவென்றும் போன்றவைகளை அவர் அறிந்திருக்கிறார் என்பதை அவளுக்குத் தெரியப்படுத்தினால், அவளுடைய விசுவாசத்தை அது உயர்த்தும் என்பதற்காகவே. அவளுக்கு எப்படி அதை கொடுக்க வேண்டுமென்றும், நீங்கள் அதன் பிறகு என்னவாயிருப்பீர்கள் என்றும் அவருக்குத் தெரியும். அது சரியா-? எல்லோரும் அதை விசுவாசிக்கின்றனர். 66. இப்பொழுது உண்மையில் பயபக்தியாய் இருங்கள் - ஜெப அட்டை இல்லாதவர்கள். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். ஒரு நாள் இயேசு ஒரு கூட்டத்தின் வழியே கடந்து சென்றார். அப்பொழுது ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டாள். அவர் திரும்பிப் பார்த்து, என்னை தொட்டது யார்-?'' என்றார். அவர் கூட்டத்தில் சுற்றும் முற்றும் பார்த்து அவளைக் கண்டு பிடித்து, அவளுக்கு பெரும்பாடு இருந்ததாக கூறினார். அப்பொழுது அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்று போயிற்று, பாருங்கள் . நமது பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராக அவர் இப்பொழுகம் இருக்கிறார் என்று வேதம் கூறுகின்றது-!. (எபி. 4:15. ஆங்கிலத்தில் touched' என்று எழுதப்பட்டுள்ளது. தமிழில் பரிதபிக்கக்கூடிய' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தீர்க்கதரிசி 'தொடப்படக்கூடிய' என்னும் அர்த்தத்தில் இங்கு உபயோகிக்கிறார்..- தமிழாக்க யோன்). அது சரியா-? சகோ.வே அவருடைய மனைவியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் காண்கிறேன் . அண்மையில் நான் பிரகங்கித்துக் கொண்டிருந்த போது, அவர் இங்கு நின்று கொண்டிந்தார். (பவுல் இரவு முழுவதும் ஒரு நாள் பிரசங்கித்துக் கொண்டிருந்தது போல). அவர் மரித்து, கூட்டத்தில் கீழே விழுந்தார். பரிசுத்த ஆவியானவர் மீண்டும் உயிருள்ளவராக எழுப்பினார். பாருங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாதவராய் இருக்கிறார் என்பதற்கு அவர் சாட்சியாக விளங்குகிறார். 67. எத்தனை பேர் சகோ.வேயை இதுவரை கண்டதில்லை-? அவரைக் காண விரும்புகிறீர்களா-? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இவர் இதுவரை கண்டிராதவர்கள். சகோ.வே. எழுந்து நிற்பீர்களா-? இதோ அந்த மனிதன் - அவர் இப்பொழுது எங்கு நின்று கொண்டிருக்கிறாரா, அந்த இடத்திலிருந்து அவர் மரித்து கீழே விழுந்தார். இதோ அவருடைய மனைவி, பதிவு செய்யப்பட்ட நர்ஸ் அங்கு நின்று கொண்டிருக்கிறார்கள். அவருக்கு நாடித் துடிப்பே இல்லை. கண்கள் சொருகிப் போயின, அவருடைய முகம் கறுப்பாக மாறினது--மாரடைப்பு. அவருக்கு இருதய நோய் இருந்ததாக மருத்துவர் கூறினார். ஆனால் அதற்கு முன்பே, அவருக்கு இருதய நோய் உள்ளதென்று நான் அண்மையில் பகுத்தறிந்து கூறினேன். பிறகு திடீரென்று அவருடைய இருதயத் துடிப்பு நின்று கீழே விழுந்து விட்டார். அவர் அங்கு மரித்து கிடந்தார் . கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரை உயிரோடெழுப்புவதை நான் காண்பது இது' ஆறாம் அல்லது எட்டாம் முறையாகும். அவர் அப்படி செய்வதை நான் கண்டிருக்கிறேன். இன்றிரவும் அவரால் அதை செய்ய முடியும். இங்குள்ள ஒவ்வொரு ஆவியையும் தேவனுடைய மகிமைக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் கட்டுக்குள் கொண்டு வருகிறேன், பயபக்தியாயிருந்து, கவனியுங்கள். ஸ்திரீயே, உன்னுடன் நான் பேச விரும்புகிறேன். நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், பார். உன் ஆவியை கிரகித்துக்கொள்ள. அதை தான் நான் செய்து கொண்டிருந்தேன். உனக்குள்ள ஒன்று உன்னை உயிருள்ளவளாக வைத்துள்ளது. இல்லையென்றால் நீ இங்கு நின்று கொண்டிருக்க மாட்டாய். நீ மரித்தவளாய் இருந்திருப்பாய், உனக்குள் உயிர் இருந்து இருக்காது. ஆனால் அந்த சரீரத்தில் உயிர் இருப்பதனால், அது உன்னை கட்டுப்படுத்துகிறது. நீ நினைக்கும் நினைவுகள், நீ பேசும் வார்த்தைகள் அனைத்தின் மூலமாகவே நீ வாழ்கின்றாய். நீ பேசும் வார்த்தைகளும், உன் நினைவுகளுமே யாரென்று அறிவிக்கின்றன', நாம் விசுவாசித்து இங்கிருக்கிறோம். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர். இயேசு அந்த ஸ்திரீயிடம், '' தாகத்துக்குத் தா. என்றார். அவள், "நீர் யூதனல்லவா-? சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில் நீர் எப்படி கேட்கலாம்-? நாம் இருவரும் சம்பந்தம் கலவாதவர்கள். நம்மிருவருக்குமிடையே பேச்சு வார்த்தையும் கூட கிடையாதே' என்றாள். ஆனால் இங்கு நாம் இருவருமே புறஜாதிகள். நாம் தேவனை விசுவாசித்து இங்கு நின்று கொண்டிருக்கிறோம். அவருடைய ஆவி என்னிடத்தில் வந்து வாக்கை அருளி உன்னிடம் கூறுமானால், அது சரியா இல்லையாவென்று நீ அறிந்து கொள்வாய். ஏனெனில் வாழ்க்கையின் அந்த பாகத்தை நீ வாழ்ந்து இருக்கிறாய். அப்பொழுது அதை விசுவாசிக்கும் வரம் உனக்கிருக்கும். நீ விசுவாசித்தால், அவர் இதைக் குறித்து உன்னிடம் கூறுவார். அப்பொழுது எல்லாம் முடிந்து விடும். இங்குள்ள ஒவ்வொருவரிலும் அது கிரியை செய்யும். இப்பொழுது, ஒவ்வொருவரும் உண்மையாக பயபக்தியாயிருங்கள். இந்த ஸ்திரீ தொண்டை கோளாறினால் அவதியுறுகிறாள் - தொண்டையின் நிலைமை. அது உண்மையானால், உன் கையையுயர்த்து. அவளை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. அது உண்மை. அவளுடைய தொண்டைக்காக நான் ஜெபிக்க வேண்டுமென்றே அவள் இங்கிருக்கிறாள். அதை நான் கூறின மாத்திரத்தில் (அல்லது அதற்கு சற்று முன்பு ) ஏதோ ஒன்று அருகில் வந்தது. அவளுக்கு ஏற்பட்ட உணர்ச்சியை உங்களால் காண முடிந்தது - ஒரு உண்மையான, இனிய உணர்ச்சி ...-? 68. அந்த படத்தில் நீங்கள் கண்ட அந்த ஒளி ..... ஜார்ஜ், நீ எங்கேயிருக்கிறாய்-? படத்திலுள்ள அந்த ஒளி அந்த ஸ்திரீயின் மேல் இப்பொழுது தொங்கிக் கொண்டிருக்கிறது. இது வேறொரு பரிமாணம். அவள் ஒரு விசுவாசி- பாவனை விசுவாசியல்ல, உண்மையான விசுவாசி. நான் அவருடைய ஊழியனும் தீர்க்கதரிசியுமாய் இருக்கிறேன் என்று விசுவாசிக்கிறாயா-? அதை அறிந்து கொள்ள நீ விசுவாசியாகத் தான் இருக்க வேண்டும். உன் இருதயத்திலுள்ள மற்ற காரியங்களை அவர் உனக்குக் கூற முடியுமென்று விசுவாசிக்கிறாயா-? சரி. இதோ உன் இருதயத்திலுள்ள ஒன்று. நீ யாருக்காகவோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறாய் - ஒரு குழந்தைக்கு. அதற்கு என்ன கோளாறு என்று அவர் என்னிடம் கூற முடியுமென்று விசுவாசிக்கிறாயா-? 69. அதற்கு விஷக்கிருமி (Virus) உள்ளது, அது சரியா-? நீ யாரென்று தேவன் என்னிடம் கூற முடியுமென்று விசுவாசிக்கிறாயா-? நீ திருமதி வாக்கர். நீ இந்த இடத்தை சேர்ந்தவளல்ல. நீ தென் பகுதியிலிருந்து வருகிறாய் - ஜார்ஜியாவிலிருந்து. நீ சுகம் பெற்று வீடு திரும்புகிறாய். இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்கி விட்டார். கவலைப்படாதே, எல்லாம் முடிந்து விட்டது. சகோதரியே, தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக. நீ எப்படி இருக்கிறாய்-? இங்கு வேறொரு ஸ்திரீ இருக்கிறாள். அவளை எனக்குத் தெரியாது, அவளை நான் கண்டதில்லை. அவள் இங்கு நின்று கொண்டிருக்கும் ஒரு ஸ்திரீயாக மாத்திரம் அறிவேன், கவனியுங்கள், நான் 8-00 மணியிலிருந்து பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது 10-00 மணி ஆகின்றது. நான் இரண்டு மணி நேரமாக இங்கிருக்கிறேன். இந்த ஒரு பகுத்தறிதல், நான் இரண்டு மணி நேரம் பிரசங்கித்ததைக் காட்டிலும் என்னை அதிக பெலவீனமாக்கி விட்டது. பாருங்கள், அது, பாருங்கள் .... "அப்படியா கூறுகின்றீர்கள்-?'' என்று நீங்கள் கேட்கலாம். ஓ, ஆமாம். அவர், "என்னிலிருந்து வல்லமை (அதாவது பெலன்) புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்" என்றார். (லூக்.8:46) அது சரியா-? அதைத்தான் அது செய்கிறது. 70. இந்த ஸ்திரீயை நான் கண்டதேயில்லை. நீங்கள் கவனித்திருப்பீர்களானால், பில்லி அங்கு சென்று, நமது மத்தியிலுள்ள ஜார்ஜ் என்னும் பையனை இங்கு கொண்டு வந்தான். அவன் ஒரு பாட்டிஸ்டு பையன். நாம் பேசிக்கொண்டிருப்பது தேவனைக் குறித்து என்பதை அவன் அறிய விரும்புகிறேன். அவனுடைய தந்தை, குடும்பம் அனைவருமே நல்லவர்கள். அவர்கள் மெக்ஸிகோவில் இருக்கின்றனர், மிஷனரி அருமையானவர். அவனுடைய தந்தை வியாதியாய் இருக்கிறார். அவன் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன், ஜார்ஜ், கூர்ந்து கவனி. இந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது. அவளை கண்டதேயில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர் என்று கருதுகிறேன். எங்களுக்கு ஒருவரையொருவர் தெரியாது. ஆனால் பரிசுத்த ஆவி - இயேசு கிறிஸ்துவின் இனிமை - இங்கு பிரசன்னமாய் உள்ளதென்பதற்கு நாம் அனைவரும் சாட்சிகளாய் இருக்கிறோம். 71. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னைக் குறித்து ஏதாகிலும் ஒன்றை எனக்கு வெளிப்படுத்தித் தருவாரானால்... உன்னை எனக்கு சுகப்படுத்த முடியுமானால், நான் நிச்சயம் செய்வேன். ஆனால் அவர் ஏற்கனவே செய்து முடித்ததை என்னால் செய்ய முடியாது. அவர் எனக்கு அளித்துள்ள இந்த 'சூட்'டை அவர் போட்டுக் கொண்டு இன்றிரவு இங்கு நிற்பாரானால், அவரும் உங்களை சுகப்படுத்த முடியாது. ஏனெனில் அவர் ஏற்கனவே அதை செய்து விட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். ஆனால் இவர் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று, அவர் வாக்களித்த வார்த்தையின் மூலம் தம்மை பிரகடனப்படுத்தி. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் காணும்படி செய்வார். அவர் அவ்வாறு வாக்களித்து உள்ளார். 72. நீ எதற்காக இங்கிருக்கிறாய் என்று உன்னிடம் கூறுவதற்கு அவர் என்னை உபயோகிப்பாரானால், நீ எதற்காக இங்கிருக்கிறாயோ அதை பெற்றுக் கொள்வாய் என்று விசுவாசிக்க, நீ அவர் பேரில் கொண்டுள்ள விசுவாசத்தை உபயோகிப்பாயா-? உன் முழு இருதயத்தோடும்... சரி . கர்த்தர் அதை அருள்வாராக. அந்த ஸ்திரீக்கு ஏதோ கோளாறு உள்ளதைக் காண்கிறேன் - மருத்துவப் பரிசோதனை அவளுக்கு பிளவுண்ட வயிறு (ruptured stomach) உள்ளதாக காண்பித்தது. அது உண்மை - பிளவுண்ட வயிறு: அந்த பிளவை தேவனால் சுகமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறாயா-? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ இந்த இடத்தை சேர்த்தவளல்ல. இங்கு வருவதென்பது பெரிய தியாகமாக இருந்தது. நீ டென்னளியிலிருந்து வருகிறாய். இது உண்மை திருமதி ஹார்க்னெஸ், வீடு திரும்பு. சந்தேகப்படாதே. நீ விசுவாசித்தால் சுகமடைவாய். (ஆராதனை தொடர்ந்து நடக்கிறது.- ஆசி) *******